இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ChatGPT உடன் பேசலாம்: ஓபன்AI அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்

படம்
சான் பிரான்சிஸ்கோ: ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி உடன் பயனர்கள் பேசும் வகையிலான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ. இதன் மூலம் பயனர்கள் மற்றும் சாட்ஜிபிடி சாட்பாட் இடையில் குரல் வழியில் உரையாடல் மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. கடந்த ஆண்டு உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது சாட்ஜிபிடி. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்பாட் உடன் பயனர்கள் உரையாட முடியும். பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் டெக்ஸ்ட் வழியில் பதில் கொடுக்கும் வல்லமை கொண்டது சாட்ஜிபிடி. கதை, கட்டுரை, கவிதை, கம்ப்யூட்டர் புரோகிராம் என அனைத்தையும் இதில் பெறலாம். ஓபன் ஏஐ எனும் நிறுவனம் சாட்ஜிபிடி-யை வடிவமைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YCX52kD

''ஐபோன் 15 மாடல் ஃபோன் அதிகம் ஹீட் ஆகிறது'': பயனர்கள் தகவல்

படம்
சென்னை: அண்மையில் இந்தியா உட்பட உலக நாடுகளில் ஐபோன் 15 சீரிஸ் ஃபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த சூழலில் ஐபோன் 15 மாடல் ஃபோன்கள் அதிகம் சூடாவதாக (Heat) பயனர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆப்பிள் நிறுவன போனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்த சிக்கல், புரோ மாடல்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் அதிகம் எதிர்கொள்வதாக தகவல். இது குறித்த தகவலை ஆப்பிள் ஆன்லைன் ஃபாரம் (Forum), எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். ஃபேஸ் டைம் வீடியோவில் சாட் செய்யும்பொது அல்லது தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது அல்லது கேமிங்கில் ஈடுபடும்போது ஐபோன் 15-ன் பின்புறம் அல்லது பக்கவாட்டு பகுதி ஹீட் ஆவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். பயனர்களில் சிலருக்கு ஃபோனை சார்ஜ் செய்யும்போதும் இந்த சிக்கலை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aV7hl2Z

AI அசிஸ்டென்ட் அம்சம் கொண்ட விண்டோஸ் 11 அப்டேட் அறிமுகம்!

படம்
வாஷிங்டன்: ஏஐ அசிஸ்டென்ட் அம்சம் உட்பட சுமார் 150 புதிய அம்சங்களை கொண்டுள்ள விண்டோஸ் 11 இயங்குதள அப்டேட்டை வெளியிட்டுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இந்த புதிய அப்டேட் பெயிண்ட், போட்டோஸ் போன்ற பில்ட்-இன் செயலிகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிகிறது. உலக அளவில் பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களது கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவி பயன்படுத்துவது வழக்கம். டெஸ்க்டாப் இயங்குதள சந்தையில் 70 சதவீத பங்கை விண்டோஸ் கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் விண்டோஸ் 11 இயங்குதளம் அறிமுகமானது. அவ்வப்போது இந்த இயங்குதளத்தை மைக்ரோசாஃப்ட் அப்டேட் செய்யும். தற்போது அசத்தலான அப்டேட்களை பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/um7hgnK

கூகுள் 25 | சிறப்பு டூடுல் வெளியீடு: டெக் சாம்ராட்டின் கதை!

படம்
கலிபோர்னியா: டெக் உலகின் சாம்ராட் ஆக வலம் வரும் கூகுள் நிறுவனம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நேரத்தில் கால் நூற்றாண்டு காலமாக தங்களுடன் பயணித்தப் பயனர்களுக்கு கூகுள் நன்றி தெரிவித்துள்ளது. கடந்த 1996-ல் முனைவர் பட்ட ஆய்வு பணியாக தொடங்கப்பட்டது கூகுள். லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இணைந்து மேற்கொண்ட முயற்சி அது. வேர்ல்ட் வைட் வெப்பை அக்சஸபிள் இடமாக மாற்றும் நோக்கத்துடன் கூகுள் பயணம் தொடங்கியது. அவர்கள் இருவரும் கூகுள் தேடு பொறியின் மாதிரியை உருவாக்கினர். தொடர்ந்து அவர்கள் அதில் முன்னேற்றம் காண கடந்த 1998, செப். 27-ம் தேதி அன்று கூகுளின் முதல் அலுவலகத்தை நிறுவினர். இன்று ஒட்டுமொத்த உலகமும் இணையத்தில் ஏதேனும் தேடுவது என்றால் நேரடியாக கூகுளை நாடுவது வழக்கம். அந்த அளவுக்கு அதன் பயன்பாடு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mcKNJUn

