இடுகைகள்

டிஜிட்டல் டைரி - 13: புதிதாக வந்தாச்சு ‘ஏஐ’ தேடு பொறி!

படம்
இணைய உலகின் மிகப்பெரிய தேடு பொறி எது என்பதற்கான பதில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அது, ‘கூகுள்’. சரி, இரண்டாவது பெரிய தேடு பொறி எது எனத் தெரியுமா? இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஏனெனில், கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தும் தேடு பொறியாக இருப்பது ‘யூடியூப்’ என்று சொல்லப்படுகிறது. மைக்ரோசாஃப்டின் ‘பிங்’ அல்லது தனியுரிமை காக்கும் ‘டக்டக்கோ’ போன்றவற்றைப் பின்னுக்குத்தள்ளி ‘யூடியூப்’ இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. அதே நேரம், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில், இளம் தலைமுறையினர் கூகுளில் தேடுவதைவிட, ‘டிக்டாக்’ சேவையில் ஒரு விஷயத்தைத் தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘ஜூமர்ஸ்’ எனச் சொல்லப்படும் புத்தாயிரமாண்டு தலைமுறைக்கு அடுத்து வரும் தலைமுறையினரும் ‘டிக்டாக்’ தளத்தைத் தேடு பொறியாகப் பயன்படுத்தி வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Lates...

யூடியூப் வீடியோ சம்மரி முதல் ஆடியோ ஓவர்வியூ வரை: கூகுள் நோட்புக் புதிய அம்சங்கள்

படம்
நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கூகுள் நிறுவனத்தின் டூல் தான் ‘கூகுள் நோட்புக்LM’. அண்மையில் சில முக்கிய அப்டேட்களை இதில் அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த புதிய அம்சங்களின் மூலம் யூடியூப் வீடியோக்களை சுருக்கமான உரையாக பெறுவது முதல் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். கூகுள் நோட்புக்LM? இதில் கூகுள் பயனர்கள் தங்களது பிடிஎஃப் கோப்பு, கூகுள் டாக்குமெண்டுகள், வலைதள முகவரி, யூடியூப் வீடியோ லிங்குகள் மற்றும் பலவற்றை அப்லோட் செய்யலாம். அப்படி பதிவேற்றப்பட்ட கன்டென்ட்களின் முக்கிய விவரங்களை ரத்தின சுருக்கமாக வழங்கும் டிஜிட்டல் நோட்டு புத்தகம் தான் இந்த நோட்புக் எல்எம். பெரிய கோப்புகள் மற்றும் வீடியோக்களில் இருந்து முக்கிய விவரங்களை இது பயனர்களுக்கு வழங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5MbVUCY

விவோ வி40e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iLPNwd4

ஜான் சீனா குரலில் பேச உள்ள மெட்டா ஏஐ சாட்பாட்!

படம்
நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் அதன் பயனர்களுடன் நடிகைகள் ஜூடி டென்ச், கிறிஸ்டன் பெல், நடிகர் மற்றும் தொழில்முறை ரெஸ்லிங் வீரர் ஜான் சீனா ஆகியோரது குரலில் பேச உள்ளது. இது தொடர்பாக மெட்டா மற்றும் நடிகர்களின் தரப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/paCLVsj

ஐபோன் 16 புரோ போனில் டச் ஸ்க்ரீன் பிரச்சினை: பயனர்கள் புகார்

படம்
சென்னை: ஐபோன் 16 புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களில் டச் ஸ்க்ரீன் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ஆப்பிள் சாதனங்கள் குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் 9டு5 மேக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சர்வதேச சந்தையில் ஐபோன் 16 சீரிஸ் மாடல் போன்கள் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐபோன் 16 போன்கள் விற்பனை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vkp1FjJ

டிஜிட்டல் டைரி - 12: மீண்டும் வருகிறதா ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டு?

படம்
இணையத்தில் கவனம் ஈர்த்த இரண்டு முக்கியச் செய்திகளைப் பார்ப்போம். ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டுக்கு அறிமுகம் தேவையில்லை. ஏனென்றால், பத்தாண்டுகளுக்கு முன்பு இணையத்தைக் கலக்கிய விளையாட்டு இது. அறிமுகமான சில மாதங்களில் பிரபலமாகி, இணையத்தைச் சுற்றி வந்த இந்த விளையாட்டு, திடீரென காணாமல் போனது. பின்பு இணையவாசிகள் அந்த விளையாட்டை மறந்து போனார்கள். ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாடுவது எளிதாகத் தோன்றினாலும் இதில் முன்னேறுவது சவாலான காரியம். அதோடு இந்த விளையாட்டில் வெற்றி பெறுவதை எல்லாம் நினைத்துகூடப் பார்க்க முடியாது. குழாய் தடைகளின் மீது மோதாமல் பறவையை முன்னேற வைப்பது மிகவும் கடினம். விளையாட்டை வெல்லவும் முடியாமல், அதிலிருந்து விலகவும் முடியாமல் ஏராளமானோரைப் புலம்ப வைத்து இணையத்தில் வைரலானது. பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படியொரு வரலாற்றைக் கொண்ட ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டு பயனர்களின் உளவியல் மாற்றங்களைப் பற்றியும் விவாதிக்க வைத்தது. விளையாட்டின் இயற்பியல் அம்சங்களும் பேசுபொருளாகின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil New...

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wEHauGx