இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனிநபர் விவரம் கசிவு: ChatGPT-க்கு அபராதம் விதித்தது தென் கொரியா

படம்
சியோல்: சாட்ஜிபிடி (ChatGPT) செய்த வேலைக்காக ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு சுமார் 2.32 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது தென் கொரியா. இதை அந்நாட்டின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம். இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலான டிஜிட்டல் சாதன பயனர்களின் பார்வையை பெற்றுள்ளது சாட்ஜிபிடி. கதை சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத, கம்ப்யூட்டர் கோடிங் என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் கிடைக்கும். ஓபன் ஏஐ நிறுவனம் வடிவமைத்த இந்த சாட்பாட் கடந்த ஆண்டு அறிமுகமானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/esCgZvY

ட்விட்டரில் டார்க் மோட் மட்டும் தான் இருக்கும்: எலான் மஸ்க் ட்வீட்

படம்
நியூயார்க்: ட்விட்டர் (எக்ஸ்) சமூக வலைதளத்தில் டார்க் மோட் மட்டுமே இருக்கும் என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். இது ட்விட்டர் பயனர்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது. ட்விட்டருக்கு போட்டியாளர்கள் ஏராளமாக உருவானாலும் அதை கண்டும் காணாமல் மஸ்க் இந்த அதிரடியை தொடர்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R2sJpyZ

AI Chatbot @ வேலைக்கு ஆள் தேடும் படலம்: ஆட்களைத் தேர்வு செய்யும் சாட்பாட் - சாதக, பாதகங்கள் யாவை?

படம்
இன்றைய டெக் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் அதிவேகமாக உள்ளது. இந்தச் சூழலில் சில நிறுவனங்கள் வேலைக்கு ஆள் தேடும் படலத்தில் ஏஐ சாட்பாட்களின் உதவியை நாடுகின்றன. இது விண்ணப்பதாரர்களுக்கு லேசான சங்கடத்தை தந்துள்ளது. அது குறித்து பார்ப்போம். கடந்த ஆண்டு ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி அறிமுகமானது. பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் வல்லமை கொண்டது. கதை, கட்டுரை, கவிதை, கோடிங் என அனைத்தையும் இதில் பெறலாம். தொடர்ச்சியாக பல சாட்பாட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rAju4Jb

சாட்ஜிபிடி ஆண்ட்ராய்டு செயலி: இந்தியாவில் அறிமுகம்

படம்
சென்னை: ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-யின் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகமாகி உள்ளது. இந்தியாவில் உள்ள பயனர்களும் இதனை பயன்படுத்தலாம். அது குறித்து பார்ப்போம். கடந்த ஆண்டு உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது சாட்ஜிபிடி. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்பாட் உடன் பயனர்கள் உரையாட முடியும். பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் பதில் கொடுக்கும் வல்லமை கொண்டது சாட்ஜிபிடி. கதை, கட்டுரை, கவிதை, கம்யூட்டர் புரோகிராம் என அனைத்தும் இதில் பெறலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ySLaHUt

ஐக்யூ ஸ்மார்ட்போன் விற்பனை 82 சதவீதம் உயர்வு

படம்
சென்னை: தமிழ்நாட்டில் ஐக்யூ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனைகடந்த நிதி ஆண்டில் 82 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி (சிஇஓ) நிபுன் மரியா தெரிவித்து உள்ளார். சீனாவைச் சேர்ந்த விவோ மொபைல்போன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐக்யூ கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவரும் இந்நிறுவனம், தமிழ்நாட்டில் தங்களது சந்தையை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pbN8AUQ

‘X’ உள்ளே... நீலக் குருவி வெளியே... - ட்விட்டர் பயனர்களின் எதிர்வினை எப்படி?

படம்
நியூயார்க்: ட்விட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மாற்றிவிட்டார், அதன் உரிமையாளர் எலான் மஸ்க். புதிய லோகோவான ‘X’ உள்ளேயும், பழைய லோகோவான ‘நீலக் குருவி’ வெளியேயும் சென்றுள்ளது. இதற்கு எதிர்வினையை எலான் மஸ்க் சந்தித்து வருகிறார். ட்விட்டரின் லோகோவை X என மாற்றியதன் பின்னணியில் பலமான வர்த்தக ஐடியாவை மஸ்க் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில், தனது வியாபார மூளையை மஸ்க் தெளிவாக பயன்படுத்தி திட்டமிட்டுள்ளாராம். இதன்மூலம் தனது X கார்ப்பரேஷன் சேவைகளை மஸ்க் இணைக்கவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக ட்விட்டர், பேபால் (நிதி சேவை) மற்றும் இன்னும் பிற விஷயங்களை ஒரே செயலியில் கொண்டு வருவதுதான் அவரது திட்டம் என சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் உலகம் முழுவதுமுள்ள ட்விட்டர் பயனர்கள் லோகோ மாற்றம் குறித்து என்ன சொல்லி வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mfwyBF5

ட்விட்டரின் லோகோவை 'X' என மாற்றிய எலான் மஸ்க்!

