இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்லைன் பரிவர்த்தனையில் புதிய மாற்றங்கள் என்னென்ன?

படம்
இந்தியாவில் சுமார் 100 கோடி டெபிட் கார்டுகளும், கிரெடிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம் தினமும் கிட்டத்தட்ட 1.5 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதோடு ரூ.4,000 கோடி அளவுக்கான வர்த்தகம் நடைபெற்றுவருவதாக சமீபத்தில் நடந்து முடிந்த சிஐஐ (CII) கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் வழியான பரிவர்த்தனையானது பலமடங்கு அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆன்லைன் மூலமான பரிவர்த்தனைகள் அதிகரித்துவருவதுபோலவே அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்துவருகின்றன என்பதைப் பயன்பாட்டாளர்களான நீங்களும் அறிந்திருப்பீர்கள். இதற்குத் தீர்வு காணும் பொருட்டும், பயனாளர்களின் நலனைக் காக்கும் பொருட்டும் மத்திய ரிசர்வ் வங்கியானது ‘அடையாளக் குறியாக்கம் அல்லது டோக்கன் முறை’ (Tokenisation) என்கிற ஒரு மாற்றுவழியை அறிமுகப்படுத்தியுள்ளது. 2022, ஜனவரி 1 முதல் வங்கிகளும், ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருக்கும் வர்த்தகர்களும் டோக்கன் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று செப்டம்பர் மாதம் அறிவிப்பொன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால், எஸ்பிஐ, ஹெச...

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: விண்ணை அளக்கும் கண்

படம்
நாசாவின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த/இருப்பதற்குச் சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும். ஐரோப்பிய மற்றும் கனடிய விண்வெளி நிறுவனங்கள் இத்திட்டத்துக்குப் பங்களித்தன. தொலைநோக்கி செயல்படும் முறை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3FOAGpe

இந்தியாவில் பயன்பாட்டில் 8.77 லட்சம் மின்சார வாகனங்கள்: 7-வது இடத்தில் தமிழகம்

படம்
புதுடெல்லி: இந்திய சாலைகளில் 8.77 லட்சம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் மக்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Ej8tFC

போலியான மைக்ரோசாப்ட் மென்பொருள் விற்பனை: சிபிசிஐடி போலீஸார் விசாரணை

படம்
சென்னை: கால்சென்டர்கள் நடத்தி, போலியான மைக்ரோசாப்ட் மென்பொருளை விற்பனை செய்தவர்களைப் பிடித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் மைக்ரோசாப்ட் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3E7Nd5A

பழைய கூகுள் குரோமில் பாதுகாப்பு ரீதியாக ஆபத்து: மத்திய அரசு எச்சரிக்கை

படம்
கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு ரீதியாக பல சிக்கல்கள் இருப்பதாகவும், அதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் கூகுள் குரோம் பயன்பாட்டாளர்களின் கணினிக்குள் ஊடுருவ அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியான இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்புக் குழு கூகுள் குரோம் பயன்பாட்டா ளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, பயன்பாட்டாளர்கள் கூகுள் குரோமை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33sHpad

தேசிய விருது பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

படம்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்துக்கான தேசிய விருது பெற்ற 6 பேர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, கடந்த டிச.3-ம் தேதி டெல்லியில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் சார்பில், மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்துக்கான தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DEddFJ

சென்னை - விளாடிவோஸ்க் கடல்வழி போக்குவரத்தால் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்கள் பலன்பெறும்: ரஷ்ய துணைத்தூதர் ஒலெக் அவ்தீவ் தகவல்

படம்
சென்னை - விளாடிவோஸ்க் (ரஷ்யா) கடல்வழி வர்த்தக போக்குவரத்து திட்டத்தின் மூலம் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்கள் பலனடையும் என்று ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ் தெரிவித்துள்ளார். இந்தியா - ரஷ்யா இடையிலான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rUBqp3

நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைகிறேன்: வெலிங்டன் ராணுவ மைய பதிவேட்டில் முதல்வர் உருக்கம்

படம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து நேரில் கேட்டறிய சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7 மணியளவில் கோவை விமானநிலையம் வந்தார். அங்கிருந்து, சாலை மார்க்கமாக வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்துக்கு 9 மணியளவில் முதல்வர் சென்றடைந்தார். அங்கு ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதற்கு முன்பு அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில், “தாய்த் திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிர் இழந்ததற்கு நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https:...

