இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபர் ஆனார் எலான் மஸ்க்!

படம்
சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபர் ஆகியுள்ளார் எலான் மஸ்க். இந்த தளத்தில் இதற்கு முன்னர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிக ஃபாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார் மஸ்க். ட்விட்டர் தளத்தில் படு ஆக்டிவாக இயங்கி வருபவர் மஸ்க். அவர் இந்த தளத்தில் பேசாத டாபிக் இல்லை. சமயங்களில் மற்ற பயனர்களின் ட்வீட்களுக்கும் பதில் கொடுப்பார். அதன் காரணமாக தற்போது சுமார் 13,30,98,701 ஃபாலோயர்களை கொண்டுள்ளார் மஸ்க். கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் 100 மில்லியன் ஃபாலோயர்களை மஸ்க் பெற்றார். மறுபுறம் ஒபாமா சுமார் 13,30,41,441 கொண்டுள்ளார். பெரும்பாலும் ப்ரொபஷனலாக மட்டுமே ட்விட்டர் தளத்தை அவர் பயன்படுத்துவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NFf0nTg

சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் உதவி; பொதுமக்கள் இழந்த ரூ.235 கோடி மீட்பு - மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

படம்
புதுடெல்லி: நாட்டில் சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ரூ.235 கோடியை உடனடியாக மீட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு சைபர் குற்றங்களைக் கையாள்வதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இணைய மோசடியால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகாரளிக்க கட்டணமில்லா உதவி எண் ‘‘1930” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் புகார்களை பதிவு செய்யும்போது அது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்வதற்கும், நடவடிக்கை மேற்கொள்வதற்கும் உதவியாக உள்ளது. இதுவரை 40,000 புகார்கள் எப்ஐஆர்-களாக மாற்றப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AFfBLO8

மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வரும் ஏப்ரல் 5-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LoB3dbR

கொலை வழக்கில் ஜாமீன் கேட்ட குற்றவாளி: சாட் ஜிபிடி உதவியை நாடிய பஞ்சாப் நீதிமன்றம்!

படம்
சண்டிகர்: கொலை வழக்கில் கைதான குற்றவாளியின் ஜாமீன் மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி அனுப் சித்கரா, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாட் ஜிபிடி-யின் உதவியை நாடியுள்ளார். அதுவும் குற்றவாளிக்கு இந்த வழக்கின் சாரம்சத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாமீன் வழங்கலாமா என நீதிபதி சாட் ஜிபிடியில் வினவியுள்ளார். இந்திய நீதித்துறையில் இது முதல் முறை எனத் தெரிகிறது. கடந்த 2020-ல் ஜஸ்வி என்ற ஜஸ்விந்தர் சிங், லூதியானாவில் உள்ள சிம்லாபுரி காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். அவரும், அவரது கூட்டாளிகளும் சில மீது நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதுதான் அவர் மீதான குற்றம். அவரது ஜாமீன் மனுவை பஞ்சாப் அரசு தரப்பு எதிர்த்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/J78bljP

25% குறைந்த கல்லூரி வளாக ஆட்தேர்வு? - ஐடி, தொழில்நுட்ப துறையில் நிகழும் பணி நீக்க எதிரொலி

படம்
சென்னை: தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டெக்னாலஜி துறை நிறுவனங்கள் உலக அளவில் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதனால் இந்தியாவை சேர்ந்த ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இந்தியாவில் கல்லூரி வளாகத் தேர்வு சுமார் 25 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வணிகம் சார்ந்த செய்திகளை வெளியிட்டு வரும் முன்னணி இணைய ஊடக நிறுவனத்திடம் அவர்கள் பகிர்ந்து கொண்டது. “தற்போதைய மந்தநிலை இந்த ஆண்டு வளாகத் தேர்வை நிச்சயமாக பாதித்துள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஆட்தேர்வு திட்டத்தை மிகுந்த கவனமாக கையாண்டு வருகிறது. அதன் எதிரொலியாக நடப்பு ஆண்டில் வளாகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறையலாம்” என ஃபோர்கைட்ஸ் மனித வள இயக்குநர் (APAC) கல்யாண் துரைராஜ் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Em...

இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். வரும் ஏப்ரல் 3-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ எனும் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h8yp2mb

36 செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன: இஸ்ரோ விஞ்ஞானிகள்

படம்
ஸ்ரீஹரிகோட்டா: ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்கள், திட்டமிட்டபடி விண்ணில் அதன் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்த, அந்நிறுவனத்துடன் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. வணிக நோக்கிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதல்கட்டமாக, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xD2lPXb

இந்தியாவில் சாம்சங் கேலக்சி F14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். வரும் 30-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை துவங்க உள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது கேலக்சி F14 5ஜி ஸ்மார்ட்போன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PctubG6

யூடியூப் வீடியோவை 'லைக்' செய்தால் பணம்: வெளிச்சத்துக்கு வந்த புதிய ரக இணையவழி மோசடி

படம்
சென்னை: சைபர் க்ரைம் மோசடிகளின் வரிசையில் புதிதாக யூடியூப் வீடியோவை `லைக்' செய்தால் பணம் கிடைக்கும் எனக்கூறி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, கவனமாக இருக்க சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப உலகத்தில் ஸ்மார்ட்போன் பிரிக்க முடியாத சக்தியாக மாறிவிட்டது. போன்பயன்படுத்தாதோரின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DQmHtfI

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் 'ப்ளூ டிக்' கட்டண சந்தாவை தொடங்கிய மெட்டா

படம்
சான் பிரான்சிஸ்கோ: தங்களது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளுக்கு 'ப்ளூ டிக்' பெற விரும்பும் பயனர்கள் சந்தா செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளும் புதிய முறையை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்போதைக்கு இது அமெரிக்க நாட்டில் மட்டுமே நடைமுறைக்கு வந்ததாக தெரிகிறது. ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து பயனர்களுக்கு 'ப்ளூ டிக்' கட்டண சந்தாவை மெட்டா நிறுவனமும் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது மெட்டா. இப்போது இதனை கட்டண சந்தா முறையில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1SU4B8e

சாட் - ஜிபிடிக்கு போட்டியாக சீனா புதிய மென்பொருள் அறிமுகம்

படம்
பெய்ஜிங் : கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓப்பன் ஏஐ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் ‘சாட்ஜிபிடி’ மென்பொருளை அறிமுகம் செய்தது. இணையப் பயன்பாட்டில் சாட்ஜிபிடி பெரும் தாக்கம் செலுத்தி வருகிறது. தொழில், மருத்துவம், கல்வி, நிதி சேவை, தொலைத் தொடர்பு, மென்பொருள், நீதி, போக்குவரத்து, தயாரிப்புத் துறை, சுற்றுலா, பொழுதுபோக்கு, விளம்பரம், நுகர்வோர் சேவை உள்ளிட்டவை சாட்ஜிபிடியால் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ChpBSwe

10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம்: இணையவழியில் 3 மாதங்களுக்கு இலவசம்!

படம்
சென்னை: 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாத ஆதாரில், ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஆண்டு தெரிவித்தது. இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் மக்கள் இலவசமாக புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை மட்டுமே இந்த இலவச சேவை கிடைக்கும். ‘ மை ஆதார் ’ எனும் தளத்தில் இலவசமாக இந்த புதுப்பிப்பு பணியை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பித்தால் அதற்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/b6Yaf9A

சாம்சங் கேலக்சி ஏ34, ஏ54 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: சாம்சங் கேலக்சி ஏ34 மற்றும் ஏ54 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஐந்து ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் நான்கு இயங்குதள அப்டேட் இதில் கிடைக்கும் எனத் தகவல். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது கேலக்சி ஏ34 மற்றும் ஏ54 ஸ்மார்ட்போன். வரும் 28-ஆம் தேதி முதல் இந்த போன்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏ34 சிறப்பு அம்சங்கள்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7DAaYNk

ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி சி33 2023 எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mN52Z9M

தேவையற்ற குழுக்களை நீக்க வாட்ஸ்அப் பயனர்களுக்கு உதவும் புதிய அம்சம்: விரைவில் அறிமுகம்?

படம்
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தில் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத குழுக்களை நீக்க புதிய அம்சம் ஒன்று வெகு விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் மெமரியை சேமிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AFqeGPo

இந்திய சந்தையில் அறிமுகமான மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ரூ.20,000-க்கு குறைவான விலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் இது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் அந்நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ் வரிசையில் ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zsMDVPZ

மகளிர் தினம் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

படம்
சான் பிரான்சிஸ்கோ: ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெண்களை போற்றி வரும் இந்த நேரத்தில் கூகுள் நிறுவனம் பெண்களை போற்றும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. டெக்னாலஜி உலகின் சாம்ராட்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் இந்த பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GraTXQ1

300 ஏக்கரில் ஆலை, 700 மில்லியன் டாலர் முதலீடு, 1 லட்சம் பேருக்கு வேலை: இந்தியாவில் ஃபாக்ஸ்கான் பலே திட்டம்