படம்
சான் பிரான்சிஸ்கோ: பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தின் லோகோவை மாற்றினார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். பாரம்பரிய நீலக் குருவிக்கு பதிலாக ‘X’ என லோகோவை மஸ்க் மாற்றியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4ZXMbRl

Genesis | செய்தி எழுதும் திறன்கொண்ட கூகுளின் ஏஐ

படம்
கலிபோர்னியா: கூகுள் நிறுவனம் ‘ஜெனிசிஸ்’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புராடெக்டை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்களை திரட்டி செய்திக் கட்டுரைகளாக உருவாக்கும் திறன் கொண்டதாம். அது குறித்து பார்ப்போம். டெக் உலகில் அனைவரையும் பேச வைத்துள்ளது ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவின் வரவு. சாட்ஜிபிடி தான் அதற்கான விதையை உலக அளவில் பரவலாக தூவியது. அதன் வழியில் கூகுள் தொடங்கி பல்வேறு நிறுவனங்கள் ஏஐ சாட்பாட்களை அறிமுகம் செய்தன. இத்தகையச் சூழலில் செய்தி எழுதும் திறன் படைத்த ஜெனிசிஸ் ஏஐ குறித்த தகவல் வெளிவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X7Ervcj

விவோ Y27 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y27 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ Y27 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qn7Udp5

வாட்ஸ்அப்பில் பயனர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்வது எப்படி?

படம்
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் தெரியாத பயனர்களின் எண்களை சேமிக்காமல் (Save) நேரடியாக மெசேஜ் செய்யும் வகையிலான அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/u6t8ZaD

ஃபேஸ்புக் தளத்தில் புதிய வீடியோ அம்சங்கள் - ஒரு விரைவுப் பார்வை

படம்
சான் பிரான்சிஸ்கோ: வீடியோ சார்ந்த அம்சங்களில் ஃபேஸ்புக் தளத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்துள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. ஹெச்டிஆர் தளத்தில் வீடியோக்களை அப்டேட் செய்வது, வீடியோ எடிட்டிங் டூல் போன்றவை இதில் அடங்கும் எனத் தெரிகிறது. இது சார்ந்த அப்டேட் படிப்படியாக பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கப் பெறும் என தெரிகிறது. ஃபேஸ்புக் தளத்தின் முக்கிய அங்கமாக வீடியோ உள்ளது. அதை கருத்தில் கொண்டு வீடியோவை உருவாக்குவது, பார்ப்பது மற்றும் வீடியோ என்கேஜ்மென்ட் போன்றவற்றில் பயனர்களை ஈடுபட செய்யும் வகையில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EZ2a6zi

இந்தியாவில் ‘நத்திங் போன் (2)’ விற்பனை 21-ம் தேதி தொடக்கம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் வரும் 21-ம் தேதி ‘நத்திங் போன் (2)’ ஸ்மார்ட்போன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட்டை விற்பனை செய்தது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனர் கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிலையில், இப்போது இந்தியாவில் நத்திங் நிறுவனத்தின் போன் (2) ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AYfLewS

பயனரகளகக பதய வசத - வடஸஅப வபபல சல மககய மறறஙகள

படம்
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் வெப்பில் பயனர் அனுபவத்துக்காக சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது மெட்டா. சாட் ஷேர் ஷீட்டில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kF14hnK

'லச' எனம ஏஐ சயத வசபபளர: ஒடச சயத சனலன தனததவ மயறச!

