இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் ஹெல்த்கேர், ஐடி, சேவை துறை தரவுகளை டார்கெட் செய்யும் சைபர் குற்றவாளிகள்

படம்
பெங்களூரு: இந்தியாவில் ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறை நிறுவனங்களை சைபர் குற்றவாளிகளின் டார்கெட் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாசிட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் அரங்கேறும் சைபர் தாக்குதல்களில் 80 சதவீதம் நிறுவனங்களை டார்கெட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 36 சதவீதம் பொதுத்துறை மற்றும் 13 சதவீதம் தொழில் துறையை சைபர் குற்றவாளிகள் டார்கெட் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NY7Lk9M

6 பில்லியன் டாலர் ஐபோன் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி: 50 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம்

படம்
புதுடெல்லி : ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு மையமாக சீனா உள்ள நிலையில், சீனாவை முழுமையாக சார்ந்திருக்காமல், இந்தியா, வியட்நாம் என வெவ்வேறு நாடுகளில் தனக்கான விநியோக மையங்களை உருவாக்கும் நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனம் 2017-ம்ஆண்டு இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்களின் தயாரிப்பைத் தொடங்கியது. ஆப்பிள் சிஇஓ டிம் குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தார். அதன் பிறகு இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய மாடல்களும் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sGi6xLC

இந்தோனேசியாவில் ஐபோன் 16 விற்பனைக்கு தடை: காரணம் என்ன?

படம்
சென்னை: இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு கடந்த வாரம் தடை விதித்தது. அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த தடை காரணமாக அந்நாட்டில் ஆப்பிள் ஐபோன் 16 மாடல்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் இந்த சாதனத்தை மக்கள் வாங்கக்கூடாது என அந்நாட்டின் தொழில்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ci2uswn

டிஜிட்டல் டைரி 17: சாட்-ஜிபியிடம் கேட்கக் கூடாத ‘ஒரு’ கேள்வி!

படம்
சாட்-ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களிடம் கேட்கக் கூடாத கேள்விகள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதில் முதலில் வருவது, ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களைக் கேட்கக் கூடாது என்பதுதான். அதே போல, சாட்-ஜிபிடியிடம் சட்ட விரோத செயல்களுக்கான வழிகள் பற்றியும், நிதி ஆலோசனைகள், மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றையும் கேட்கக் கூடாது என்கின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள். இப்படி, அண்மையில் சாட்-ஜிபியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அதன் பதிலும் இணையத்தில் வைரலானது. “நாம் இதுவரை உரையாடியதை வைத்து, என்னைப் பற்றி எனக்குத் தெரியாத ஓர் அம்சம் என்ன என்பதை உன்னால் சொல்ல முடியுமா?” என்று பயனர் ஒருவர் சாட்-ஜிபிடியிடம் கேட்டிருக்கிறார். (சாட்பாட் அகராதியில் பயனர் உள்ளீடு செய்யும் கேள்வி, பதில் எதுவாயினும் அது ‘பிராம்ப்ட்’ எனப்படுகிறது). from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mF4TRPp

சுனில் மிட்டலின் குரலை ஏஐ மூலம் குளோன் செய்த மோசடியாளர்கள்: விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

படம்
புதுடெல்லி: இந்திய தொழிலதிபர் சுனில் மிட்டலின் குரலை ஏஐ மூலம் குளோன் செய்து பெரிய தொகையை கைமாற்ற மோசடியாளர்கள் முயற்சித்துள்ளனர். இது குறித்து தனியார் ஊடக நிறுவன நிகழ்வில் அவர் பகிர்ந்து கொண்டது. “ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடியாளர்கள் பலன் அடைய முயற்சிக்கின்றனர். இதில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், துபாயில் உள்ள எனது அலுவலக பிரதிநிதியை மோசடியாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனது குரலில் பேசி உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9c0bkTQ

இந்தியாவில் சாம்சங் கேலக்சி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் சாம்சங் கேலக்சி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cExT3mh

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ Flip ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ Flip என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் ரக போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ஜீரோ Flip ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் Flip மற்றும் ஃபோல்டப்பிள் மாடல் போன்கள் அடுத்தகட்ட வடிவமைப்பாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஜீரோ Flip ஸ்மார்ட்போனை பயனர்கள் சுமார் 4 லட்சம் முறை ஃபோல்ட் செய்யலாம் என இன்பினிக்ஸ் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HLgzpsM

AI அம்சங்களோடு புதிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்

படம்
சென்னை: ஏஐ அம்சங்கள் உள்ளடங்கிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். அடுத்த வாரம் முதல் ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த சாதனம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், ஸ்மார்ட்போன், லேப்டாப், கணினி, ஐபேட், ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஹெட்செட் உள்ளிட்ட சாதனங்களை உற்பத்தி செய்து, உலக நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது புதிய ஐபேட் மினியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/o2BaniR

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை கச்சிதமாக ‘கேட்ச்’ செய்த ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளம் - வீடியோ வைரல்!