திமுக அரசை கண்டித்து இன்று நடக்க இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் டிச.11-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

படம்
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வாட் வரியைக் குறைக்க வேண்டும், மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் இழப்புக்கு ஹெக்டேருக்கு ரூ. 40 ஆயிரமும், மறு சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ. 12 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம்வழங்க வேண்டும். அம்மா மினி கிளினிக்கை மூடக் கூடாது, கட்டுமானப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் டிசம்பர் 9-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டு டிச.11-ம் தேதி காலை 11 மணிக்குநடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...

பழங்குடி மக்களின் குடிப் பெயர்ச்சி: துயரும் துயர் துடைப்பும்..

படம்
வரலாற்று ரீதியாக வன வாழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை துடைத்து எறிவதும், நிலம், வாழ்வாதாரம், உணவு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் கொடுப்பதும் 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். ஆனால், பூர்வீக குடிகள் தாங்கள் குடியிருக்கும் வனப் பகுதியில் வாழ்வாதார வேலைகளை இழந்து தொடர்ந்து குடிபெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு வேலை தேடி குடிபெயர்தல், பெரும்பாலும் குடும்பத்தோடேயே நடைபெறுகிறது. சில நேரங்களில், ஆண்கள் மட்டுமே தனியாக வேலை தேடிச் சென்று, குடும்பத்தைக் காப்பாற்றும் போக்கும் இருக்கிறது.‌ வேலை தேடி குடிபெயர்ந்து செல்பவர்களில் 560 பேர் குடும்பத்தோடும், 164 பேர் ஆண்கள் மட்டும் தனியாகவும் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rPC6fi

சசிகலா அதிமுகவுக்கு மீண்டும் வருவது நடக்காத காரியம்: கடம்பூர் ராஜு எம்எல்ஏ. கருத்து

படம்
சசிகலா அதிமுகவுக்கு மீண்டும் வருவது நடக்காத காரியம் என்று கடம்பூர் ராஜு எம்எல்ஏ கூறினார். கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Gm3aH6

வைகை ஆற்றில் 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: மதுரை உட்பட 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

படம்
மதுரை வைகை ஆற்றில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால் ஆட் சியர் அனீஷ்சேகர் பார்வையிட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பெரியாறு, வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ExzPc8

மும்பையில் இருவருக்கு ஒமைக்ரான் உறுதி: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

படம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் மகாராஷ்டிராவில் மட்டுமே 10 பேருக்கு தொற்று உள்ளது. மும்பையில் ஒமைக்ரான் தொற்று உறுதியான இருவருமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாவர். மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வந்த 295 பேரில் 109 பேர் எங்கு இருக்கிறார்கள் எனக் கண்டறியமுடியவில்லை என்று கல்யாண் டோம்பிவலி முனிசிபல் கார்ப்பரேஷன் தலைவர் விஜய் சூர்யவன்சி தெரிவித்துள்ளார். பலரின் தொலைபேசி எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், வீடுகள் பூட்டியிருப்பதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31A5wms

10 ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்கப்படவில்லை; தேசிய மருந்துசார் கல்வி, ஆராய்ச்சி கழகத்தை மதுரையில் உடனடியாக அமைக்க வேண்டும்: மக்களவையில் சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்

படம்
மதுரையில் உடனடியாக தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் தொடங்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் நேற்று தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் தொடர்பான மசோதா மீது நடந்த விவாதத்தின்போது சு.வெங்கடேசன் எம்பி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31txqRA

தனியார் பள்ளியில் பெண் முதல்வர் தற்கொலை: பள்ளித் தாளாளர் மீது வழக்குப் பதிவு

படம்
நன்னிலம் அருகே தனியார் பள்ளி பெண் முதல்வர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பள்ளித் தாளாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் மருதுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகள் சத்யா(36). இவர், பேரளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார். திருமணமாகி விவாகரத்து பெற்ற இவருக்கு, 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி பள்ளிக்குச் சென்ற சத்யா, அவரது அறையில் மயங்கிக் கிடந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3y0M9yW

