இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கட்டுமான பொருட்கள் தர ஆய்வுக்கு பரிசோதனை கூடம்: அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

படம்
நெடுஞ்சாலைத் துறை பணிகள் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தார். இதில் அவர் பேசியதாவது: கேளம்பாக்கம், திருப்போரூர் புற வழிச்சாலைப் பணி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டு மானங்களை நீக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை விரைவாக அமைக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BxFhJH

பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு: 2 அமைச்சர்கள் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு

படம்
சென்னை மாநகராட்சி 131-வது வார்டுக்கு 2005 ஏப்ரல் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, கே.கே.நகரில் உள்ள வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, தேர்தல் அலுவலரிடம் இருந்து முத்திரையைப் பறித்துச் சென்றதாகவும், அதை தட்டிக்கேட்ட தன்னை துரத்தி, தனது காரை சேதப்படுத்தி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் அதிமுகவைச் சேர்ந்த சந்தோஷ் கே.கே.நகர் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், தற்போது அமைச் சர்களாக உள்ள மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோருக்கு எதிராக, பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3GFZUHA

பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.694 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

படம்
தமிழகத்தில் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள், அலுவலகக் கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில், உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 2016-ல் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EzvF2O

கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

படம்
சென்னையில் வேளச்சேரி மற்றும் கோயம்பேடு மேம்பாலங்களைக் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அவற்றை திறந்து வைக்கவுள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம், ரூ.93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலப் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Cvg18f

கர்நாடக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

படம்
கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக உள்ள விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி, ஹாவேரி மாவட்டம் ஹனகல் ஆகிய 2 தொகுதிகளில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான‌ காங்கிரஸ், மஜத ஆகியவை தனித்தனியாக போட்டியிடுகின்றன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பசவராஜ் அனைத்து அமைச்சர்களையும் களத்தில் இறக்கினார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரும், மஜத வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nHYxiS

கைலாசநாதர், கரிவரதர் கோயில்களில் புதிய குளம்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

படம்
சென்னை மாதவரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். கோயில்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாதவரம் கைலாசநாதர், கரிவரதராஜப் பெருமாள் கோயில்களில் பக்தர்கள், இறையன்பர்களுக்கு வசதியாக என்னஅடிப்படை தேவைகளை நிறைவேற்றலாம் என்பது பற்றி ஆலோசித்தோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mBO2OR

சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் புதிய ரேடார் செயல்படத் தொடங்கியது

படம்
சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் புதிய ரேடார் பள்ளிக்கரணையில் நேற்று செயல்படத் தொடங்கியது. மழை மேகங்களின் தன்மை,நகர்வு, மழை அளவு போன்றவற்றை ரேடார் மூலம் கிடைக்கும் தரவுகள் மூலம் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது. ரேடார்களில் இருந்து செலுத்தப்படும் மின் காந்த அலைகள் மூலமாகக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு, குறுகியகால வானிலை முன்னறிவிப்பு, நிகழ்நேர மழை நிலவரம் போன்றவற்றை ஆய்வு மையத்தால் வழங்க முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Y5OSda

தமிழக அரசுக்கு தெரிந்துதான் பெரியாறு அணை திறக்கப்பட்டதா?- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

படம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியாறு அணை முதல் முறையாக தமிழக அரசின் அனுமதி பெறாமல் கேரள அரசால் திறந்துவிடப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மாநில அரசுக்கு தெரிந்துதான் இது நடந்ததா? அனுமதி பெற்றுத்தான் செய்தனரா என்று தெரியவில்லை. அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டும்போது அவசரமாக திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் எங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர். இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூற வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CxSGTd

நெருக்கடி காரணமாக பதவியை ராஜினாமா செய்த கடையம் ஒன்றிய குழு தலைவரிடம் ரூ.1 கோடி கேட்டதாக சர்ச்சை: எஸ்பி.யிடம் மாவட்ட திமுக பொறுப்பாளர் புகார்