படம்
வாஷிங்டன்: விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோ சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து இன்று (அக்.13) மாலை 5.54 மணியளவில் அந்நிறுவனம் தனது ஐந்தாவது ஸ்டார்ஷிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக ஏவியது. விண்ணில் ஏவப்பட்ட இரண்டரை நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி அதிலிருந்து தனியாக பிரிந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/um58CSo

எந்தப் பணியையும் செய்யும் டெஸ்லா நிறுவனத்தின் மனித ரோபோ அறிமுகம்

படம்
கலிபோர்னியா: டெஸ்லா நிறுவனத்தின் மனித ரோபோக்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ரோபோக் களால் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். இந்த மனித ரோபோக்கள் குறித்து டெஸ்லோ நிறுவன சிஇஓ எலான் மஸ்க் கூறியதாவது: இந்த மனித ரோபோக்களால், நாம் விரும்பும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். இவற்றால் பேச முடியும், நடன மாட முடியும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியும். அவர்களுடன் விளையாட முடி யும். நாய்களை நடைபயிற்சி அழைத்து செல்ல முடியும், தோட்ட வேலைகளை செய்ய முடியும், வீட்டை சுத்தம் செய்ய முடியும், கடைக்கு சென்று பலசரக்கு சாமான்களை வாங்கி வர முடியும். மனிதர்களுக்கு சிறந்த நண்பனாக இருக்கும். இவற்றின் விலை 20,000 அமெரிக்க டாலர் முதல் 30,000 அமெரிக்க டாலர் வரை உள்ளது. இவ்வாறு எலன் மஸ்க் கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KqW5b43

டிஜிட்டல் டைரி 15: இணையவாசிகளால் பாடம் கற்ற பிரபல யூடியூபர்!

படம்
பிரபல யூடியூபர் மார்கஸ் பிரவுன்லீக்கு (Marques Brownlee) அறிமுகம் தேவையில்லை. ‘MKBHD’ என்ற பெயராலும் அறியப்படுபவர். இணையவாசிகளால் அதிகம் அறியப்படும் தொழில்நுட்ப விமர்சகர். யூடியூப்பில் 1.9 கோடிப் பேர் பிரவுன்லீயைப் பின் தொடர்கின்றனர். புதிதாக அறிமுகமாகும் தொழில்நுட்ப சாதனங்களை விமர்சனம் செய்வதில் வல்லவர். பிரவுன்லீயின் விமர்சன வீச்சுக்கு உதாரணமாக, 'ஹியூமனே' (Humane AI Pin) படைப்பின் விமர்சனத்தைக் கூறலாம். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் கொண்ட இந்தச் சாதனம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஏஐ வருகையால் இனி ஸ்மார்ட்போன் திரைகள் உள்ளிட்டவற்றுக்குத் தேவையே இருக்காது எனும் ஆருடத்துடன் அறிமுகமான இந்தச் சாதனம், ஏஐ அலையால் பெரும் கவனத்தை ஈர்த்தாலும், சந்தையில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yNEbx4Y

விண்வெளியில் நட்சத்திரத் துகள்களில் நிகழும் வெடிப்புகள்: இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டுபிடிப்பு

படம்
சென்னை : அஸ்ட்ரோசாட் விண்கலம் மூலமாக விண்வெளியில் நட்சத்திரத் துகள்களில் இருந்து பெரும் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் வானியல் ஆய்வுக்காக தயாரித்த அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2015 செப்டம்பர் 28-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் நாசா மையம் சார்பில் சந்திரா விண்கலம் 1999-ம் ஆண்டு ஏவப்பட்டது. இவ்விரு தொலைநோக்கி கலன்களும் விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பல்வேறு அரிய தகவல்களை நமக்கு வழங்கி வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zqc21HE

இந்தியாவின் முக்கிய நகரங்களில் Zoom போன் சேவை அறிமுகம்!

