இடுகைகள்

இந்து தமிழ் திசை : News in Tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐ மெசேஜ் உள்ளிட்ட அனைத்து மெசஞ்சர்களையும் உள்ளடக்கிய ஆல்-இன்-ஒன் செயலி: சன்பேர்ட்

படம்
சென்னை: ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு உதவும் வகையில் ‘ஐ மெசேஜ்’ உட்பட அனைத்து மெசஞ்சர்களையும் உள்ளடக்கிய ஆல்-இன்-ஒன் செயலியான் சன்பேர்ட் மெசேஞ்சர் செயலி இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது. தற்போது இந்தச் செயலிக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. அண்மையில் இதன் பயன்பாடுகள் குறித்து சன்பேர்ட் தரப்பில் விளக்கப்பட்டது. ஆப்பிள் ஐபோன் பயனர்கள் மட்டுமே பிரத்யேகமாக பயன்படுத்தி வரும் ‘ஐ மெசேஜ்’ தளம் குறித்து அனைவரும் அறிந்திருக்கலாம். ஆப்பிள் நிறுவனத்தின் மேக், ஐபோன், ஐபாட் மற்றும் வாட்ச்களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். டெக்ஸ்ட் மெசேஜ், இமேஜ், வீடியோ, டாக்குமெண்ட், லொக்கேஷன் உட்பட அனைத்தையும் இதில் ஆப்பிள் சாதன பயனர்கள் பகிரவும், பெறவும் முடியும். இருந்தாலும் ஐ மெசேஜை மற்ற இயங்குதள (ஓஎஸ்) பயனர்களால் பயன்படுத்த முடியாது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இதை பயன்படுத்தும் வகையில் சில செயலிகளும் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.t...

ட்விட்டரில் ‘ப்ளூ டிக்' அங்கீகாரத்தை இழந்த பிரபலங்கள்: கோலி, ரஜினிகாந்த் மற்றும் பலர்!

படம்
சென்னை: ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தா செலுத்தாத பயனர்கள் அந்த அங்கீகாரத்தை இழந்துள்ளனர். இதில் உலக அளவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் பிரபலங்களும் அடங்கும். இந்தியாவில் விளையாட்டு, சினிமா, அரசியல் என பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பிரபலங்கள் சந்தா செலுத்தாத காரணத்தால் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர். அவர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம். ப்ளூ டிக் அங்கீகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு கடந்த வாரம் கெடு தேதி நிர்ணயித்திருந்தார் ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க். ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின்னர் சந்தா செலுத்தப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது சந்தா செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oWfutR

சாம்சங் கேலக்சி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எம்14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட்டில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் M சீரிஸ் வரிசையில் எம்14 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8DQRJsa

‘ஐபோன் 15’ அறிமுகத்திற்குப் பிறகு வேறுசில மாடல்களின் விற்பனையை நிறுத்த ஆப்பிள் முடிவு?

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kVnRGcI

Asus ROG போன் 7 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Asus நிறுவனத்தின் ROG போன் 7 சீரிஸ் அறிமுகமாகி உள்ளது. தற்போது இந்த சீரிஸில் இரண்டு போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே 5ஜி போன்களாகும். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். தைவானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் Asus. டெஸ்க்டாப் கம்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்களை இந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது. கடந்த 2018 முதல் Asus சார்பில் ROG சீரிஸ் போன்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ROG போன் 7 சீரிஸ் வரிசையில் ROG போன் 7 மற்றும் ROG போன் 7 அல்டிமேட் போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் கேமிங் பிரியர்கள் கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EQ2yqo6

10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யலாம்: ட்விட்டரில் புதிய அம்சம் அறிமுகம்!

