இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இத்தாலியில் டீப்சீக் ஏஐ பயன்பாட்டுக்கு தடை - பின்னணி என்ன?

படம்
மிலன்: சீன தேசத்தின் ஏஐ சாட்பாட் ‘டீப்சீக்’ பயன்பாட்டை இத்தாலி முடக்கி உள்ளது. பயனர்களின் தரவை பாதுகாக்கும் நோக்கில் இந்த நகர்வை கையில் எடுத்துள்ளது இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம். அதுமட்டுமல்லாது டீப்சீக் சாட்பாட் பின்னணியில் உள்ள நிறுவனங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டீப்சீக் பயன்படுத்தும் பயனர்களிடம் இருந்து என்ன மாதிரியான தரவுகள் சேகரிக்கப்படுகிறது, அது எங்கு சேமிக்கப்படுகிறது மற்றும் அது குறித்த அறிவிப்பு பயனர்களுக்கு எப்படி தெரிவிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் டீப்சீக் சாட்பாட் வடிவமைப்பாளர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக கிடைத்த பதில், தரவு பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுவே இந்த முடக்கத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MJFQ5UP

பெண்கள் பாதுகாப்புக்கு செயலி​யுடன் இணைந்த காலணி: உத்தர பிரதேச மாணவர்கள் சாதனை

படம்
லக்னோ: பெண்​களின் பாது​காப்​புக்கு எஸ்ஓஎஸ் எச்சரிக்கை அனுப்பும் வகையில் காலணி ஒன்றை உத்தர பிரதேச மாணவர்கள் உருவாக்கி​யுள்​ளனர். பெண்​களின் பாது​காப்​புக்கு கடந்த 20 ஆண்டு​களில் பெப்பர் ஸ்பிரே, ரேப் விஷில், டாக்​சி​யில் எஸ்ஓஎஸ் பட்டன் என ஏராளமான பாதுகாப்பு பொருட்கள் அறிமுகப்​படுத்​தப்​பட்​டுள்ளன. தற்போது புதுமை கண்டு​பிடிப்பாக பாது​காப்பு அம்சத்​துடன் கூடிய செருப்பை பள்ளி மாணவர்கள் உருவாக்கி​யுள்​ளனர். உத்தர பிரதேசத்​தின் மகாராஜ்கன்ஜ் மாவட்​டத்​தில் உள்ள ஆர்பிஐ சி பள்ளி​யில் பயிலும் அம்ரித் திவாரி, கோமல் ஜெய்ஸ்​வால் என்ற மாணவர்கள் இந்த காலணியை தயாரித்​துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RC7feQA

அமெரிக்க ஜாம்பவான்களை ஆட்டம் காண வைத்த ‘DeepSeek’ நிறுவனர் - யார் இந்த லியான் வென்ஃபெங்?

படம்
சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா, க்ரோக் ஆகிய ஏஐ அசிஸ்டன்ட்கள் வரிசையில் தற்போது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது டீப்சீக் (DeepSeek). டீப்சீக் தொடங்கப்பட்டு 20 மாதங்களே ஆகின்றன. ஆனால் தனது புரட்சிகரமான AI அசிஸ்டன்ட் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், ஏஐ-க்கான புதிய அணுகுமுறையுடன் உலக சந்தையையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கெனவே செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன. இந்த சூழலுக்கு நடுவே டீப்சீக்கின் வெற்றி அதன் நிறுவனர் லியாங் வென்ஃபெங்கை பெரும் புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YW3tZ7T

‘DeepSeek’ AI - உலக அளவில் கவனம் ஈர்க்கும் சீன தேச ஏஐ அசிஸ்டன்ட்

படம்
சென்னை: உலக அளவில் புது பாய்ச்சலோடு பயனர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது சீன தேச ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக்கின் ஏஐ அசிஸ்டன்ட். இப்போதைக்கு ஏஐ உலகில் அதிகம் பேசப்படும் ஏஐ அசிஸ்டன்ட்டாக இது உள்ளது. கடந்த 2023-ல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் இதன் தாய் நிறுவனமாகும். சீன தொழிலதிபர் லியாங் வென்ஃபெங் தான் இதன் நிறுவனர். இந்த சூழலில் ஏஐ உலகில் முன்னோடியாக உள்ள சாட்ஜிபிடி-யை அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது டீப்சீக். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mDOT3hE

ChatGPT சேவை உலக அளவில் முடக்கம்: லட்சக்கணக்கான பயனர்கள் தவிப்பு

படம்
சென்னை: உலக அளவில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை முடங்கியுள்ள காரணத்தால் மில்லியன் கணக்கான பயனர்கள் அந்த சேவையை பயன்படுத்த முடியாமல் தவிப்பு. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண தங்கள் தொழில்நுட்ப குழு பணியாற்றி வருவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. பல்வேறு இணையாதள சேவை முடக்கம் குறித்த தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கி வரும் டவுன் டிடெக்டர் தளத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் ரிப்போர்ட் செய்துள்ளனர். சாட்ஜிபிடி வலைதளம் மற்றும் ஏபிஐ சேவையை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் செயலி வடிவில் சாட்ஜிபிடி-யை மொபைல் போனில் பயன்படுத்த முடிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/veW4fCr