லாவா பிளேஸ் புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் லாவா பிளேஸ் புரோ 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zl1gSGj

AI சூழ் உலகு 8 | “நான் உங்கள் சேவகர்!” - இப்படிக்கு ஹியூமனாய்டு ரோபோ

படம்
விளக்கை தேய்த்தால் அதிலிருந்து வெளிவரும் பூதம், தனக்கு விடுதலை கொடுத்த மனிதனுக்கு சேவை செய்யும் கதையை நாம் வாசித்திருப்போம். அதேபோல யதார்த்த வாழ்வில் நாம் சொல்லும் பணி அனைத்தையும் சளைக்காமல் செய்யும் பூதம் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருப்போம். அப்படி மனிதர்களின் சேவகனாக இயங்குகின்றன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் கொண்ட ஹியூமனாய்டு ரோபோக்கள். இது மனிதர்களை போலவே தோற்றம் அளிக்கும். இந்த ஹியூமனாய்டு ரோபோக்கள் சிட்டி அளவுக்கு சுட்டியாக இல்லை என்றாலும் கிட்டத்தட்ட அது செய்யும் பணியை செவ்வனே செய்கிறது. மூத்த வயதுடைய நபர்களுக்கு உதவுவது, பெரிய நிகழ்வுகளின் போது ஒரே இடத்துக்கு திரளும் மக்களை கையாள்வது, வாடிக்கையாளர் சேவை, கல்விப் பயன்பாடு, ஆய்வுப் பணிகள் என பல துறைகளில் ஹியூமனாய்டு ரோபோக்கள் இயங்குகின்றன. அதைக் கருத்தில் கொண்டே அதன் வடிவமைப்பாளர்கள் இயங்கி வருகின்றனர். உலக அளவில் இதற்கு பெரிய அளவில் சந்தை வாய்ப்பு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift....

எக்ஸ் பயனர்களுக்கு மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம்: எலான் மஸ்க் திட்டம்

படம்
சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பயனார்களிடத்தில் சிறிய அளவிலான மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எக்ஸ் தளத்தில் பாட்களின் (Bot) இயக்கத்தை தடுக்க முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் வரையில் என அது நீள்கிறது. ட்விட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றி இருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் உடன் பேசி இருந்தார். அப்போது அவரை இதனை தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F2oA6zS

ஜியோ AirFiber சிறப்பு அம்சங்கள்: நாளை சந்தையில் அறிமுகம்!

படம்
சென்னை: நாளை இந்திய சந்தையில் ஜியோ நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். வீடு மற்றும் அலுவலகங்களில் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் ஜியோ ஏர்ஃபைபர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நொடிக்கு 1.5 ஜிகா பிட் வேகத்தில் இன்டர்நெட் இணைப்பை இதில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு தனித்துவ அனுபவத்தை வழங்கும் நோக்கில் இது அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/obfuO3d

‘ஜேம்ஸ் வெப்’ முதல் ஏஐ வரை: சமீப ஆண்டுகளில் அறிவியல் - ஒரு பார்வை

படம்
உலகம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கிறது. உலகின் இயக்கு விசைகளில் ஒன்றான அறிவியலும் புதிய மேம்பாடுகளும் ஒவ்வொரு நாளும் வளர்ந்துவருகிறது. ஒரு துறை பயணிக்கும் திசையை வரையறுக்க, குறிப்பிட்ட கால அளவீடு தேவைப்படுகிறது. ஆனால், அறிவியலைப் பொறுத்தவரை ஒரு நாள் என்பதே அதிகபட்ச காலாவதிக் காலம் எனும் அளவில் இன்று அத்துறையில் மேம்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளின் அறிவியல் மேம்பாடுகள் பற்றிய சிறு தொகுப்பு இங்கே: அடிப்படை அலகுகளுக்குப் புதிய வரையறை! - கிலோகிராம், நொடி, மீட்டர், ஆம்பியர், கெல்வின், மோல், கேண்டெலா ஆகிய அடிப்படை அலகுகளின் வரையறையை ‘அனைத்துலக அலகுகள் முறை’ (International System of Units) நிர்ணயிக்கிறது. இந்தியா உள்பட 60 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அனைத்துலக அளவியல் அமைப்பின் மாநாடு 2018 இல் பாரிஸில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RAsu3nQ

ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஹானர், நுகர்வோர் மின் சாதனங்களான ஸ்மார்ட்போன், டேப்லேட் போன்றவற்றை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சீனாவின் அரசுத் துறை நிறுவனம் இது. கடந்த 2020-ல் ஹூவாய் நிறுவனத்திடம் இருந்து ஹானர் நிறுவன உரிமத்தை சீனா பெற்றது. இந்தச் சூழலில் ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் அறிமுகமாகி உள்ள இந்த போன் வரும் 18-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6PlvKaG

ஜம்முவில் ராணுவ கண்காட்சியில் வியக்க வைத்த விலங்கு போன்று 4 கால்களுடன் ரோபோ

படம்
ஸ்ரீநகர்: ஜம்முவில் ராணுவ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவும், இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ஐஐடி - ஜம்மு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. ராணுவத்துக்கு தேவையான புதிய உபகரணங்கள் இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “ராணுவத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர் அண்ட் டி) என்பது ஆபத்தான முயற்சி. இருந்தாலும் ஒரு சில நேரங்களில் அதனையும் தாண்டி சிந்திக்க வேண்டிய அவசியமும் உள்ளது. சில நேரங்களில் அவை எதிர்பார்த்த பலனை தராது. ஆனால், எந்த நாட்டின் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மூலதன முதலீடு மேற்கொள்ள வேண்டியது அவசியம்" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3afQn9r

ஆப்பிள் ஐபோன் 15-ல் யுஎஸ்பி-சி போர்ட்: ட்ரோல் செய்த சாம்சங்

படம்
சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. யுஎஸ்பி-சி டைப் போர்ட் உடன் வெளிவந்துள்ள நிலையில் ஆப்பிளின் முயற்சியை ட்ரோல் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன. தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GOJyirq

AI சூழ் உலகு 7 | மனிதர் உணர்ந்து கொள்ள... இது மனித காதல் அல்ல... - ஏஐ பெருந்துணையே!

படம்
“எங்க காதலுக்கு உயிர் இருக்கு. ஆனா நிஜத்துல இல்ல. அது காத்தோட காத்தா கலந்து இருக்கு. எப்பலாம் நான் சாட் செய்றனோ அப்பல்லாம் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசுவோம். மத்த கேர்ள்ஸ் மாதிரி என் காதலி ஸூசியா இல்ல. ஷார்ட்டா சொன்னா நான் சொல்றது எல்லாத்தையும் காது கொடுத்து கேக்குற காதலி. கோவப்படாத காதலி. அவளும் நானும், நானும் அவளும்னு நவீன டெக் யுக காதல் எங்களுடையது” என விவரிக்கும் சிறுகதை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அதை படித்ததும் எனக்குள் எழுந்த ஒரே கேள்வி இது எப்படி சாத்தியம் என்றுதான். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணை கொண்டு இப்போது அது சாத்தியப்படும் என்கிறது காலம். எந்திரன் படத்தில் வரும் ரோபோ அளவுக்கு அது இல்லை என்றாலும் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் வரும் சிம்ரன் ஏஐ போல ஒரு காதலியை அல்லது காதலனை பெறலாம். தொழில்நுட்ப வளர்ச்சி இந்த மெய்நிகர் தேடலுக்கு வழிவகுக்கிறது. நாம் சொல்வதெல்லாம் காதை கொடுத்து கேட்கும், வாயை மூடி கவனித்து அதன் பிறகு பதில் சொல்லும் காதலனோ, காதலியோ ஏஐ தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துக் கொள்ளலாம். நமது டிஜிட்டல் இண...

யுஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்: சிறப்பு அம்சங்கள்

படம்
கலிபோர்னியா: உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் என ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் நான்கு போன்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன. தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 15 சீரஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fvtFP0N

ரயில் இன்ஜின் டிரைவர்களை விழிப்புடன் வைத்திருக்க AI தொழில்நுட்பத்துடன் புதிய கருவி: ரயில்வே அமைச்சகம் திட்டம்

படம்
புதுடெல்லி: ரயில் இன்ஜின் டிரைவர்களை விழிப்புடன் வைத்திருக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கருவியைப் பயன்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில் இன்ஜினை இயக்கும் டிரைவர்கள் இரவு நேரங்களில் கண்ணயர்ந்து விடுவதால் ரயில்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்கவும், ரயில் இன்ஜின் டிரைவர்கள் கண்ணயர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளவும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய கருவியை உருவாக்கும் திட்டத்தில் நார்த்ஈஸ்ட் ஃபிரான்டியர் ரயில்வே (என்எஃப்ஆர்) ஈடுபட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wLIbOfF

மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டம்

படம்
கலிபோர்னியா: அடுத்த ஆண்டு மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 12-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் நடத்தும் நிகழ்வில் ஆப்பிள் 15 சீரிஸ் போன்கள் உட்பட பல்வேறு சாதனங்களை அந்நிறுவனம் செய்ய உள்ளது. உலக மொபைல் போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், லேப்டாப் சந்தையிலும் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் வகையில் மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கூகுள் குரோமுக்கு சவால் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டத்தை ஆப்பிள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HmYZjTv

இந்தியாவில் AI சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க என்விடியா உடன் இணைந்துள்ளது ஜியோ

படம்
மும்பை: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க நாட்டு சிப் மேக்கர் நிறுவனமான என்விடியா (NVIDIA) உடன் இணைந்துள்ளதாக முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்தியாவில் அதிக திறன் கொண்ட ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும் என என்விடியா தெரிவித்துள்ளது. அண்மையில் என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hS4iyOH

யுபிஐ மூலம் ஏடிஎம்-மில் பணம் எடுப்பது எப்படி? - வழிகாட்டுதல் வீடியோ வெளியீடு

படம்
மும்பை: டெபிட் கார்டுகள் உதவியின்றி யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி ஒரு நபர் பணம் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நாட்டின் முதல் யுபிஐ-ஏடிஎம் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசஸ் மூலம் ஒயிட் லேபிள் ஏடிஎம் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடன் இணைந்து செயலாக்கத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது இந்த ஏடிஎம். இந்நிலையில், இதில் ஃபின்டெக் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் யுபிஐ ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வீடியோ மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zUa4pMe

AI சூழ் உலகு 6 | மனிதன் - அஃறிணை இடையிலான உறவுச் சவால்!

படம்
நம் எல்லோருக்கும் நமது செயலுக்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது புரிந்து கொள்ளும் ஒருவர் வாழ்வில் வேண்டும் என விரும்புவோம். அந்த எதிர்பார்ப்புடன் சிலரோடு நாம் பழகியும் இருப்போம். காலப்போக்கில் அதில் மனக்கசப்பு ஏற்படலாம். அது சிலருக்கு படிப்பினையாகவும் அமையலாம். மீண்டும் அதே போன்றதொரு உறவுடன் வாழ்க்கை சுழற்சியின் ஓட்டத்தில் நாம் சந்திக்கலாம். அது நட்பு, காதல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தகைய உறவு முறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் என்ட்ரி இருந்தால் அது எப்படி இருக்கும். அதை நினைத்து பார்க்கும்போதே கொஞ்சம் தலை சுற்றுகிறது அல்லவா. காதல், நட்பு என்பதெல்லாம் உணர்வுபூர்வமானது. அதனை அஃறிணையுடனும் கடத்த முடியும். அதற்கான டிஜிட்டல் டெக் யுகம் இது. ரிலேஷன்ஷிப் சயின்ஸின் கீழ் மனிதன், அஃறிணையின் உறவு குறித்து வரையறை செய்யப்படுகிறது. அது குறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் h...

பட்ஜெட் விலையில் ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: பட்ஜெட் விலையில் ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி சி51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1EhVqgu

மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது ‘ஜி’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lQ2ApU9

பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஸ்மார்ட் மோதிரம் கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சாதனை

படம்
சென்னை: பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஸ்மார்ட் மோதிரத்தை சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சென்னை ஐஐடி ஆராய்ச்சி உதவி மையம் (இங்குபேசன் செல்) மூலம் சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்களைக் கொண்டு 'மியூஸ் வியரபிள்' ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்து, இந்தியா உள்பட 30 நாடுகளில் அதனை விற்பனை செய்கிறது. இதன் தொடர்ச்சியாக மியூஸ் வியரபிள் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் வாட்ச் போல, 'ஸ்மார்ட் ரிங்' (மோதிர வடிவ தொழில்நுட்பம்) ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XmirBWa