இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ட்விட்டர் பயனரின் அடையாளத்தை உறுதிபடுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி மாதக் கட்டணம்?

படம்
ட்விட்டரின் புதிய உரிமையாளராக எலான் மஸ்க் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதில் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் இறுதியில் சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். இருந்தாலும் இரு தரப்புக்குமான டீல் இழுபறியாக இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்ற நிலையில, ஒருவழியாக ட்விட்டர் இப்போது மஸ்க் வசம் ஆகியுள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டரில் வார்த்தைகள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆலோசித்து வரும் வேளையில், பயனர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக் முறைக்கு கட்டணம் வசூலிக்கும் வழிமுறை குறித்து ஆராயுமாறு தனது ஊழியர்களுக்கு எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Onli...

மீண்டும் வருகிறதா ‘இந்திய பப்ஜி’? - கிராஃப்டன் சூசக தகவல்

படம்
சங்நம்: மீண்டும் இந்தியாவில் Battlegrounds Mobile India கேம் கம்பேக் கொடுக்கும் எனத் தெரிகிறது. இதனை கிராஃப்டன் வீடியோ கேம் நிறுவனம் பிஜிஎம்ஐ இந்திய தளத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டு சூசகமாக தெரிவித்துள்ளது. சுமார் நான்கு வீடியோக்கள் புதிதாக அந்த தளத்தில் அப்லோட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் வாக்கில் தென் கொரிய நிறுவனமான கிராஃப்டன் பிளேயர் சப்போர்ட் என்ற யூடியூப் சேனலையும் அந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. தற்போது அதில் வீடியோக்களை அப்லோட் செய்துள்ளது. இருந்தாலும் இதனை பொது வெளியில் அனைவரும் பார்க்கும் வகையில் அப்லோட் செய்யப்படவில்லை. பிஜிஎம்ஐ இந்திய தளத்தில் புதிய வீடியோக்களை சப்போர்ட் செக்‌ஷனில் பார்க்கலாம். இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் இந்த கேம் கம்பேக் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z7aUPxE

வாட்ஸ்அப் முடக்கத்திற்கு காரணம் என்ன? - மெட்டாவிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு

படம்
புதுடெல்லி: உலக அளவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வாட்ஸ்அப் தளம் முடங்கியது. அதனால் அந்த தளத்தில் பயனர்களால் தொடர்பு மேற்கொள்ள முடியாமல் தவித்தனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் முடக்கத்திற்கான காரணம் குறித்து அதன் தாய் நிறுவனமான மெட்டா வசம் இந்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரப்பில் மெட்டாவை தொடர்பு கொண்டுள்ளது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KibTvIP

ஐபோன் மாடல்களில் 'டைப் சி' சார்ஜிங் போர்ட்: ஆப்பிள் பிரதிநிதி தகவல்

படம்
வரும் 2024 முதல் அனைத்து டிஜிட்டல் டிவைஸ்களும் ‘டைப் சி’ சார்ஜிங் போர்ட்களை கொண்டிருக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐபோன் மாடல்களில் லைட்னிங் கேபிளுக்கு மாற்றாக 'டைப் சி' சார்ஜிங் போர்ட் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது எப்போது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படவில்லை. இதனை ஆப்பிள் மார்க்கெட்டிங் தலைவர் கிரெக் ஜோஸ்வியாக் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன்னர் ஆப்பிள் நிறுவனத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைய தரப்புக்கும் சார்ஜர் போர்ட் விவகாரத்தில் உள்ள கருத்து முரண் இருந்தது குறித்தும் அவர் பேசி இருந்தார். அப்போது ஆப்பிள் சாதனங்களில் மைக்ரோ யூஎஸ்பி வேண்டும் என ஆணையத்தின் தரப்பில் சொல்லப்பட்டது வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அப்போது அது நடந்திருந்தால் டைப் சி போர்டுக்கு மாறி இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: ...