படம்
புவனேஷ்வர்: இன்றைய டெக் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ‘OTV’ எனும் தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனலின் முயற்சி. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, செய்தியும் வாசிக்கச் செய்துள்ளனர் அந்தத் தொலைக்காட்சியின் ஊழியர்கள். ஞாயிறு அன்று இந்த விர்ச்சுவல் செய்தி வாசிப்பாளரான ‘லிசா’-வின் அறிமுகம் நடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aoAH27d

ஒபப ரன 10 சரஸ இநதயவல அறமகம: வல சறபப அமசஙகள

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 10 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ரெனோ 10 சீரிஸ் வரிசையில் மூன்று போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனோ 10, ரெனோ 10 புரோ, ரெனோ 10 புரோ+ ஆகிய மாடல்கள் தற்போது அறிமுகமாகி உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pJexMr1

மனதரகளகக எதரக நஙகள சயலபட மடடம: சயறக நணணறவ கறதத மநடடல ரபககள பதல

படம்
ஜெனிவா: ‘‘மனிதர்களின் வேலைகளை பறிக்க மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்’’ என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாட்டில் ரோபோக்கள் பதில் அளித்தன. ‘ஆக்கப்பூர்வ செயல்களுக்கான செயற்கை நுண்ணறிவு’ பற்றிய உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 6-ம்தேதி நடந்தது. இதில் பங்கேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் 9 மனித ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மனித ரோபோக்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவை அளிக்கும் பதில், அவற்றை உருவாக்கியவர்களுக்கே ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DjSGJAa

''மனதரகளவட எஙகளல உலக சறபபக வழநடதத இயலம'' - ஐ.ந.வல உறதயளதத AI robots

படம்
ஜெனீவா: ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ -AI) திறன் கொண்ட ரோபோக்கள் தங்களால் இந்த உலகத்தை மனிதர்களைவிட சிறப்பாக வழிநடத்த இயலும் என்று உறுதியளித்தன. அதே வேளையில் தங்களுக்கு மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என்றும் ஒப்புக் கொண்டன. தங்களைப் போன்ற ஏஐ ரோபோக்களை உருவாக்கும்போது மனிதர்கள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை அறிந்து கவனமாகக் கையாள வேண்டும் என்றும் எச்சரித்தன. நாங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளைத் திருட மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக போராட மாட்டோம் என்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AzoQlNS

தஙகழககம கடன சயலகள ஆப ஸடரல இரநத நககயத ஆபபள!

படம்
சென்னை: ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து தீங்கிழைக்கும் கடன் செயலிகள் சிலவற்றை அதிரடியாக நீக்கியுள்ளது ஆப்பிள் இந்தியா. பயனர்கள் இது குறித்து புகார் அளித்த நிலையில் அந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கூகுள் நிறுவனமும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இயங்க தவறிய ஆயிரக்கணக்கான செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கூகுளின் வழியை ஆப்பிளும் பின்பற்றி உள்ளது. இந்த செயலிகள் ஆப்பிள் போன் பயனர்களின் கான்டக்ட் விவரம், கேலரி மற்றும் போனில் இதர தரவுகளின் அணுகலை பயனர் பதிவு செய்யும் போது பெற்று, பின்னர் பயனர்களை மார்ஃப் செய்யப்பட்ட படங்கள், வீடியோக்கள் மூலம் அச்சுறுத்துவதாக ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பயனர்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iL47VCB

மடடவன தரடஸ: வழகக தடககம மடவல எலன மஸகன டவடடர

படம்
சான் பிரான்சிஸ்கோ: ஒட்டுமொத்த டிஜிட்டல் உலகமும் மெட்டாவின் த்ரெட்ஸ் குறித்துத்தான் பேசி வருகின்றன. இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக எலான் மஸ்கின் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதலே எண்ணற்ற மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அது ட்விட்டர் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அதற்கு மாற்றாக மெட்டா நிறுவனத்தின் சார்பில் த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இணைய உலக சமுதாயமே அதை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து, இன்ஸ்டா கணக்கின் மூலம் லாக்-இன் செய்தும் விட்டனர். வரும் நாட்களில் பயனர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் இது எந்த வகையில் ட்விட்டருக்கு மாற்றாக அமைந்துள்ளது என்பது தெரியவரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YO72vnI

டவடடரகக படடயக தரடஸ பதய சயல: மடட நறவனம அறமகம

படம்
புதுடெல்லி: ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ (Threads) என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. சிறிய பதிவுகளுக்கான சமூக வலைதளமாக ட்விட்டர் உள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் முன்னுரிமை அளிக்கும் தளமாக ட்விட்டர் திகழ்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் (ரூ.3.60 லட்சம் கோடி) மதிப்பில் வாங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yH3Xd2j