வரதட்சணையை ஒழிக்க சட்டங்களை கடுமையாக்குவதுடன் மக்களும் மனதளவில் மாற வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

படம்
‘‘நாட்டில் இருந்து வரதட்சணை கொடுமையை ஒழிக்க சட்டத்தில் கடும் விதிமுறைகளை கொண்டு வரவேண்டும்’’ என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த சிலர் வரதட்சணை கொடுமையை முற்றிலும் ஒழிக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே.பிஜு கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DtKYcI

மனம் உவந்து பெருமளவில் கொடிநாள் நிதி அளிப்போம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

படம்
முப்படை வீரர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி வீச, மனம் உவந்து பெருமளவில் கொடிநாள் நிதி அளிப்போம் என்றுமுதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் நேற்று வெளியிட்ட செய்தி: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xYphAl

மாடித் தோட்டம், காய்கறி தோட்டம் அமைக்க மானிய விலையில் செடி, விதைகள் விநியோகம்: திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

படம்
வேளாண் துறை சார்பில் மானிய விலையில் மாடித் தோட்ட தளைகள், காய்கறித் தோட்டத்துக்கான காய்கறி விதைகள், ஊட்டச்சத்து தளைகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lIwX4S

இந்திய உணவு ஏற்றுமதிக்கு உலக அளவில் பெரிய வாய்ப்பு - ‘ஃபியோ’ துணை தலைமை இயக்குநர் கருத்து

படம்
இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஃபியோ), மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்துடன் இணைந்து, வளைகுடா நாடுகளில் விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கை நடத்தியது. இதில் பங்கேற்ற ஃபியோ துணைதலைமை இயக்குநர் கே.உன்னிகிருஷ்ணன் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xXE9io

தமிழகம் - கேரளா போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்க குழு; முல்லை பெரியாறு குறித்து முதல்வர்கள் பேசுவர்: சென்னையில் கேரள அமைச்சர் அந்தோணிராஜ் தகவல்

படம்
தமிழகம் - கேரளா இடையே போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க குழு அமைக்கப்படும். முல்லை பெரியாறு விவகாரத்தில் இருமாநில முதல்வர்கள் பேசி, உரிய முடிவு எடுப்பார்கள் என்றுகேரள போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி ராஜ் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை நேற்றுசந்தித்த அந்தோணி ராஜ், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ou56af

நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் காலமானார்: முதல்வர் ஸ்டாலின், மருத்துவத் துறையினர் இரங்கல்

படம்
நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் காலமானார். அவருக்கு வயது 98. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1923-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பிறந்தவர் சாரதா மேனன்.நீதிபதியாக இருந்த இவரது தந்தைசென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், பள்ளிக் கல்வியை சென்னையில் முடித்தசாரதா, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். பின்னர் பெங்களூருவில்உள்ள தேசிய மனநல, நரம்பியல்கல்வி மையத்தில் பயிற்சி பெற்றார். இதையடுத்து, நாட்டின் முதல்மனநல மருத்துவர் என்ற பெருமை பெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DzAIj0

கர்நாடகாவில் 149 மாணவருக்கு கரோனா: பள்ளி கல்லூரிகளை மூடுவது குறித்து முதல்வர் ஆலோசனை

படம்
கர்நாடகாவில் ஷிமோகா, சிக்கமக ளூரு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 149 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி,கல்லூரிகள் கடந்த செப்டம்பரில் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் பெங்களூரு, மைசூரு, தார்வாட், தும்கூரு ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குகரோனா தொற்று கண்டறியப்பட் டது. இதனிடையே உருமாறிய டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடங்கியுள்ளதால் மாணவர்களும் பெற்றோரும் பீதி அடைந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DyXdEG

திருமலையில் டிச.17 முதல் ஆண்டாள் திருப்பாவை சேவை

படம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 11 மாதங்கள் வரை ஏழுமலை யானுக்கு சுப்ரபாத சேவை அதி காலை நடைபெறுவது ஐதீகம். அந்த நேரத்தில் சுவாமி துயில் எழுப்பப்பட்டு, அன்றைய நாளின் இதர சேவைகள் தொடர்ந்து நடைபெறும். ஆனால், தமிழ் மாதமான மார் கழி மாதத்தில் மட்டும் ஆண்டாள் அருளிய திருப்பாவையை பாடி ஏழுமலையான் துயில் எழுப்பப் படுகிறார். இந்த ஆண்டு, 16-ம் தேதி மார்கழி மாதம் பிற்பகல் 12.26 மணிக்கு பிறப்பதால், மறுநாள் 17-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ExiGiM

