இடுகைகள்

இந்து தமிழ் திசை : News in Tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஒப்போ Find X9 புரோ மற்றும் Find X9 போன்கள் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gIYNLSb

எக்ஸ் தளம் முடக்கம் - தொழில்நுட்ப கோளாறு காரணமா?

படம்
அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. முன்பு ட்விட்டர் என அறியப்பட்ட பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த தளம் பயனர்களுக்கு செயலிழந்ததாகக் காட்டியது. இதையடுத்து, எக்ஸ் செயலிழந்துவிட்டதா என்ற கேள்வியை பிற சமூக வலைதள பக்கங்களில் பயனர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NeDVZFs

இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதை ப்ரீமியம் மாடல் போனாக சந்தையில் வெளியிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் 15 போன் அறிமுகமாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AhZcP8D

இந்திய பயனர்களுக்காக கூகுள் மேப்ஸில் புதிய அப்டேட்கள் அறிமுகம்!

படம்
சென்னை: அண்மையில் இந்திய கூகுள் மேப்ஸ் பயனர்களுக்காக முக்கிய அப்டேட்களை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது பயனர்களின் பயண திட்டத்தை சிறப்பாக அமைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏதேனும் ஒரு புதிய இடத்துக்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொகேஷனை பகிர்ந்தால் போதும் அட்ரஸ் இல்லா தெருக்களை கூட கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் மிகவும் பிரபலம். இந்தியாவில் தினந்தோறும் கூகுள் மேப்ஸில் 5 கோடிக்கும் மேற்பட்ட இடங்கள் குறித்து பல்வேறு மொழிகளில் சர்ச் செய்யப்படுவதாக தகவல். இதன் ஒட்டுமொத்த தூரம் சுமார் 2.5+ பில்லியன் கிலோ மீட்டர் என தகவல். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HP0Gz92

மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிற்பபு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lZ1V2iU

விவோ Y19s  ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y19s போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZAyqibv

பேசுவதை மொழிபெயர்க்கும் முதல் ஏஐ தொழில்நுட்பம்: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் உருவாக்கம்

படம்
ஜெய்ப்பூர்: பேசுவதை பேச்​சாக மொழி பெயர்க்​கும் உலகில் முதல் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தை, ஜெய்ப்​பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உரு​வாக்​கி​யுள்​ளார். ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ் அகர்​வால். வாராணசி பனாரஸ் இந்து பல்​கலைக்​கழக ஐஐடி மாணவர். இவர் பிக்ஸா என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறு​வனத்தை தொடங்​கி​னார். மனிதர்​கள் பேசுவதை போல் குரலை நேரடி​யாக மொழிபெயர்ப்பு செய்​யும் லூனா என்ற செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்தை இவர் உரு​வாக்​கி​யுள்​ளார். இது பேச்சு வடி​விலேயே விரை​வாக​வும், உணர்​வுபூர்​வ​மாக​வும் குரல் வடி​விலேயே மொழி பெயர்க்​கிறது. இதில் உள்ள தொழில்​நுட்ப கட்​டமைப்பு பேசும் தொனியை மாற்​ற​வும், பாட​வும் அனு​ம​திக்​கிறது. இது மனிதர்​களிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்​படுத்​துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mw56WsU

விமானம் செங்குத்தாக புறப்பட, இறங்க உதவும் புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை 

படம்
சென்னை: ​வி​மானம் செங்​குத்​தாக புறப்​பட​வும், தரை​யிறங்​க​வும் உதவும் புதிய தொழில்​நுட்​பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்​சி​யாளர்​கள் கண்​டு​பிடித்து சாதனை படைத்​துள்​ளனர். பொது​வாக விமானங்​கள் ஓடு​தளத்​தில் குறிப்​பிட்ட தூரம் விரை​வாக ஓடி அதன் பின்​னரே மேலே எழும்​பும். அதே​போல, வானில் இருந்து தரை​யிறங்​கும்​போதும் ஓடு​தளத்​தில் இறங்கி சற்று தூரம் சென்ற பின்​னரே குறிப்​பிட்ட இடத்தை வந்​தடை​யும். இந்த நிலை​யில், விமானம் செங்​குத்​தாக புறப்​பட​வும், தரை​யிறங்​க​வும் உதவும் புதிய தொழில்​நுட்​பத்தை (Vertical Take-off & Landing - VTOL) சென்னை ஐஐடி விண்​வெளி பொறி​யியல் துறை பேராசிரியர் பி.ஏ.​ராமகிருஷ்ணா, இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனத​ரா, ஆராய்ச்​சி​யாளர் அனந்து பத்​ரன் ஆகியோர் கண்​டு​பிடித்​துள்​ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LzNUHEX

விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்த எக்ஸ் ஏஐ: எலான் மஸ்க்கின் முயற்சி