படம்
நெருக்கடி காரணமாக பதவியை ராஜினாமா செய்த கடையம் ஒன்றியக் குழு தலைவர் செல்லம்மாள், தன்னிடம் திமுக மாவட்டப் பொறுப்பாளர் ரூ.1.10 கோடி கேட்டதாக கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் போலீஸில் புகார் அளித்தார். தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில், திமுக சார்பில் 11 பேர், அதிமுக சார்பில் 5 பேர்,காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றிபெற்றனர். திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக, ஜெயக்குமார் என்பவரை தேர்ந்தெடுக்குமாறு, திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. கடந்த 22-ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் திமுகவைச் சேர்ந்த செல்லம்மாள் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZNALtD

பேருந்து நிலையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்; தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

படம்
தீபாவளியை முன்னிட்டு தமிழகம்முழுவதும் நாளை (நவ. 1) முதல்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறைஅமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nJK9Xh

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 7-ம் கட்ட மெகா முகாமில் 17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

படம்
தமிழகம் முழுவதும் நடந்த 7-வது கட்ட மெகா முகாமில் 17.14 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, 5 கட்டங்களாக முகாம்கள் நடத்திதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XYh0yC

நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

படம்
தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் 7-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாயகம் கவி, அசன் மௌலானா ஆகியோர் உடனிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZFuz6s

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரை இலக்கை தாக்கும் அதிநவீன வெடிகுண்டு பரிசோதனை வெற்றி

படம்
விமானத்தில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் தரை இலக்கை தாக்கும் அதிநவீன வெடிகுண்டு பரிசோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கவல்ல வெடிகுண்டுகளை ஹைதரா பாத்தில் உள்ள டிஆர்டிஓ-வின் இமாரத் ஆராய்ச்சி மையம் அண்மையில் உருவாக்கியது. இந்த வெடிகுண்டு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயா ரிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZCojMO

உ.பி. ஆக்ராவில் இயங்கி வந்த போலி உரத் தொழிற்சாலை: தமிழகத்துக்கும் விநியோகித்ததாக தகவல்

படம்
பாஜக ஆளும் உ.பி.யில் சமீப காலமாக உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரம் பெறுவதற் காக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. உரம் கிடைக்காததால் லலித்பூரில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து மாநிலம் முழுவதிலும் உர விநியோகம் மீது தீவிர கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இச்சூழலில், புகாரின் அடிப் படையில் நேற்று ஆக்ராவின் ரஹன்காலா பகுதியில் போலீஸார் உதவியுடன் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி னர். இதில், போலி உரம் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த இயந்திரங் கள், 30 குவிண்டால் போலி உரம், 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.போலி உரத்தை ரூ.50 செலவில் தயாரித்து ரூ.1,000-க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vZZlmQ

பெட்ரோலில் லாபம் பார்க்கும் தொழிலதிபர்கள்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் குற்றச்சாட்டு

படம்
கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அம்மாநிலத்தில் ராகுல் காந்தி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வெல்ஸோ கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் உணவுப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்றைக்கு கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. அப்படி இருந்தும் கூட, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பிரதமருக்கு நெருக்கமான 4 முதல் 5 தொழிலதிபர்களே லாபம் அடைகிறார்கள் என்பது தெரியவரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3boyXK3

ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு வழங்க மத்திய அரசு திட்டம்: வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் உறுதிப்படுத்த முடியும்

படம்
ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு (டிஏசி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் முகவரியை சுலபமாக உறுதிப்படுத்த முடியும். இந்த குறியீட்டை வைத்து சொத்து வரியை சுலபமாக செலுத்துவது முதல் இணையவழியில் பொருட் களை வாங்குவது வரை பயன் படுத்தலாம். இப்போது முகவரிக்கான ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள முகவரியை மின்னணு முறையில் உறுதிப்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக நாட்டில் உள்ள அனைத்து முகவரியையும் புவியியல் ரீதியாக மின்னணு முகவரி குறியீடாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு முகவரி யையும் இணையதளம் மூலம் உறுதிப்படுத்த முடியும். இந்தக் குறியீடை உருவாக்கும் பணியில் அஞ்சல் துறை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டுள்ள அஞ்சல் துறை, பொதுமக்களின் கருத்தை கோரியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3...