ஷியா முஸ்லிம் வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ இந்து மதத்துக்கு முறைப்படி மாறினார்

படம்
உ.பி.யில் அதிகமுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக இருப்பவர் சையது வசீம் ரிஜ்வீ. ஷியா மத்திய வக்ஃபு வாரியத் முன்னாள் தலைவரான இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர். இவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசினார். இதனால் முஸ்லிம் மவுலானாக்கள் இவரை காஃபீர் (முஸ்லிம் அல்லாதவர்) என மதத்திலிருந்து ஒதுக்கினர். முஸ்லிம்களின் மறைநூலான திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் கூறப்படும் கருத்துகள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அவற்றை நீக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிஜ்வீ தொடர்ந்த வழக்கால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதமும் விதித்தது. இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து என போலீஸ் பாதுகாப்பை பெற்ற ரிஜ்வீயை அவரது குடும்பத்தாரும் ஒதுக்கி வைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dtNu82

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளது - ‘பிசினஸ் லைன்’ செய்தியை மேற்கோள் காட்டி மோடி, நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பெருமிதம்

படம்
மாநிலங்கள் நடப்பு நிதி ஆண்டின் 2-ம் காலாண்டில் மேற்கொண்ட மூலதன செலவு இரு மடங்கு அதிகரித்து ரூ.1.71 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் 2-ம் காலாண்டில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூலதன செலவு அதிகரித்துள்ளதை `பிசினஸ் லைன்' செய்தித்தாள் பட்டியலிட்டுள்ளது. இதை பிரதமர்மோடியும் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளதன் அறிகுறி என்று அவர்கள் கூறியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ouMaID

சக்கர நாற்காலியில் வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மேடையிலிருந்து இறங்கி வந்து விருது வழங்கிய குடியரசு தலைவர் ராம்நாத்

படம்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, கடந்த 3-ம் தேதி டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செய்திருந்தது. விழாவில் மேடைக்கு வர இயன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மேடையிலேயே விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஆனால் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து விருதுகளை வழங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Ew7TFz

நாகாலாந்து படுகொலை, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: இன்று காலை வரை அவை ஒத்திவைப்பு

படம்
நாகாலாந்து படுகொலை, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாகாலாந்தில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்களால் தவறு தலாக 14 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று காலை முதலே மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுபகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pwlupV

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

படம்
தமிழகத்தில் ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனினும், பொதுமக்கள் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை திருவல்லிக்கேணி வலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று தீவிர சிகிச்சை பிரிவு வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dnyMj4

மருத்துவர் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றார் கமல்: சுகாதாரத் துறை செயலர் விளக்கம்

படம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 14 நாட்கள் தனிமைக்கு பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றதாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய அவருக்கு கடந்த மாதம் 22-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு, அவர் கடந்த 4-ம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய உடனே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31FoFmQ

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

படம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தேர்தலுக்கு தடைவிதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அதிமுக தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lH4Tie

‘இந்து தமிழ் திசை’, ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ நடத்திய ‘ஆளப்பிறந்தோம்’ இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சி; கடின உழைப்பும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம்: தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சி.எம்.வான்மதி உறுதி

படம்
கடின உழைப்பும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில்வெற்றி பெறலாம் என்று மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சி.எம்.வான்மதி கூறினார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும்டிஎன்பிஎஸ்சி குருப்-1, குருப்-2 தேர்வுகளுக்கான ‘ஆளப்பிறந்தோம்’ இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சியை ஞாயிற்றுக் கிழமை நடத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3GnRCmn