படம்
சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தில் சுமார் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது குறித்து கடந்த மாதம் எலான் மஸ்க் பேசியிருந்தார். அப்போது அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமாக விளங்குகிறது ட்விட்டர் தளம். பயனர்கள் வழக்கமாக இதில் 280 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். ‘ட்விட்டர் ப்ளூ’ சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். இந்நிலையில், 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யும் புதிய அம்சம் இப்போது அறிமுகமாகி உள்ளது. மேலும், இந்த ட்வீட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/niy1NdY

பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ N55 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ N55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ரியல்மி நிறுவனத்தின் நார்சோ சீரிஸ் வரிசையில் இந்த போன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது நார்சோ N55 ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hKBjlc7

'4/20' சந்தா செலுத்தாத கணக்குகளின் ப்ளூ டிக் அகற்றப்படும் கெடு தேதி - மஸ்க் அறிவிப்பு

படம்
சான் பிரான்சிஸ்கோ: ப்ளூ டிக் அங்கீகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு கெடு தேதி நிர்ணயித்துள்ளார் ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க். அதாவது ஏப்ரல் 20-ம் (4/20) தேதிக்குப் பின்னர் சந்தா செலுத்திய கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் வணிக நோக்கில் ப்ளூ டிக் பெற்ற பயனர் கணக்குகளிடம் இருந்து சந்தா வசூலிப்பது. அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5rBUAyx

உலக பணக்காரர்கள் வறியவர்களாக இருந்தால் எப்படி இருக்கும்? - செயற்கை நுண்ணறிவு செய்த ஜாலம்

படம்
மைசூரு: இன்றைய டெக் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் ஜெனரேட்டிவ் ஏஐ பாட்களின் வருகைதான் இதற்கு மிக முக்கிய காரணம். படம் வரைய, கட்டுரை எழுத, தகவல்கள் தெரிந்து கொள்ள, கோடிங் அடிக்க என பல்வேறு வேலைகளை இந்த ஜெனரேட்டிவ் ஏஐ பாட்கள் சுலபமாக மேற்கொள்கின்றன. பலரும் இதன்மூலம் தங்கள் கற்பனைகளுக்கு உயிர் கொடுத்து வருகின்றனர். விண்வெளியில் குதிரையில் பயணிக்கும் விண்வெளி வீரர், சதுரங்கம் விளையாடும் ரோபோ என இணைய பயனர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்ப படங்களை ஏஐ துணைக் கொண்டு ஜெனரேட் செய்ய முடிகிறது. தற்போது இப்படி படம் உருவாக்குபவர்களை ஏஐ ஆர்ட்டிஸ்ட் என சொல்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4HS68yC

வளையங்களுடன் யுரேனஸ்... - ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படம்

படம்
வாஷிங்டன் : யுரேனஸ் கோளின் புகைப்படத்தை அதன் வளையங்களுடன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி SMACS 0723 விண்மீன் திரள், தெற்கு வளைய நெபுலா, ஸ்டிபன்ஸ் குவின்டெட், கரினா நெபுலா, வியாழன் ஆகியவற்றின் தெளிவான படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பியது. இந்த நிலையில், யுரேனஸ் புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி அனுப்பியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W2I8aQS

சிட்டாய் மீண்டு வந்த நீலக் குருவி: மீண்டும் ட்விட்டர் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்!

படம்
சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மீண்டும் பழைய படி நீலக் குருவியாக மாற்றி உள்ளார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான ‘Dogecoin’ லோகோவை ட்விட்டரின் லோகோவாக அவர் மாற்றி இருந்தார். மஸ்கின் இந்த செயலுக்கு பின்னர் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. Dogecoin நிறுவன முதலீட்டாளர்கள் அவர் மீது தொடுத்துள்ள வழக்கை திசை திருப்பும் நோக்கில் இதை செய்திருக்கலாம் என்பது அதில் முதன்மையானதாக இருந்தது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்தத் தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JZL...