உலகளவில் 2 மணி நேரம் முடங்கியதற்கான காரணம் இதுதான்: வாட்ஸ்அப் விளக்கம்

படம்
கலிபோர்னியா: உலகளவில் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியது. இதன் காரணமாக மில்லியன் கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்நிலையில், இந்த முடக்கத்திற்கான காரணம் குறித்து வாட்ஸ்அப் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மெசெஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/75GiDal

இயல்பு நிலைக்கு திரும்பியது வாட்ஸ்அப் சேவை: பயனர்கள் மகிழ்ச்சி

படம்
கலிபோர்னியா: வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன் காரணமாக அந்த தளத்தின் பயனர்கள் குஷியாகி உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் சேவை முடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் பயனர்கள் செய்வதறியாது தவித்து வந்தனர். வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். இந்த சூழலில்தான் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பயனர்கள் வாட்ஸ்அப் தள சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Zui9dSL

இந்தியா உட்பட உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்அப் சேவை: ட்விட்டரை முற்றுகையிடும் பயனர்கள்

படம்
சென்னை: இந்தியா உட்பட உலகம் முழுவதும் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் முடங்கியது. இதனால், வாட்ஸ்அப் பயனர்கள் உண்மையில் அந்த தளம் முடங்கி உள்ளதா என்பதை அறிந்துகொள்ள ட்விட்டர் தளத்தை விசிட் செய்த வண்ணம் உள்ளனர். சிலர் தெறிக்கும் வகையில் மீம்களையும் பகிர்ந்து வருகின்றனர். வாட்ஸ்அப் சேவையை ஒரு பயனர் பெற மொபைல் எண்ணும், இணைய இணைப்பும் மட்டுமே போதுமானது. இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ளவர்களை மிகவும் சிக்கனமான செலவில் பயனர்களால் ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் வழியாக தொடர்பு கொள்ள முடியும். இத்தகைய சூழலில்தான் வாட்ஸ்அப் தளம் தற்போது முடங்கி உள்ளது. பயனர்கள் அது குறித்து மிகவும் வேடிக்கையான வகையில் ட்வீட் செய்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dwHf8DF

வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் பயனர்கள் தவிப்பு - தொழில்நுட்ப கோளாறு?

படம்
கலிபோர்னியா: உலக அளவில் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் முடங்கியது. இது தொடர்பாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வாட்ஸ்அப் மெசேஞ்சரை பயன்படுத்தி பயனர்களால் தகவல் பரிமாற முடியாமல் தவித்தனர். பயனர்களும் இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் வேடிக்கையாக மீம் பதிவிட்டு வருகின்றனர் என்பதையும் பார்க்க முடிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kjh7Fry

காற்றின் தரத்தை அறிந்துகொள்ள உதவும் கூகுள் மேப்ஸ்: பயன்படுத்துவது எப்படி?

படம்
சென்னை: காற்றின் தரத்தை அறிந்துகொள்ளும் வசதி கூகுள் மேப்ஸ் தளத்தில் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் பகுதியில் உள்ள காற்றின் தரத்தை தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என்பது குறித்து பார்ப்போம். இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு புதிய இடத்திற்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொகேஷனை பகிர்ந்தால் போதும் உலகின் எந்த பகுதியில் உள்ள இடமானாலும் கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் மிகவும் பிரபலமானது. இந்த அப்ளிகேஷன் மூலம் பயனர்கள் காற்றின் தரத்தையும் அறிந்து கொள்ளலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QAlFUi6

‘மை ஆட் சென்டர்’ மூலம் விளம்பரங்களை பயனர்கள் கட்டுப்படுத்தலாம்: கூகுள் அறிவிப்பு

படம்
கலிபோர்னியா: ‘மை ஆட் சென்டர்’ மூலம் பயனர்கள் தாங்கள் பார்க்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்தலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. இதை அந்நிறுவனம் பிளாக் பதிவு மூலம் பகிர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த அம்சத்தை பயனர்கள் பெறுவர் எனவும், வெகு விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி வரும் ஒவ்வொருவரும் விளம்பரங்கள் குறுக்கிட்டு கொடுக்கும் சங்கடங்களை எதிர்கொண்டிருப்போம். அது டெக்ஸ்ட், வீடியோ என எல்லா கன்டென்டுக்கும் பொருந்தும். சமயங்களில் சம்பந்தமில்லாத விளம்பரங்கள் கூட டிஜிட்டல் சாதன பயனர்களுக்கு சங்கடம் கொடுக்கும். பெரும்பாலும் இணையத்தளத்தில் ஆக்டிவாக இயங்கும் நபர்கள் கூகுள் நிறுவன புராடெக்டுகளை தான் பயன்படுத்துவர். அதிலும் இது மாதிரியான விளம்பரங்கள் வரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Si50wUH