காஷ்மீர் தால் ஏரியில் மிதக்கும் திறந்தவெளி திரையரங்கம் தொடக்கம்

படம்
காஷ்மீரின் தால் ஏரியில் இருக்கும் படகு வீடுகள் உலகப் புகழ்பெற்றவை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு வீடுகளில் தங்கி இயற்கை அழகை ரசிக்க தவறுவதில்லை. இந்நிலையில் தால் ஏரியில் உள்ள ஒரு படகு வீட்டில் திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியுள்ளனர். காஷ்மீரிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட மிதக்கும் திறந்தவெளி திரையரங்கம் இதுதான். ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலர் அருண் குமார் மேத்தா அண்மையில் இதை தொடங்கி வைத்தார். முதல் நாளில் இந்திப் படமான காஷ்மீர் கி காளி திரைப்படம் சுற்றுலாப் பயணிகளுக்காகவும், தால் ஏரி பகுதி மக்களுக்காகவும் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் என்றும், இங்கு சுற்றுலா மேம்படும் என்று ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை செயலர் சர்மத் ஹபீஸ் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Y47lXw

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

படம்
முல்லை பெரியாறு அணையில் மேலும் ஒரு மதகு திறக்கப்பட்டு கூடுதல் நீர் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஏற்கெனவே 2 மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேலும் 1 மதகு திறக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் கேரளப் பகுதிக்கு நீர் திறக்கப்பட்டது. அணையில் உள்ள 13 மதகுகளில் 3 மற்றும் 4-வது மதகுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 514 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அன்று இரவு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 825 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mtCmNI

மாரடைப்புக்கு வழிவகுக்கும் கடும் உடற்பயிற்சி: 2 இளம் நடிகர்களின் உயிரை பறித்த ‘ஃபிட்னஸ் விருப்பம்’

படம்
கன்னட திரையுலகில் ‘ஃபிட்னஸ் ப்ரிக்' ஆக இருந்த நடிகர்கள் சிரஞ்சீவி சர்ஜா, புனித் ராஜ்குமார் ஆகிய இருவரும் உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நடிகர் அர்ஜூனின் அக்கா மகன்சிரஞ்சீவி சர்ஜா (36), கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரைபரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலே சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Evrqpg

பல்கலை.யில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்: துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

படம்
தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, கடந்த செப்.18-ம்தேதி பதவியேற்றார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பும் ஆளுநர் வசமுள்ளது. அதன்படி அனைத்து பல்கலை.களின் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடல்கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவிதலைமையில் நடந்த இக் கூட்டத்தில் உயர்கல்வித் துறையின்கீழ்உள்ள பல்கலை.களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CqHNCN

புனித் ராஜ்குமாரின் உடலுக்கு லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது

படம்
மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் (46) உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் உட்பட லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார்(46) நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது விருப்பப்படி உடனடியாக கண்கள் தானம்செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jMTFYz

உ.பி.யில் சிறுவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்

படம்
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சக மாணவனை கடித்த சோனு யாதவ் என்ற 2-ம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா அழைத்து கண்டித்துள்ளார். பிறகு சக மாணவனிடம் மன்னிப்பு கேட்குமாறு சோனுவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் சோனு மன்னிப்பு கேட்காததால் ஆத்திர மடைந்த தலைமை ஆசிரியர் அச்சிறுவனை தரதரவென்று பள்ளி மேல் தளத்துக்கு இழுத்துச் சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BsB4XL

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து விளக்கம்; முதல்வரின் பொறுப்புணர்வு மெச்சத்தக்கது: இந்திய கம்யூ. கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் பாராட்டு

படம்
தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து உரிய விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலினின் பொறுப்புணர்வு மெச்சத்தக்கதாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vZWIBx

கல்லூரி மாணவியை கொன்ற இளைஞருக்கு அதிக தண்டனை கிடைக்க நடவடிக்கை: டிஜிபி அலுவலகத்தில் பெற்றோர் வலியுறுத்தல்

படம்
தாம்பரம் ரயில் நிலையம் அருகே மகளைக் கொன்ற இளைஞருக்கு, அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். சென்னை குரோம்பேட்டை பாரதிபுரத்தைச் சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(20). தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ லேப் டெக்னீஷியன் இரண்டாமாண்டு படித்து வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jQx8tQ