படம்
கலிபோர்னியா: எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் Grokipedia என்ற தகவல் களஞ்சியத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏஐ திறன் கொண்டு இயங்கும் இந்த Grokipedia, விக்கிபீடியாவுக்கு மாற்று என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றைய இணைய உலகில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை இலவசமாக அறிந்துகொள்ள உதவுகிறது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியோ. சுமார் 65 மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், தமிழ் உட்பட சுமார் 343 உலக மொழிகளில் தகவல்கள் மற்றும் மாதந்தோறும் சுமார் 16 பில்லியன் வியூஸ் என விக்கிப்பீடியாவின் இயக்கம் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XqUKwOk

பட்ஜெட் விலையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R4tDqeb

ChatGPT Atlas: ஏஐ திறன் கொண்ட வெப் பிரவுசரை அறிமுகம் செய்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம்

படம்
சான் பிரான்சிஸ்கோ: ‘சாட்ஜிபிடி அட்லஸ்’ என்ற ஏஐ திறன் கொண்ட வெப் பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். இது கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசருக்கு நேரடி சவாலாக விளங்கும் என டெக் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட்டை வாரத்துக்கு சுமார் 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேலும் சில அம்சங்கள் மூலம் பயனர்களை தங்கள் வசம் ஈர்க்கும் வகையில் இந்த பிரவுசரை ஓபன் ஏஐ அறிமுகம் செய்துள்ளதாக தகவல். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1ge8Laf

உலக அளவில் முடங்கிய அமேசானின் AWS வெப் சேவை: இயல்புக்கு திரும்பியதாக தகவல்

படம்
சென்னை: அமேசான் நிறுவனத்தின் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உலக முடங்கிய நிலையில் தற்போது அது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் அமேசான் வெப் சர்வீசஸ் சேவையை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. சமூக வலைதளம், கேமிங் தளங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள், நிதி சேவை சார்ந்த செயலிகள் என பல்வேறு ஆன்லைன் தளங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன. ஸ்னாப்சேட், Venmo, பின்ட்ரஸ்ட், ஆப்பிள் டிவி, ரெட்-இட், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XtkP4Wz

‘ஏஐ இன்னவேஷன் ஹப்’ தொடங்க தமிழக அரசு திட்டம்: பழனிவேல் தியாகராஜன் தகவல்

படம்
கோவை: ‘ஸ்டார்ட் அப்’ துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் வகையிலும் 2 லட்சம் சதுரஅடி பரப்பில் ‘ஏஐ இன்னவேஷன் ஹப்’ தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளடக்கிய (ஸ்டெம்) துறைகளில் தேசிய அளவிலான திறனில் தமிழ்நாடு 18 முதல் 20 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KGDpqW9

இந்திய அளவில் சாட்ஜிபிடி, ஜெமினியை பின்னுக்குத் தள்ளிய பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ!

படம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ சாட்ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட செயலிகளை பின்னுக்குத் தள்ளி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனம் தயாரித்த ‘அரட்டை’ செயலி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. வாட்ஸ்-அப் செயலிக்கு மாற்றாக பலரும் இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9zH5ts1

ஏவுகணை நாயகர் கலாம்!

படம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றிய பிறகு இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) பணியாற்றும் வாய்ப்பு அப்துல் கலாமுக்குக் கிடைத்தது. இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் ‘ஒருங்கிணைந்த வழிகாட்டு ஏவுகணை மேம்பாட்டுத் திட்ட’த்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அவர் பொறுப்பேற்றார். இந்தத் திட்டத்தின்கீழ் ‘அக்னி’, ‘பிரித்வி’ ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இஸ்ரோவில் பணியாற்றியபோது உள்நாட்டு ஏவூர்திகளின் தயாரிப்புக்காக இந்தியாவின் பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகளை அவர் ஒருங்கிணைத்திருந்தார். இந்தியப் பாதுகாப்புக்கான பணியை ஏற்றபோது இது அவருக்கு உதவியாக இருந்தது. பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைத்து உள்நாட்டிலேயே பேரிடர்காலத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தக் காரணமாக இருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wfyjgE3

இந்தியாவில் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a3nw42X

பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்சி எம்17 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: சாம்சங் நிறுவனம் அதன் பட்ஜெட் செக்மென் போன் வரிசையில் கேலக்சி எம்17 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DA8J9BG

ஹெச்எம்டி நிறுவனத்தின் ‘டச் 4ஜி’ ஹைபிரிட் போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: ஹெச்எம்டி நிறுவனம் இந்தியாவில் ‘டச் 4ஜி’ போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். பின்லாந்து நாட்டை சேர்ந்த ஹியூமன் மொபைல் டிவைசஸ் (ஹெச்எம்டி குளோபல்) நிறுவனம் மொபைல் போன்களை உற்பத்தி செய்து உலக அளவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த 2016 முதல் நோக்கியா பிராண்டில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன்களை விற்பனை செய்து வந்தது இந்த நிறுவனம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GT14H5S

விவோ வி60e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ நிறுவனத்தின் வி60e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TQxrD9G

வாட்ஸ்-அப்பில் பயனர்களை கவரும் புதிய அப்டேட்கள்: அரட்டை செயலியின் தாக்கம் காரணமா?

படம்
சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xXImlQ3