விரைவில் யூடியூபில் அறிமுகமாக உள்ள 'ஹேண்டில்ஸ்': முழு விவரம்

படம்
கலிபோர்னியா: வெகு விரைவில் யூடியூப் தளத்தில் ஹேண்டில்ஸ் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யூடியூப் தளத்தில் உள்ள கிரியேட்டர்ஸ் உட்பட பலரையும் சுலபமாக அடையாளம் கண்டு, தொடர்பு கொள்ள இந்த ஹேண்டில்ஸ் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிரியேட்டர்களுக்கு வீடியோவை அப்லோட் செய்யவும், கமெண்ட் செய்யவும் மட்டுமே யூடியூப் தளம் பயன்படுவதில்லை. அதையும் கடந்து பல பயன்களை இந்த தளம் வழங்கி வருகிறது. அதன் காரணமாக ஹேண்டில்ஸ் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் தரப்பில் அதன் பிளாக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4nxJcQp

ஹெக்சா இன்னோவேஷன் நிறுவனம் சார்பில் 5 வகையான மின்சார வாகனங்கள் அறிமுகம்

படம்
சென்னை: ஹெக்ஸா இன்னோவேஷன் நிறுவனம் மின்சாரத்தால் இயங்கும்5 வகையான இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஹெக்ஸா இன்னோவேஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெட்ரோல் விலைஉச்சத்தில் உள்ள நிலையில் பலரும் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்களை நாடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெக்ஸா இன்னோவேஷன் (Hexa innovation) நிறுவனம் இந்தியாவில் மின்சார மோட்டார் கொண்டு இயங்கும் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. உலக அளவிலான பலதரப்பட்ட தரக்கட்டுப்பாடு சோதனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, இந்நிறுவன இருசக்கர வாகனங்கள் தற்போது இந்தியச் சந்தைக்கு வந்துள்ளன. இந்தியாவின் மொத்த விற்பனை பிரதிநிதியாக அழகிரியா குழும நிறுவனம் செயல்படும் என ஹெக்ஸா இன்னோவேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l6PxAYQ

பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம்: நெட்ஃப்ளிக்ஸ் பலே திட்டம்

படம்
சான் பிரான்சிஸ்கோ: லாக்-இன் விவரங்களை அடுத்தவர்களுடன் பகிரும் பயனர்களிடத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்க உள்ளதாக ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. வருவாய் மற்றும் பதிவு செய்து பயன்படுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிவு காரணமாக பாதிக்கப்பட்டது அந்நிறுவனம். அதே நேரத்தில் நிறுவனத்தின் மந்தமான வளர்ச்சிக்கு பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டுகளை பகிர்வது முக்கியக் காரணம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். வரும் 2023 முதல் இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XrQJL3i

இந்தியாவில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் ‘ஏகே-203’ ரக துப்பாக்கிகள் தயாரிப்பு?

படம்
லக்னோ: நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் ‘ஏகே-203’ ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் பணி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த பணியை மேற்கொள்ள உள்ளன. இதனை ரஷ்ய தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி முகாமையான பிடிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2019 வாக்கில் தொடங்கப்பட்ட இந்த தனியார் லிமிடெட் நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் இதற்கான உற்பத்தி கூடத்தை நிறுவியுள்ளது. இந்த கூடத்தில் தான் ‘ஏகே-203’ ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pszoTUW

பட்ஜெட் விலையில் மோட்டோ E22s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை and அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் மோட்டோ E22s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதன் பேட்டரி மற்றும் டிஸ்பிளே என அனைத்தும் அசத்தலாக உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைய காலமாக வரிசையாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு களம் இறக்கி வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் E சீரிஸ் வரிசையில் E22s ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/x0pDTUE