பட்டாசு காயங்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

படம்
பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பட்டாசுகளால் ஏற்படும் காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவசர சிகிச்சை மையங்களில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எதிர்பாராத விபத்துகள் தொடர்பான தகவல்களை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jRVfZ7

`இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலி- வேளாண் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் உறுதி

படம்
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை வகித்தார். இதில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். நேற்று (அக்.29) வெளியான `இந்து தமிழ்' நாளிதழில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விவசாய சாகுபடி பரப்பு குறைந்தது தொடர்பான செய்தி வெளியாகியிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mqq20H

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்

படம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரியிடம் அரசியல்கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வரும் நவ.1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, நவ.1-ம் தேதி வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுதவிர, நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய 4 நாட்கள் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Evu0LW

அயோத்தி ராமர் கோயிலுக்காக இலங்கை அசோக வனத்தின் கல், செடிகள் ஒப்படைப்பு

படம்
இலங்கையின் அசோக வனத்தி லிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்காக கொண்டு வரப்பட்ட கல் மற்றும் செடி அதன் அறக்கட்டளை தலைவரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ராமர் கோயில் கட்டப்படுகிறது. இந்நிலையில் இலங்கை மன்னன் ராவணன், அசோக வனத்தில் சீதையை சிறை வைத்திருந்ததாக ராமாயண காவியத்தில் பதிவாகி உள்ளது. எனவே அசோக வனத்தின் முக்கியத்துவம் கருதி, அங்கிருந்து கல் மற்றும் செடி அயோத்தி ராமர் கோயிலில் பயன்படுத்துவதற்காக அளிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pPNExT

24 காரட் சொக்கத் தங்கம் பிரதமர் மோடி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

படம்
புதுடெல்லி: ‘மத்திய அரசின் தலைவராக மோடியின் 20 ஆண்டுகள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் டெல்லியில் நடந்தது. இதில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் மோடி ஒரு உண்மையான தலைவர். 24 காரட் சொக்கத் தங்கம் போன்றவர். அர்ப்பணிப்பிலும், ஒருங்கிணைப்பிலும் அவருக்கு நிகர் யாரும் இல்லை. குஜராத் முதல்வராகவும் இந்தியாவின் பிரதமராகவும் 20 ஆண்டுகளாக அரசின் தலைவராக மோடி இருக்கிறார். அவர் மீது ஒரு ஊழல் கறை கூட கிடையாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EoukMc

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரோம் நகருக்கு சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் பிரான்சிஸை சந்திக்க திட்டம்

படம்
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற் பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி சென்றுள்ளார். வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்து பேசவும் மோடி திட்டமிட்டுள்ளார். இத்தாலி தலைநகர் ரோம் நகரில் 16-வது ஜி20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vVSD12

இந்திய கப்பல் படைக்காக தயாரித்த போர்க்கப்பல் ரஷ்யாவில் வெள்ளோட்டம்

படம்
இந்திய கப்பல் படைக்காக தயாரிக்கப்பட்ட, துஷில் போர்க்கப்பல் ரஷ்யாவில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்திய பாதுகாப்புப் படைகளை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி, கப்பல் படையில் இந்தியபோர்க்கப்பல்களுக்கு கவசமாகவும் பாதுகாப்பும் அளிக்கக் கூடிய 4 போர்க் கப்பல்களை வாங்க ரஷ்யாவிடம் கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, 4 பி1135.6 ரக அதிநவீன போர்க் கப்பல்கள் தயாரிக்க முடிவானது. அவற்றில் 2 கப்பல்கள் ரஷ்யாவிலும் 2 கப்பல்கள் இந்தியாவிலும் தயாரிக்கப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EtwWIL

ஒரே செடியில் கத்தரிக்காய், தக்காளி

படம்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத் தின் வேளாண் விஞ்ஞானிகள் கலப்பின முறையில் ஒரே செடியில் கத்தரிக்காய் மற்றும் தக்காளியை வளர்த்து புதிய சாதனை செய்துள்ளனர். கத்தரிக்காயின் ஆங்கிலப் பெயரான ‘பிரிஞ்சால்’, தக்காளியின் ஆங்கிலப் பெயரான ‘டொமாட்டோ’ ஆகியவற்றை இணைத்து இந்தச் செடிக்கு ‘பிரிமாட்டோ’ என்று பெயர் வைத்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZFc0zG