‘உனது பெருந்துயரம் என்ன?’ - மனிதரைப் போல் முகபாவனைகளுடன் பதிலளித்து வியக்கவைத்த ரோபோ

படம்
லண்டன்: பிரிட்டரினின் இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த அமேகா என்ற பெயர் கொண்ட அதிநவீன ஹியூமனாய்ட் ரோபோ ஒன்று கேள்விகளுக்கு உணர்வுபூர்வமான பதில்களைக் கொடுத்து அனைவரையும் வியக்கவைத்துள்ளது. விடை மட்டுமல்ல, அதன் முகப்பாவனைகளும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அமேகா ரோபோவின், அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட சிலர் இந்த ரோபோ மனித குலத்திற்கே சவாலாக வருமோ என்ற கவலை ஏற்படுவதாக தெரிவித்தனர். அமேகாவை உருவாக்கிய நிறுவனத் தலைவர் வில் ஜேக்சன் 'டெய்லி ஸ்டார்' பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் "அமேகாவின் பேச்சுத் திறன் ஜிபிடி3 (GPT-3) தொழில்நுட்பத்தால் சாத்தியமாகியுள்ளது என்றார். அதனால் தான் உங்கள் கேள்விக்கு பதில் அமேகா தூண்டப்பட்டது. நாங்கள் ஜிபிடி4 தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளோம்" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JmXn4Bj

லெவல் கிராசிங்கில் திடீர் கோளாறை தவிர்க்க மதுரை - திண்டுக்கல் ரயில் பாதையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

படம்
மதுரை: மதுரை - திண்டுக்கல் ரயில் பாதை பிரிவில் கூடல் நகர் அருகிலுள்ள லெவல் கிராசிங்கில் (எல்சி எண் 358, பாப்பாகுடி கேட்) சிக்னல் இன்டர்லாக் செய்யப்பட்ட ஆக்சிலரி ஸ்லைடிங் பூம்கள் நிறுவப்பட்டுள்ளது. இவ்வசதி தொழில்நுட்பக் கோளாறு, வாகனங்களாலும் கேட்டிற்கு சேதம் ஏற்படும்போது கேட்டின் செயல்பாடு எளிமையாக்கப்படும் என, கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியது: இத்தொழில்நுட்பம் மதுரை கோட்டத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மதுரையில் - திண்டுக்கல் ரயில் பாதையில் மேலும் 6 லெவல் கிராசிங் கேட்களில் இந்த தொழில்நுட்பம் இன்னும் இரண்டு மாதங்களில் நிறுவப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/I7amTyW

நீல நிற குருவிக்கு பதிலாக நாய் படம்: ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்

படம்
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தற்போது ட்விட்டரின் அடையாளமான நீல நிற குருவி லோகோவையும் மாற்றியுள்ளார். அதற்கு பதிலாக அவர் நாய் படத்தை பதிவிட்டுள்ளார். இருப்பினும், ட்விட்டரின் மொபைல் ஆப் வெர்சனில் உள்ள லோகோவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லோகோவை மாற்றியதற்கான பின்னணியையும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி, டபிள்யூஎஸ்பிசி தலைவர் என்ற பெயரில் ட்விட்டரில் கணக்கு உருவாக்கியுள்ள ஒரு பயனாளர், "ட்விட்டரை வாங்கவும், பறவையின் சின்னத்துக்கு பதில் நாயை வைக்கவும்" என்று தனது பதிவில் தெரிவித்திருந்தார். அவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே லோகோவை மாற்றியதாக எலான் மஸ்க் கூறியுள்ளார் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m4lDix

ஒன்பிளஸ் முதல் விவோ வரை: ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள்!

படம்
சென்னை: உலகில் செல்போன் வடிவமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவாகி உள்ளது. இந்த சூழலில் நடப்பு ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். போக்கோ, ஒன்பிளஸ், அஸுஸ், விவோ, iQOO போன்ற முன்னணி நிறுவனங்களின் போன்கள் அறிமுகமாக உள்ளன. இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZQKtmvf

66.9 கோடி பயனர்களின் தரவுகள் விற்பனை: 11 நிறுவனங்களுக்கு சைபராபாத் காவல் துறை நோட்டீஸ்

