இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்திய அமேசான்: மஸ்க் உடன் மோதும் பெசோஸ்

படம்
புளோரிடா: சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான் நிறுவனம். இதன் மூலம் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவைக்கு சவால் விடுத்துள்ளது ஜெஃப் பெசோஸின் அமேசான் நிறுவனம். உலக அளவில் இதன் மூலம் வேகமான மற்றும் மலிவு விலையில் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. அதற்கான தொடக்க புள்ளியாக 27 Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை ‘அட்லாஸ்’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான். வரும் நாட்களில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை அதிகளவில் விண்ணில் நிலை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fwpasm9

புதிய சஸ்பென்சன், எல்இடி லைட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ராயல் என்பீல்ட் ‘ஹண்டர் 350’ புதிய மாடல் அறிமுகம்

படம்
சென்னை: புதிய சஸ்​பென்​சன், எல்​இடி லைட் உள்​ளிட்ட நவீன வசதி​களு​டன் ராயல் என்​பீல்ட் நிறு​வனம் புதிய புல்​லட் ‘ஹண்​டர் 350’ மாடலை அறி​முகம் செய்​துள்​ளது. ராயல் என்​பீல்ட் நிறு​வனத்​தின் கிளாசிக் 350, மீட்​டியர் 350, ஹிமாலயன் போன்ற மாடல்​கள் வாகன ஓட்​டிகளிடம் கவனம் பெற்ற நிலை​யில், அதன் தொடர்ச்​சி​யாக ‘ஹண்​டர் 350’ மாடல் 2022 ஆகஸ்ட் மாதம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்​து, அதன் மேம்​படுத்​தப்​பட்ட மாடல் வகை நேற்று முன்​தினம் டெல்லி மற்​றும் மும்​பை​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டது. டேப்​பர் கிரே, ரிபல் ப்ளூ வகைகளு​டன் புதி​தாக டோக்​கியோ பிளாக், லண்​டன் ரெட், ரியோ வைட் ஆகிய நிறங்​களில் 2025-ம் ஆண்​டின் ‘ஹண்​டர் 350’ அறி​முக​மாகி​யுள்​ளது. புதிய சஸ்​பென்​சன், எல்​இடி லைட், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், வழி​காட்​டும் டிரிப்​பர் என பல்​வேறு நவீன வசதி​கள் இதில் இடம்​பெற்​றுள்​ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online...

‘CMF போன் 2 புரோ’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் ‘CMF போன் 2 புரோ’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது நத்திங் நிறுவனம். முதல் முறையாக இந்த போனுடன் சார்ஜரையும் வழங்குகிறது நத்திங். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டில் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RPq5b04

ரியல்மி 14T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் - விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்தியாவில் ரியல்மி 14T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இது மிட்-செக்மென்ட் ரேஞ்ச் விலை பிரிவு போனாக சந்தையில் வெளிவந்துள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6haqitk

விவோ T4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் - விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மிட் செக்மென்ட் மாடலாக வெளிவந்துள்ளது இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதில் ஏராளமான ஏஐ அம்சங்களும் உள்ளன. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CWryj7f

ஒப்போ K13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் - விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JsLiyON

சாம்சங் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் சாம்சங் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். நீண்ட காலத்துக்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XH6KREj

பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ5 போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: அண்மையில் இந்தியாவில் பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sXUlVQj

iQOO Z10x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z10x ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதே போனுடன் iQOO Z10 ஸ்மார்ட்போனும் வெளிவந்துள்ளது. சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z10x ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iaSR5Hr

இந்தியா டு அமெரிக்கா பறந்த 15 லட்சம் சாதனங்கள்! - வரி விதிப்பை தவிர்க்க ஆப்பிள் வியூகம்

படம்
சென்னை: உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும் இதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக புதன்கிழமை (ஏப்.9) அன்று ட்ரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து சுமார் 1.5 மில்லியன் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவுக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொபைல் போன், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அந்த நிறுவனத்தின் சாதனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளாக சீனா, இந்தியா உள்ளன. சீனாவுக்கு பரஸ்பர வரி விதிப்பை நிறுத்த முடியாது என ட்ரம்ப் கூறியுள்ளார். இரண்டு தரப்பும் வரிகளை அன்றாடம் கூட்டி வருகின்றன. கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வரி விதிப்பு யுத்தம் மூண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PabK8Ek

விவோ வி50e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி50e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். 5,600mAh கொண்ட போன்களில் மிகவும் ஸ்லிம்மான போனாக இது உள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LKEzqaR

எழுத்துரு வடிவில் தமிழுக்கு வந்த சோதனை! - ஆப்பிள் சாதன பயனர்கள் வேதனை

படம்
சங்க காலங்களில் ஓலைச்சுவடிகளில் தமிழ் எழுதப்பட்டது, கல்வெட்டுகளில் தமிழ் செதுக்கப்பட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டிஜிட்டல் சாதனத்தின் விசைப்பலகையில் தமிழ் தட்டச்சு / உள்ளிட / எழுதப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மற்றும் மேக் சாதனங்களுக்கு இயங்குதள அப்டேட்களை அறிமுகம் செய்ய, அதன் ஊடாக புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதில் பயனர்களுக்கு குட் மற்றும் பேட் அனுபவமாக அமைந்துள்ளது. நல்ல செய்தி என்னவென்றால், தமிழ் உட்பட 10 இந்திய மொழிகளில் அந்த சாதனைகளின் பயனர்கள் கமெண்ட் கொடுக்கவும், மெனுக்களை பார்க்கவும் முடியும். அதே நேரத்தில் தமிழ் உட்பட 10 இந்திய மொழிகளின் எழுத்துருவும் (Font) மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, அதன் தரத்தை பயனர்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழ் எழுத்துகளுக்கே உரிய அழகியல் புதிய எழுத்துருவில் இல்லை என்பது அவர்களது சங்கடம். இது தொடர்பாக தங்களது எதிர்வினையை சமூக வலைதள பயனர்கள் மூலம் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழா...

ChatGPT-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசமாக கிடைக்கும்: ஓபன் ஏஐ சிஇஓ அறிவிப்பு

படம்
புதுடெல்லி: ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எங்கும் பரவிக் கிடக்கிறது ஸ்டூடியோ கிபிலி பாணியில் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் உருவாக்கிக் கொண்ட புகைப்படங்கள். செல்ஃபி எடுத்து அதை கிபிலி பாணி இமேஜாக மாற்றுவது தொடங்கி அரசியல் பிரபலங்கள் படம் வரை இந்த பாணியில் ஜெனரேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qT75vkd