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: பெண்களுக்கு கழுத்தில் அணியும் துணிக் கவசம் அறிமுகம்

படம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தியாகராயநகரில் நகை பறிப்பைத் தடுக்க, பெண்களுக்கு கழுத்தில் அணியும் பிரத்யேக வடிவமைப்புடன் கூடிய துணிக் கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை வரும் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Y1kJM0

மறைந்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

படம்
மதுரையில் மறைந்த மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன்உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்அஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும், முன்னாள் எம்எல்ஏவும், ‘மேடை கலைவாணர்’ என்றழைக்கப்பட்ட என். நன்மாறன்(74) மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள பாஸ்டீன் நகரில் வசித்து வந்தார். இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் நேற்று முன்தினம் காலமானார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mrp04H

தமிழக நீர் திறப்பு உரிமையை மீறி முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு தண்ணீர் திறப்பு: பாசன நீர் கடலுக்கு செல்வதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு

படம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர் திறப்பு, பராமரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. 1979-ம்ஆண்டு இருமாநிலங்களும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இப்பிரச்சினை உச்சநீதிமன்றம் சென்றது. 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம்,142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றுதீர்ப்பளித்ததுடன் அணையை கண்காணிக்க மூவர் குழுவையும் நியமித்தது. இருப்பினும் கேரளாஅணை குறித்து பல்வேறு சர்ச்சைகளை கூறி நிர்ணயித்தஅளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் செய்து வருகிறது. இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு 2014, 2015, 2018 என மூன்று முறை மட்டுமே 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZAHiIk

பருவமழை தொடங்கியதால் நடப்பு ஆண்டு சீஸன் நிறைவு- தூத்துக்குடி மாவட்டத்தில் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி

படம்
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு சீஸன் முடிவுக்கு வந்துள்ளது. நடப்பு ஆண்டில் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XWPodd

கோயில் அறங்காவலர் பதவிகளுக்கு தகுதியானவரை விண்ணப்பிக்க செய்வோம்: பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வேண்டுகோள்

படம்
திருக்கோயில் அறங்காவலர் பதவிகளுக்கு, தகுதியான நபர்களை விண்ணப்பிக்க வைக்கவேண்டும் என்று பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாஜக தொண்டர்களுக்கு அவர் நேற்றுஎழுதிய கடிதம்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nHBa91

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்: முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு; கண்ணீரில் மூழ்கிய கர்நாடக மக்கள்

படம்
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகர் புனித் ராஜ்குமார் (46) மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு,கர்நாடக மக்களையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கன்னட திரைப்பட ரசிகர்களால் ‘அப்பு’ என்றும், ‘பவர் ஸ்டார்’ என்றும்அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த மறைந்த ராஜ்குமாரின் இளைய மகனாவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Gu3dS1

தேவரின் 114-வது ஜெயந்தி குருபூஜை விழா; பசும்பொன்னில் தலைவர்கள் குவிகின்றனர்: முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்

படம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று அரசியல் விழா நடைபெற்றது. இதையொட்டி சசிகலா மதுரையிலிருந்து வேனில் புறப்பட்டு பசும்பொன் வந்தார். பகல் 1.27 மணிக்குதேவர் நினைவிடம் வந்த அவரைபோலீஸார் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேவர் நினைவிடம் முன்அமர்ந்து தியானம் செய்தார்.தொடர்ந்து தேவர் வாழ்ந்த இல்லம், தேவரின் வாழ்க்கை வரலாறுஅடங்கிய புகைப்பட கண்காட்சியை சசிகலா பார்வையிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3GBXZ6M

மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் இந்தியன் வங்கி தொடர்ந்து செயல்படும்: செயல் இயக்குநர் ஷெனாய் விஸ்வநாத் உறுதி