சாம்சங் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் சாம்சங் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு கேலக்சி எஸ்25+ மற்றும் கேலக்சி எஸ்25 அல்ட்ரா மாடல் போனும் வெளிவந்துள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37RyabG

வாட்ஸ்அப் கணக்கை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உடன் இணைக்கலாம்

படம்
சென்னை: வாட்ஸ்அப் மெசஞ்சரை மெட்டாவின் பிற சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுடன் லிங்க் செய்யும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zuUj4ge

ஸ்மார்ட் ஹெல்மெட், குறைந்த விலை வெண்டிலேட்டர் - புதுச்சேரி கண்காட்சியில் கவனம் ஈர்ப்பு

படம்
புதுச்சேரி: புதுச்சேரியில் தொடங்கிய தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஸ்மார்ட் ஹெல்மெட், குறைந்த விலை வெண்ட்டிலேட்டர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் பேருந்து நிறுத்தம் என மாணவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பில் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சி வரும் 25-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SDUKsVE

ட்ரம்ப் உதவியால் அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டாக்!

படம்
வாஷிங்டன்: தேசத்தின் பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவில் நேற்றைய தினம் டிக்டாக் செயலியின் சேவை தடை செய்யப்பட்டது. இந்த சூழலில் அந்த செயலி தடையை தகர்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் பின்னணியில் அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் உள்ளதாக தெரிகிறது. அதை குறிப்பிடும் வகையில் டொனால்ட் ட்ரம்புக்கு டிக்டாக் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பில் இருந்து வெளியேறும் ஜோ பைடன் தலைமையிலான அரசு, டிக்டாக் செயலியை தடை செய்யும் சட்டத்தை அமல் செய்தது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப், இன்று ஆட்சி ஏற்கும் நிலையில் இது நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rv1Nxln

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் நேரம் 3 நிமிடங்களாக அதிகரிப்பு: மெட்டா அப்டேட்

படம்
மென்லோ பார்க்: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் நிறுவனம் சில முக்கிய அப்டேட்களை அறிவித்துள்ளது. அதன்படி இப்போது ரீல்ஸ் பதிவுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை வாங்கியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த தளத்தில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்துக்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2gDoFc6

இந்தியாவில் ரியல்மி 14 புரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 14 புரோ+ 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இதோடு சேர்த்து 14 புரோ மாடல் போனையும் ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lVhPoQa

எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம்!

படம்
டெக்சாஸ்: எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் சமூக வலைத்தளத்துக்கு வெளியே இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் எலான் மஸ்கின் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த செயலியை எக்ஸ் ஏஐ வடிவமைத்துள்ளது. பயனர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் உரையாடல் பாணியில் இந்த செயலி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் படங்களை உருவாக்கவும், உரையைச் சுருக்கவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xDaX5Od

ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது. செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zJcaUR7

ஏஐ தொழிநுட்பத்தில் சிறந்து விளங்க இந்தியா செய்ய வேண்டியது என்ன? - சத்யா நாதெள்ள விவரிப்பு

படம்
புதுடெல்லி: ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான அடித்தள மாதிரிகளை இந்தியா உருவாக்க வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெள்ள தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் இந்தியா செயற்கை நுண்ணறிவு சுற்றுப்பயணம் எனும் தனது இந்த சுற்றுப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய சத்யா நாதெள்ள, “இந்திய மொழிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்தியா தனது தொழில்களை மாற்றியமைப்பதில் சிறந்த பணிகளைச் செய்ய முடியும். இந்தியாவால் முன்னிலை பணிகளைச் செய்ய முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. முன்னிலை பணிகளை நீங்கள் மிகவும் தனித்துவமானதாகக் கூட வரையறுக்கலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aylr6QK

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒன்பிளஸ் 13ஆர் போனும் வெளிவந்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6eYK1Hp

பட்ஜெட் விலையில் ரெட்மி 14C 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களை கருத்தில் கொண்டு இது அறிமுகமாகி உள்ளது. சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AhVOLv0

குழந்தைகள் சமூக ஊடக கணக்குகளை உருவாக்க பெற்றோரின் ஒப்புதல் அவசியம்: மத்திய அரசு

படம்
புதுடெல்லி: 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்க பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு நேற்று வெளியிட்ட டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டம் 2023 வரைவு விதியில் இந்த முன்மொழிவை வைத்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வரைவு விதிகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் மீதான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் அரசின் MyGov.in.என்ற தளத்தில் பிப்ரவரி 18, 2025-க்கு முன்பாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அவை பிப்.18-க்கு பின்பு பரிசீலிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UlKqh1F

ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: கூகுள் பணியாளர்களுக்கு சுந்தர் பிச்சை அறிவுறுத்தல்

படம்
2025-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பணியாளர்களிடம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவுறுத்தியுள்ளார். நடப்பாண்டில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாட்டு வியூகம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் அதன தலைவர் சுந்தர் பிச்சை தலைமையில் கலிபோர்னியாவில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: இந்த தருணத்தின் அவசரத்தை உணர்ந்து அனைத்தையும் உள்வாங்கி நிறுவனத்தை வேகமாக நடத்தி செல்ல வேண்டியது பணியாளர்களின் கடமை. நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oDaAulH