படம்
பெங்களூரு: இந்தியாவில் பெங்களூருவுக்கு அருகே சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் போன் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சுமார் 700 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாகவும், 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிகிறது. இதை கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் தெரிவித்துள்ளனர். உலக அளவில் தொழில்நுட்ப சாதனங்களை விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரதான உற்பத்தியாளராக இயங்கி வருகிறது ஃபாக்ஸ்கான். தைவானை தலைமையிடமாக கொண்டுள்ள இந்நிறுவனத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் முழுவதும் (இந்தியா உட்பட) தொழிற்சாலைகள் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0BF5Mcb

ஒப்போ முதல் மோட்டோ வரை: MWC-ல் கலக்கிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்

படம்
பார்சிலோனா: நடப்பு ஆண்டுக்கான ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற பார்சிலோனா மொபைல் வேர்ல்ட் மாநாட்டில் ஒப்போ, டெக்னோ, ஹானர், மோட்டோரோலா போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய வகையிலான ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை டெமோ காட்டி உள்ளன. இது இந்த நிகழ்வின் ஹைலைட்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இன்றைய ஸ்மார்ட் டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் இருக்கும் என கணித்திருக்கமாட்டார். அந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது செல்போன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RPvt2ci

உலகின் மலிவு விலை 5ஜி சந்தையாக இந்தியா திகழும்: பில் கேட்ஸ் புகழாரம்

படம்
டெல்லி: உலகின் மலிவு விலை 5ஜி சந்தையாக இந்திய நாடு திகழும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி20 தொடர்பான நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதன் காரணமாக உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக அவர் திகழ்கிறார். இப்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m8LIXf3

பிரைம்புக் 4ஜி: மாணவர்களுக்கான மலிவு விலை லேப்டாப் | சிறப்பு அம்சங்கள்

படம்
டெல்லி: இன்றைய டெக் யுகத்தில் கற்றலில் புதுமை முறையான இணையவழியில் மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர். இருந்தாலும் இந்தியாவில் சுமார் 23 கோடி குழந்தைகளுக்கு லேப்டாப் சாதனத்தின் அணுகல் கிடைக்கப்பெறவில்லை என சொல்லப்படுகிறது. அதன் காரணமாக இணையவழி கற்றலின் பலனை அவர்கள் முறையாக பெறுவதில்லையாம். அதற்கு தீர்வு காணும் நோக்கில் மலிவு விலையில் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது பிரைம்புக். ஷார்க் டேங்க் சீசன் 2 மூலம் நிதியுதவி பெற்று நிறுவப்பட்ட நிறுவனம்தான் பிரைம்புக். தற்போது இந்திய சந்தையில் ‘பிரைம்புக் 4ஜி’ என்ற மலிவு விலையிலான லேப்டாப்பை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வரும் 11-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இது விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fDkUdQt

ரோபோ டீச்சர் | கர்நாடக பள்ளியில் பாடம் நடத்தும் ஹியூமனாய்டு!

படம்
இன்றைய டெக் யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இத்தகைய சூழலில் கர்நாடக மாநிலத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஹியூமனாய்டு ரோபோவை இயற்பியல் பேராசிரியர் ஒருவர் வடிவமைத்துள்ளார். இந்த ரோபோவின் பெயர் ‘சிக்‌ஷா’ என அறியப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YWtThsc

ஊழியர்கள் பணிநீக்கம் எதிரொலி? - உலக அளவில் ட்விட்டர் சேவை முடங்கியதாக பயனர்கள் புகார்

படம்
சான்பிரான்சிஸ்கோ: உலக அளவில் ட்விட்டர் தள சேவைகள் முடங்கியுள்ளதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். #Twitterdown என பயனர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 200 ஊழியர்களை மஸ்க், பணி நீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார் எலான் மஸ்க். அப்போது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் ட்விட்டர் தளத்தில் மேற்கொண்டு வருகிறார். அதில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் அடங்கும். அதே நேரத்தில் அண்மைய காலமாக ட்விட்டர் தள சேவைகள் முடக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக நிரந்தர தீர்வை காண தனது குழுவினருடன் பணி செய்து வருவதாக மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனாலும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dHacrYA

இந்தியச் சந்தையில் விவோ வி27 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி27 சீரிஸ் வரிசையில் இடம்பெற்றுள்ள விவோ வி27 மற்றும் வி27 புரோ என இரண்டு போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் வி27 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QYUcXV