படம்
மக்களின் நம்பிக்கைக்கு உரிய வங்கியாக இந்தியன் வங்கி தொடர்ந்து செயல்படும் என்று அதன் செயல் இயக்குநர் ஷெனாய் விஸ்வநாத் தெரிவித்துள்ளார். அக்.26 முதல் நவ.1-ம் தேதிவரை ஊழல் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியன் வங்கியும் ‘இந்து தமிழ் திசையும்’ இணைந்து ‘75-ம்ஆண்டில் சுதந்திர இந்தியா: நேர்மையுடன் கூடிய தற்சார்பு’ என்ற தலைப்பில் இணைய கருத்தரங்குக்கு நேற்று ஏற்பாடு செய் திருந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nAwt0I

7-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 50 ஆயிரம் இடங்களில் இன்று நடக்கிறது

படம்
தமிழகத்தில் 7-வது கட்டமாக இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசிசெலுத்தக்கூடாது என்ற தவறான தகவல் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அதன்படி, கடந்த 23-ம் தேதி 6-வது கட்ட முகாம் நடந்தது. இந்நிலையில், 7-வது கட்ட மெகா முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mohK9M

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோவை 60 நாட்கள் பாதுகாக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

படம்
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை, முடிவுகள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்கள் வரை பாதுகாக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நசீம்பி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமனுவில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mpqvjV

பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுவோர் மீது தேசதுரோக வழக்கு பாயும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

படம்
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்ற பாகிஸ்தான் அணியைப் புகழ்ந்தாலோ அல்லது அந்த அணியின் வெற்றியைக் கொண்டாடினாலோ கொண்டாடுவோர் மீது தேசதுரோக வழக்குப் பாயும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோல்வி அடைந்து 13-வது முறையில் முதல் வெற்றியைப் பெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vUylVF

இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜக வலுவாக இருக்கும்; மோடியை நீக்கலாம்; பாஜகவை நீக்க முடியாது: பிரசாந்த் கிஷோர் கணிப்பு

படம்
இந்த நாட்டில் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜக வலுவான, சக்தியுள்ள கட்சியாக இருக்கும். மோடியை வேண்டுமானால் மக்கள் நீக்கலாம், பாஜகவை நீக்க முடியாது. பாஜகவுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு நாம் போராட வேண்டியதிருக்கும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதற்காகப் பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jKKTub

இந்தியாவில் புதிதாக மேலும் 16,156 பேருக்கு கரோனா தொற்று: 733 பேர் பலி

படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,156 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 733 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pILr7D

ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்த கிரண் கோஸாவி கைது: புனே போலீஸார் தகவல்

படம்
போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்த கிரண் கோஸாவி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முக்கிய சாட்சியாகக் கருதப்படுகிறார். மும்பையிலிருந்து கோவா செல்லும் சொகுசுக் கப்பல் ஒன்றில் ரகசியமாய் நடைபெற்ற விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான நபர்களில் ஆர்யன் கானும் அடங்குவார். ஷாருக் கானின் பிரபலம் காரணமாக ஆர்யன் கைது விவகாரம் பெரிதானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nGd4LI

2013-ல் நரேந்திர மோடி பொதுக்கூட்ட மைதானத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேர் குற்றவாளிகள்: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

படம்
கடந்த 2013-ம் ஆண்டு பாட்னாவில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2013-ல் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுவதற்கு முன், மைதானப் பகுதியில் 6 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 90 பேர் காயம் அடைந்தனர். அருகில் உள்ள ரயில் நிலையத் திலும் குண்டு வெடித்தது. அங்கிருந்த வெடிக்காத 4 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Bpkbgr

மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார்: எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்

படம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 72. மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன். மதுரை கிழக்குத் தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று 2 முறை எம்எல்ஏவாகப் பதவி வகித்துள்ளார். இவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mk5wyW

ஓபிஎஸ் கருத்து: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

படம்
சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்ததற்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, மீண்டும் கட்சியில் இணைவதில் ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Cpk4D3

கூட்டுறவு வங்கிகளில் ரூ.15 கோடி நகைக் கடன் மோசடி: அமைச்சர் ஐ.பெரியசாமி

படம்
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் 30 சதவீதம் மட்டுமே நகை மோசடி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 15 கோடி நகைக் கடன் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், இன்று (அக். 28) சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி. ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி வரவேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pMbV85