பழங்குடி மக்களின் சிதைந்துவிட்ட சிறு வனப் பொருள் சேகரம்

படம்
"பாரம்பரியமாக வனத்தில் வாழும் மக்கள், தங்கள் கிராமங்களிலும் தங்கள் கிராம எல்லைக்கு வெளியிலும் சிறு வனப் பொருட்களை சேகரிக்கவும், பயன்படுத்தவும், வாழ்வாதார தேவைகளுக்காக விற்கவும் உரிமை இருக்கிறது" என்று வன உரிமைச் சட்டம் 2006 அத்தியாயம் இரண்டு, பிரிவு சி கூறுகிறது. ஆனால், வன உரிமைச் சட்டம் அமலுக்கு வராத காலத்தில் என்னென்ன சிறு வனப் பொருட்களை சேகரித்து விற்று வந்தார்காளோ, அதனைக் கூட சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னும் சாத்தியம் இன்றி தவிக்கின்றனர் பழங்குடிகள். பழங்குடிகளின் பூர்வீக வாழ்வாதாரம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3GoXXyd

பெரம்பலூர் அருகே வீட்டில் சுய பிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை உயிரிழப்பு

படம்
பெரம்பலூர் அருகே வீட்டில் சுயப் பிரசவம் பார்த்ததில், தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார். இவரது மனைவி செல்வராணி(42). இவர்களுக்கு பிளஸ் 2 படிக்கும் மகள், 9-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளனர். இந்நிலையில், செல்வராணி 3-வது முறையாக கர்ப்பமானார். வயதானநிலையில் கர்ப்பமானதால், அதுகுறித்து கணவர் உட்பட யாருக்கும் தெரியாமல் செல்வராணி மறைத்ததாக தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Doraat

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

படம்
டிச.6 தினத்தையொட்டி பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிச.6 பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Ete3Gq

கேரள அமைப்புகளின் பொய் பிரச்சாரத்தை கண்டித்து: தமிழக எல்லையில் 5 மாவட்ட விவசாயிகள் மறியல்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

படம்
முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அமைப்புகளின் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழக-கேரள எல்லையான லோயர் கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் மறியல் செய்தனர், இதனால் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையை அகற்ற வேண்டும். அதற்கு மாற்றாகப் புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கேரளாவில் பல்வேறு கட்சியினர், அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lCeo2f

பூஸ்ட்டர் டோஸ், குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படுமா?: இன்று முக்கிய முடிவு

படம்
மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிசெலுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அவசரமாகக் கூடி இன்று ஆலோசனை நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் இரு அம்சங்களுக்கும் முடிவு கிடைக்கும் என்று தெரிகிறது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை ஓய்ந்துவிட்ட நிலையில், புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸாஸ் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதுவரை 38 நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவிவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pu7WeF

தொடர் மழை எதிரொலியாக தமிழகத்தில் ரூ.100 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு

படம்
தொடர் மழை காரணமாக தமிழகத்தில் ரூ.100 கோடிக்கு தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், தருமபுரி மாவட்டம் காவேரிபட்டணம் ஆகியஇடங்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 90 சதவீதம் பெண்களே வேலை பார்க்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xYkXkt

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு: குற்றத்துக்கு உதவியதாக காவலர், மருத்துவர் உட்பட 7 பேர் மீது புகார்

படம்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பகுதியைசேர்ந்த 32 வயது பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர், அவருக்கு உதவியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில், 9 வயது மகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார். என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி எனது உடமைகளை இளைஞர் ஒருவர் பறித்துக்கொண்டார். இதுகுறித்து பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றேன். அங்கு எஸ்.ஐ.யாக இருந்த சுந்தரலிங்கம் எனது பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xV4ldo

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.62 கோடி மோசடி: ஓட்டப்பிடாரம் அருகே சங்க தலைவர், செயலாளர் கைது

படம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வள்ளிநாயகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.62 கோடிமோசடி செய்ததாக, அந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை போலீஸார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரம் அருகே வள்ளிநாயகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கே.சண்முகபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக சுப்புராஜ், செயலாளராக வேல்முருகன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். சங்கத்தில் நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கோவில்பட்டி கூட்டுறவு சங்க துணைப் பதிவாளருக்கு புகார்கள் வந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EtBOy8

10. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கை இழையிலான மதிப்பெண் சான்றிதழ்: நிதி ஒதுக்கப்படாததால் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்