படம்
சைபராபாத்: இந்தியாவின் 24 மாநிலங்கள் மற்றும் 8 பெருநகரங்களைச் சேர்ந்த சுமார் 66.9 கோடி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பயனர் தரவுகளை தட்டி தூக்கிய வினய் பரத்வாஜ் எனும் நபர், அதை திருடியாதோடு மட்டுமல்லாது தன் கைவசம் இருந்த தகவல்களை விற்பனையும் செய்துள்ளார். இணைய பயனர்களின் தனிப்பட்ட ரகசியத் தகவல்களை திருடிய குற்றத்திற்காக அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்களையும் திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எப்படி இவ்வளவு தரவுகள் கசிந்தது என்ற விசாரணையை சைபராபாத் போலீஸார் துவங்கியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மூன்று வங்கிகள், சமூக வலைதள நிறுவனம், பலசரக்கு விற்பனை செய்யும் நிறுவனம், ஐடி சேவை வழங்கும் நிறுவனம், டிஜிட்டல் பேமெண்ட் செயலி மற்றும் ஆன்லைன் இன்சூரன்ஸ் தளம் என மொத்தம் 11 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது காவல் துறை. ‘InspireWebz’ எனும் தளம் மூலம் கிளையண்ட்களுக்கு தரவுகளை கைதான வினய், விற்பனை செய்துள்ளார். வினய், தெலங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest T...

'லாக் சாட்’ வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: இதன் பயன் என்ன?

படம்
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தில் சாட்களை லாக் செய்யும் ‘லாக் சாட்’ அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Hcplrxw

சாட் ஜிபிடிக்கு தடை விதித்தது இத்தாலி

படம்
ரோம்: செயற்கை நுண்ணறிவில் அசாத்திய ஆற்றல் கொண்ட சாட் ஜிபிடிக்கு இத்தாலியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் வாக்கில் செயற்கை நுண்ணறிவு பெற்ற சாட் ஜிபிடி பாட் அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் இந்த பாட் குறித்த பேச்சு உலக அளவில் வைரலானது. கட்டுரை எழுதவும், கவிதை எழுதவும், கோடிங் எழுதவும் என எண்ணற்ற பணிகளை இந்த பாட் செய்யும். அண்மையில் இந்தியாவில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளி ஒருவரின் ஜாமீன் மனுவையும் சாட் ஜிபிடி பரிசீலித்து பதில் சொல்லி இருந்தது. இப்படியாக அதன் பயன்பாடு நீள்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4Vi05G9

ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபர் ஆனார் எலான் மஸ்க்!

படம்
சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபர் ஆகியுள்ளார் எலான் மஸ்க். இந்த தளத்தில் இதற்கு முன்னர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிக ஃபாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார் மஸ்க். ட்விட்டர் தளத்தில் படு ஆக்டிவாக இயங்கி வருபவர் மஸ்க். அவர் இந்த தளத்தில் பேசாத டாபிக் இல்லை. சமயங்களில் மற்ற பயனர்களின் ட்வீட்களுக்கும் பதில் கொடுப்பார். அதன் காரணமாக தற்போது சுமார் 13,30,98,701 ஃபாலோயர்களை கொண்டுள்ளார் மஸ்க். கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் 100 மில்லியன் ஃபாலோயர்களை மஸ்க் பெற்றார். மறுபுறம் ஒபாமா சுமார் 13,30,41,441 கொண்டுள்ளார். பெரும்பாலும் ப்ரொபஷனலாக மட்டுமே ட்விட்டர் தளத்தை அவர் பயன்படுத்துவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NFf0nTg

சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் உதவி; பொதுமக்கள் இழந்த ரூ.235 கோடி மீட்பு - மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

படம்
புதுடெல்லி: நாட்டில் சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ரூ.235 கோடியை உடனடியாக மீட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு சைபர் குற்றங்களைக் கையாள்வதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இணைய மோசடியால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகாரளிக்க கட்டணமில்லா உதவி எண் ‘‘1930” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் புகார்களை பதிவு செய்யும்போது அது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்வதற்கும், நடவடிக்கை மேற்கொள்வதற்கும் உதவியாக உள்ளது. இதுவரை 40,000 புகார்கள் எப்ஐஆர்-களாக மாற்றப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AFfBLO8