கலாம் கண்ட கடைசி கனவை நனவாக்குவோம்

படம்
ஒரு காலத்தில் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருந்தது. ஏவுகணை தொழில்நுட்ப பரவலைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அமைப்பான எம்.டி.சி.ஆர்.-ன் கெடுபிடியால் இந்தியாவுக்கு ஏவுகணை தொழில்நுட்பம், தளவாட உதவிகள் கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழலில் அப்துல் கலாம் தலைமையில் கடந்த 1983-ம் ஆண்டு, தேடித் தாக்கும் (Guided missiles) ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தை இந்தியா தொடங்கியது. கலாமின் வழிகாட்டுதலில் இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உள்நாட்டிலேயே தேடித் தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. கலாம் விதைத்த விதையால் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா இப்போது பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக நீண்ட தொலைவு சீறிப் பாயக்கூடிய ஏவுகணைகளுக்கான ரீ-என்ட்ரி தொழில்நுட்பத்தை உள்நாட்டில் உருவாக்கியது மிகப்பெரிய சாதனையாகும். அதாவது ரீ-என்ட்ரி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் பூமிக்கு மேலே பல நூறு கிலோ மீட்டர் பயணித்துவிட்டு பின்னர் வானில் இருந்து பூமி நோக்கி திரும்பி இலக்கை தாக்கி அழிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India ...

ஃபேஸ்புக்கில் தொழில்நுட்ப கோளாறு? - ஃபாலோயர்களை அதிக அளவில் இழக்கும் பயனர்கள்

படம்
கலிபோர்னியா: ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனர்கள் பலர், தங்கள் ஃபாலோயர்களை அதிக அளவில் இழந்துள்ள நிலையில், மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸூகர்பெர்க்-கும் சுமார் 119 மில்லியன் ஃபாலோயர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட சமூக வலைதளமான ஃபேஸ்புக், சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. இந்த தளத்தில் போட்டோ, வீடியோ மற்றும் லிங்குகளை ஷேர் செய்யலாம். நண்பர்களுடன் கலந்துரையாடலாம். 112 மொழிகளில் இந்த தளம் இயங்கி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5d7XGeR

5ஜி சாதனங்களில் நவம்பர் மத்தியில் 5ஜி சப்போர்ட்:  சாம்சங் தகவல்; பிற நிறுவனங்களின் நிலை என்ன?

படம்
புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் 5ஜி தொலைத்தொடர்பு சாதனங்களில், அதற்கான நெட்வொர்க் வரும் நவம்பர் மத்தியில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு சாம்சங் இதனை தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bVKegJE

ஸ்மார்ட்போனில் 5ஜி பயன்படுத்த புதிய சிம் கார்டு தேவையா?

படம்
இந்தியாவில் கடந்த 1-ம் தேதி அன்று 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நாட்டின் சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளன. வரும் 2024-ல் நாடு முழுவதும் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை பெற புதிய சிம் கார்டுகள் தேவையா என்ற கேள்வியும், சந்தேகமும் மக்களுக்கு எழுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் விளக்கம் கொடுத்துள்ளன. அதோடு காவல் துறையும் இந்த விவகாரத்தில் மக்கள் அலர்ட்டாக இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sMpNWjq

பயனர்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை களவாடும் செயலிகள்: மெட்டா எச்சரிக்கை

படம்
கலிபோர்னியா: பயனர்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை களவாடும் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் செயலிகள் குறித்த அலர்ட்டை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செயலிகள் என்ன மாதிரியான வகையை சேர்ந்தது என்ற விவரத்தையும் மெட்டா தெரிவித்துள்ளது. 10 லட்சம் எண்ணிக்கையிலான பயனர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திடம் முன்கூட்டியே தெரிவித்து உள்ளதாகவும், சுமார் 400 செயலிகள் இந்தக் களவுப் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது. அதுவும் பயனர்களின் லாக்-இன் மூலம் இந்த விவரம் சேகரிக்கப்படுகிறதாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ajuhMZ5

ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்த UPSC | என்னென்ன தகவல்களை பெறலாம்?

படம்
புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதனை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் என்னென்ன தகவல்களை பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அனைவரும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gfHcO0V

ஓட்டுநர்கள் இல்லா மெட்ரோ ரயில் - சென்னையில் விரைவில் அறிமுகம்

படம்
சென்னை: ஓட்டுநர்கள் இல்லா மெட்ரோ ரயில், சென்னையில் விரைவில் அறிமுகம் ஆக உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் இரண்டு கட்டங்களாக மெட்ரோ ரயில் பணிகள் திட்டமிடப்பட்டன. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை, சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என முதல் கட்டம் 2 வழித்தடங்களைக் கொண்டது. இந்த முதல் கட்டத்தில், வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இந்த இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Jc5ZYiW