படம்
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, செயற்கை இழையிலான மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில்பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக பொதுத்தேர்வு எழுதும் மாணவருக்கான மதிப்பெண் சான்றிதழ்களின் தரம்மேம்படுத்தப்படும் என்று தேர்வுத்துறை கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டது. அதேநேரம் இதற்கான நிதி ஒதுக்கீட்டில் நிலவும் தாமதத்தால் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EunS6S

வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ.100-க்கு விற்பனை

படம்
வரத்து குறைவு காரணமாக, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால், அண்மையில் அதன் விலை ஒரு கிலோ ரூ.150-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. பின்னர், அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து அதிகளவு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டதால், அதன் விலை கிலோ ரூ.40 வரை படிப்படியாக குறைந்தது. இந்த சூழலில் வரத்து குறைந்ததால், தக்காளியின் விலைநேற்று மீண்டும் கிலோவுக்கு ரூ.100-ஐ தொட்டது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Dr8C9y

இன்று டிச.6 பாபர் மசூதி இடிப்பு தினம்; கியான்வாபியில் பூஜை நடத்த இந்துத்துவா அமைப்பினர் முடிவு; 5 ஏஎஸ்பிகள் உட்பட போலீஸார் குவிப்பு: 144 தடை உத்தரவு

படம்
டெல்லிக்கு அருகில் உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மதுரா, கிருஷ்ண ஜென்ம பூமியாகக் கருதப்படுகிறது. இங்குள்ள கிருஷ்ணன் கோயிலை ஒட்டியபடி, 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கியான்வாபி ஷாயி ஈத்கா மசூதி உள்ளது. அங்கிருந்த பழமையான கிருஷ்ணன் கோயிலை இடித்துவிட்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் அதன் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்டியதாக வரலாறு கூறுகிறது. இதனால், மசூதியின் நிலத்தை கோயிலுக்கு அளிக்க வேண்டும் என்று பல ஆண்டு களாக இந்துக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அயோத்தியின் பாபர் மசூதி இடிப்புக்கு பின் மத்திய அரசால் ‘புனிதத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991’ இயற்றப்பட்டது. அதன்பின் அப்பிரச்சினை அடங்கிப் இருந்தது. இதன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளும் அந்த சட்டத்தின் காரணமாக நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DtJoY2

நாட்டிலேயே முதல் முறையாக கடும் போராட்டத்துக்குப் பிறகு: ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி உயர மனிதர்

படம்
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காட்டிபல்லி சிவபால். 42 வயதான இவரது உயரம் சுமார் 3 அடி. கடந்த 2004-ல் பட்டப்படிப்பை முடித்தார். இதன்மூலம் மாவட்டத்தின் முதல் மாற்றுத்திறனாளி பட்டதாரி என்றபெருமையுடன் குள்ள மனிதர்களில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதுகுறித்து சிவபால் கூறிய தாவது: உயரம் குறைவாக இருப்பதால் என்னை பலர் கிண்டல் செய்தார்கள். சொந்தமாக கார் வாங்க விரும்பினேன். இது தொடர்பாக இணையதளத்தில் தேடிய போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் வீடியோவை பார்த்தேன். அதில் குள்ளமானவர்களுக்காக காரில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து விளக்கி இருந்தார். இதையடுத்து, கார் வாங்கி மாற்றங்களை செய்தேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lC8j5S

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா? - கேரள அரசின் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்

படம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை சமரசத்தின் பேரில் ரத்து செய்ய முடியுமா என்பது தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையத்தில் பயின்று வந்த மாணவிக்கு அங்குள்ள ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் சார்பில் மலப்புரம் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் 9 மற்றும் 10 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rD69qd

பழங்குடியினருக்கு முன்னுதாரணமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட அசாமின் 107 வயது மூதாட்டி