Threads அறமகம | 11 ஆணடகளககப பறக டவட சயத மரக ஸகரபரக: வரலகம ஸபடர மன மம

படம்
நியூயார்க்: ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ள சூழலில் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஸூகர்பர்க் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக ஒரு ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில் ஒரே ஒரு மீம் மட்டும் மார்க் பகிர்ந்துள்ளார். அதில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தன்னைப் போன்றே இன்னொரு உருவத்தை எதிர்கொள்ளும் ஃபேஸ் ஆஃப் காட்சி இடம் பெற்றிருக்கிறது. அது தவிர அந்த ட்வீட்டில் எவ்வித கேப்ஷனும் இல்லை. ஆனால் படத்தைப் பார்க்கும் போதே அது ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் களம் இறங்கியதைக் குறிக்கும் வண்ணத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xdywo48

டவடடரகக மறறக நள மறநள அறமகமகறத மடடவன தரடஸ

படம்
கலிபோர்னியா: ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது ட்விட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட உலக அளவில் வரும் 7-ம் தேதி த்ரெட்ஸ் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிகிறது. கடந்த மே மாதம் முதல் ட்விட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது. இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VpotjcK

இன வரஃபட கணககளள பயனரகள மடடம TweetDeck பயனபடதத இயலம: டவடடரன அடதத அதரட

படம்
சான்பிரான்சிஸ்கோ: ட்விட்டரின் ட்வீட்டெக் (TweetDeck) சேவையை இனி சரிபார்க்கப்பட்ட (வெரிஃபைடு) கணக்கு உள்ள பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை அவர் கொண்டுவந்த வண்ணம் இருக்கிறார். மாஸ் லேஆஃப் ஆரம்பித்து ப்ளூ டிக் கட்டண முறை வரை பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். தற்போது ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு பலவித கட்டுப்பாடுகளையும் அவர் அறிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lfq2oX9

தனததவதத இழககறத டவடடர? - ஒர வரவப பரவ

படம்
ட்விட்டர் மற்ற சமூக வலைதளங்களிலிருந்து அது துவக்கப்பட்ட காலம் முதலே வேறுபட்டு இருந்து வந்தது. தனி மனித சுதந்திரம் ட்விட்டரில் பிராதான மந்திரச் சொல்லாக பயணித்தது. நீங்கள் எந்தப் பிரபலங்களையும் பாரட்டலாம், விமர்சிக்கலாம். அந்தப் பாராட்டுகளும் விமர்சனங்களும் அத்துடன் நில்லாமல், அதற்கான பதில்களும் சம்பந்தப்பட்ட பிரபலங்களிடமிருந்து பயனாளர்களுக்கு பல தருணங்களில் கிடைத்திருக்கிறது. அதுமட்டும் இல்லை, அதிகாரங்களையும், சர்வாதிகாரங்களையும் கேள்வி கேட்கும் உரிமையை ட்விட்டர் கொடுத்தது. மெட்டா (ஃபேஸ்புக் ) அதன் பயனர்களிடமிருந்து விலகிச் சென்ற காரணத்தால், அதன் பயனாளர்கள் பலரும் ட்விட்டரை தேர்ந்தெடுந்தார்கள். அவ்வாறு விலகி வந்தவர்களுக்கு தனி சுவாசத்தை ட்விட்டர் வழங்கியது. ட்விட்டரும் ஒருவகையில் தொடக்கத்தில் ஆரோக்கியமான முறையில் அந்தப் பயனாளர்களை பயன்படுத்திக் கொண்டது. நீங்கள் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களையோ புகைப்படங்களையோ பகிராமல் உங்கள் சுய ஆளுமைத் திறனால் ட்விட்டரில் பெரிய எண்ணிக்கையில் பின்தொடர்பாளர்களை பெற்றுக்கொள்ள முடியும். அந்த வாய்பை ட்விட்டர் அளித்திருந்தது. from இந்து தமிழ் திசை :...

டவடகள பரகக வரமப நரணயததத டவடடர

படம்
சான்பிரான்சிஸ்கோ: ட்விட்டரில் கணக்கு வைத்துள்ள ஒருவர் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதற்கு ட்விட்டர் நிறுவனம் வரம்பு நிர்ணயித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் சில வாரங்களில் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தார். ஏராளமான ஊழியர்களை நீக்கியதுடன், ப்ளூ டிக் கட்டண முறையையும் கொண்டு வந்தார்.தற்போது ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு பலவித கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dXlHCQ0