படம்
சென்னை: இந்தியாவில் ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இது சில முக்கிய நகரங்களில் மட்டுமே பயனர் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய அரசிடமிருந்து கடந்த ஆண்டே பெற்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oYaghxR

“விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் மகத்தான வளர்ச்சி...” - இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் விவரிப்பு

படம்
திண்டுக்கல்: “அடுத்த 25 ஆண்டுகள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருக்கும்,” என இஸ்ரோ விஞ்ஞானி ஆர்.ராஜராஜன் கூறியுள்ளார். திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலையில், உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையம், பல்கலை நிர்வாகம் இணைந்து நடத்திய விண்வெளி குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று (அக்.8) பல்கலை அரங்கில் நடைபெற்றது.பல்கலை. துணைவேந்தர் என்.பஞ்சநதம் தலைமை வகித்தார். பல்கலை. பதிவாளர் எல்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இஸ்ரோ பொதுமேலாளர் ஜே.லோகேஷ் முன்னிலை வகித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TluIVtE

‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ உடன் இணைந்து மாணவர்களால் செயற்கைக்கோள் தயாரிக்க இலங்கை நிறுவனம் திட்டம்

படம்
சென்னை: உலக விண்வெளி வாரத்தையொட்டி, இலங்கையின்‌ வடக்கு பகுதியில்‌ உள்ள அரசு பள்ளிகளில்‌ படிக்கும்‌ மாணவர்கள்‌ விண்வெளி ஆய்வில்‌ தங்களின்‌ திறமையை வளர்த்துக்‌ கொள்ளும்‌ வகையில்‌ அவர்கள்‌ தலைமையிலான செயற்கைக்கோள்‌ திட்டத்தைத்‌ துவங்க ‘ஸ்பேஸ் கிட்ஸ்‌ இந்தியா’ நிறுவனத்துடன்‌ (Space Kidz India), இலங்கையின் SLITT Northern Uni புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்‌, இன்ஸ்பேஸ்‌ அகமதாபாத்‌, இயக்குனர்‌ டாக்டர்‌ பிரபுல்ல குமார்‌ ஜெயின்‌,SLITT Northern Uni தலைவர்‌ இண்டி பத்மநாதன்‌, ஸ்பேஸ்கிட்ஸ்‌ இந்தியா நிறுவனர்‌ மற்றும்‌ தலைமைசெயல்‌ அதிகாரி ஸ்ரீமதி கேசன்‌, உலக விண்வெளி வார சங்கத்தின்‌ நிர்வாக இயக்குனர்‌ அல்...

டிஜிட்டல் டைரி 14: உலகில் ஊதா கலரு ஆப்பிள் இருப்பது உண்மையா?

படம்
‘ஊதா வண்ணத்தில் ஆப்பிள்கள் உலகத்தில் இல்லை’ எனும் தகவலோடு இந்தப் பதிவைத் தொடங்கலாம். அதோடு, ஊதா ஆப்பிள்களை எங்குப் பார்த்தாலும், ‘இந்த ஆப்பிள் உண்மையில் இல்லை’ எனும் தகவலையும் சேர்த்துக்கொள்ளவும். வாய்ப்பிருந்தால் இதை சாட்ஜிபிடிக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்தி இதுதான். அண்மையில் கனடா நாட்டில் பயிரிடப்படும் அபூர்வமான ஊதா நிற ஆப்பிள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலானது. இந்தத் தகவலுடன் பகிரப்பட்ட ஊதா நிற ஆப்பிள்களின் ஒளிப்படங்கள் கண்ணைக் கவர்ந்தன. இந்த ஆப்பிள்கள் கனடா நாட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதியில், குளிரான சூழலில் விளைபவை எனத் தகவல் சொல்லப்பட்டது. அவ்வளவுதான், ஊதா நிறத்தில் ஆப்பிளா எனும் ஆச்சரியத்தோடு பலரும் இத்தகவலைப் பகிர்ந்தனர். ஒரு சிலர், இந்த ஆப்பிள்களைத் தேடி கனடா நாட்டின் குறிப்பிட்ட அந்தப் பகுதிக்கே படையெடுக்கவும் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IWZV5Lo

இந்தியாவில் லாவா ‘அக்னி 3’ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. அந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vLFlBbW

‘கூகுள் பே’ மூலம் சிபில் ஸ்கோர் செக் செய்வது எப்படி? - ஓர் எளிய விளக்கம்

படம்
சென்னை: ஒருவரின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அதை கூகுள் பே மூலமாக பயனர்கள் எளிதில் கட்டணம் ஏதுமின்றி அறிந்து கொள்ளலாம். அது குறித்து பார்ப்போம். வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது இன்னும் பிற கடன் தேவைப்படும் நபருக்கு சிபில் ஸ்கோர் மிகவும் அவசியம். இந்த நிலையில் வெறும் சிபில் ஸ்கோர் மட்டுமல்லாது ஒருவர் கடன் தொகையை தாமதமாக செலுத்தி இருந்தால் கூட அந்த விவரத்தையும் சேர்த்து வழங்குகிறது கூகுள் பே. இந்த அம்சம் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 5 கோடி இந்தியர்கள் இதனை பயன்படுத்தி உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YwQNOrj