படம்
அசாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத் தலைநகரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது லக்கிமிபதார் கிராமம். இது நாகாலாந்தின் எல்லைப் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியாக உள்ளது. இங்கு இணையதள வசதி கிடையாது. அத்துடன், அடர்ந்த காடு என்பதால், அரசு அதிகாரிகளால் அவ்வளவு எளிதில் அந்தப் பகுதியை அடைவது கடினம். லக்கிமிபதார் கிராமம் மற்றும் அதை சுற்றிலும் உள்ள பல்வேறு பழங்குடியினத்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குகின்றனர். இந்நிலையில், பிரதமரின் வீடு தேடி தடுப்பூசி (ஹர் கர் தஸ்தக்) திட்டத்தின் கீழ், சுகாதாரத் துறை அதிகாரிகள் நர்ஸ்கள் கடந்த வெள்ளிக்கிழமை அந்த கிராமத்தை அடைந்தனர். அங்கிருந்த அகோனி சோனோவல் என்ற 107 வயது மூதாட்டிக்கு செவிலியர் ஒருவர் தடுப்பூசி செலுத்தினார். அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3orhveZ

தேர்தல்களில் தொடர் தோல்விகளால் பின்னடைவு: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயங்கும் தேமுதிகவினர்

படம்
தேர்தல்களில் தேமுதிக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால், விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சியினர் போட்டியிடத் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜயகாந்த் 2006-ல்தேமுதிகவை தொடங்கினார். அந்தஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டாலும், விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31suSTf

ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் போட்டியின்றி தேர்வாகின்றனர்: பொன்விழா ஆண்டில் இரட்டைத் தலைமையை உறுதி செய்த அதிமுக

படம்
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாகின்றனர். இதன்மூலம் பொன்விழா ஆண்டில் இரட்டைத் தலைமையை அதிமுக உறுதி செய்துள்ளது. தமிழ் திரையுலகில் பெரும் மக்கள் செல்வாக்குடன் இருந்த எம்ஜிஆர், திமுகவில் இணைந்து முக்கியத் தலைவராக விளங்கினார். அண்ணா மறைவுக்கு பிறகு திமுக தலைவராகவும், முதல்வராகவும் பொறுப்பேற்ற கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே, கட்சியில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZXYzuZ

தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

படம்
தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (டிச.6) தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். டிச.7-ம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். டிச.8-ம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31uubJ8

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் ஆசையை நிறைவேற்றிய மனைவி; ராணுவ அதிகாரியாக தேர்வாகி சாதனை: ராணுவத்தின் தன்னலமற்ற சேவை, மனிதாபிமானத்தால் நெகிழ்ச்சி

படம்
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி, கணவரின் விருப்பப்படி ராணுவ அதிகாரியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓடிஏ) சமீபத்தில் நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பெண் அதிகாரி ஜோதி தீபக் நைன்வால். 2 குழந்தைகளுக்கு தாயான அவர், ராணுவத்தில் பணியில் சேர்ந்ததன் மூலம், இறந்ததனது கணவரின் ஆசையை நிறைவேற்றிக் காட்டியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rE3HzV

எத்தனை காலம் புறம்போக்கு என அழைப்போம்? - பழங்குடிகளின் பூர்வீக நிலங்கள்

படம்
ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில், பொருளாதாரத் துறை தலைவராக பணிபுரியும் பேரா. நா.மணி, இந்திய சமூக அறிவியல் கழகத்தின் (ICSSR) நிதி உதவியோடு, "மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வருவாய், வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்து, அப்பகுதியில் வாழும் மக்களின் குடிப் பெயர்ச்சியை தடுப்பதற்கான வழிமுறைகள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 28 பழங்குடி கிராமங்களில், 956 பேரிடம் கள ஆய்வு செய்து, முடிவுகளை தொகுத்து இந்திய அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறார். அதன் மூன்று முக்கிய அம்சங்கள் ‘இந்து தமிழ்' நாளிதழ் வழியாக வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தின் வனப் பகுதி 2.27 லட்சம் ஹெக்டேர். இப் பகுதிக்குள் 115 பழங்குடி கிராமங்கள் உள்ளன. சோளகர், ஊராளி, இருளர், மலையாளிகள் முக்கியப் பழங்குடி பிரிவினர். இதில், மலையாளிகள் இம்மாவட்டத்தில் பழங்குடிகளாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. பழங்குடிகளின் அனுபவத்தில் இருந்தநிலங்கள், பிரிட்டிஷாரால் வன நிலம்,வருவாய் பட்டா நிலம், வருவாய் புறம்போக்கு என்று வரையறை செய்யப்பட்டது. பட்டா நிலமுடைய பழங்குடிகள் 21.3% (204 பேர்). வன ந...