இந்தியாவில் 4ஜி மற்றும் 5ஜி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்வது எப்போது? வெளியான அறிவிப்பு

படம்
புதுடெல்லி: இந்தியாவில் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க் சேவையை அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் வழங்குவது எப்போது என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இதனை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக மேலாளருமான பிரவீன் குமார் புர்வார் தெரிவித்துள்ளார். கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 5ஜி சேவையை வழங்க உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக மேலாளருமான பிரவீன் குமார் புர்வார் இதனை தெரிவித்துள்ளார். மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் இதனை உறுதி செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/J1ZrWv9

5ஜி சேவை வழங்கும் ஜியோ, ஏர்டெல்: உங்கள் போனில் 5ஜி சப்போர்ட் உள்ளதா என்பதை அறிவது எப்படி?

படம்
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இப்போதைக்கு இந்த சேவை குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. இந்தச் சூழலில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் போனில் 5ஜி சப்போர்ட் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம். கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் எப்போது 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பூர்த்தி செய்துள்ளன. இருந்தாலும் அது இப்போதைக்கு குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MAocFVU

500 நாட்களில் 25,000 மொபைல் டவர்கள்: ரூ.26,000 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

படம்
புதுடெல்லி: 500 நாட்களில் 25,000 செல்போன் டவர்களை நிறுவ ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசு, இதற்காக ரூ.26,000 கோடி நிதி ஒக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு விவரம்: அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற மாநில தகவல்தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான டிஜிட்டல் இந்தியா மாநாட்டில், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், இந்தத் திட்டம் குறித்து அறிவித்தார். அப்போது பேசிய அமைச்சர், "டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க நாட்டின் ஒவ்வொரு மூலையையும் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. அதற்காக அடுத்து வரும் 500 நாட்களில் நாடுமுழுவதும் 25 ஆயிரம் செல்போன் டவர்களை நிறுவுவதற்கு ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wULXGcV

அக்.4 | விண்வெளி ஆராய்ச்சியில் உலகம் முதல்படி எடுத்து வைத்த மகத்தான நாள்: அப்படி என்ன சிறப்பு?

படம்
முன்பெல்லாம் குழந்தைகளுக்கு வானில் இருக்கும் நிலாவை காட்டி சோறு ஊட்டுவார்கள். ஆனால் இன்று செல்போனில் நிலவை ஸூம் செய்து குழந்தைகள் பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் விஞ்ஞானிகளின் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சியும், ஆய்வும், அதற்கு கிடைத்த வெற்றியும்தான். அவர்களது ஆய்வில் இதே நாளில் சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர் முக்கியமான வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி பல வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமைந்தது. அதன் மீதுதான் உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த இன்று போட்டி போட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா என பல நாடுகள் அந்த ரேஸில் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6gKn1ba

இந்தியாவில் 4ஜி சேவையை வேகமாக கொண்டு சேர்த்தது ஜியோ: அம்பானியை பாராட்டிய ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்

படம்
புதுடெல்லி: டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கிவைத்தார். அந்த நிகழ்வில், இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் பேசிய ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், இந்தியாவில் 4ஜி சேவையை வேகமாக கொண்டு சேர்த்ததற்காக முகேஷ் அம்பானியைப் பாராட்டினார். “முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 4ஜி-யை வேகமாக கொண்டு சேர்த்தது. அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க நாங்களும் ஓட வேண்டியதாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XFtx35h

எலான் மஸ்கை நோக்கி கையசைத்த டெஸ்லா ரோபோ | வீடியோ

படம்
கலிபோர்னியா: ‘ஆப்டிமஸ்’ எனும் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது டெஸ்லா. அதன் அறிமுக விழாவில் மேடைக்கு வந்த அந்த ரோபோ தனக்கு வலது பக்கத்தில் நின்று கொண்டிருந்த டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கை நோக்கி கையசைத்துள்ளது. அந்த வீடியோ இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் திரைப்படம் வெளியானது. அதில் சிட்டி எனும் ஹியூமனாய்டு ரோபோ செய்யாத சேட்டைகளே இல்லை. கிட்டத்தட்ட அதே போன்றதொரு காட்சி தான் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா அலுவலகத்திலும் நடந்துள்ளது. அங்கு சிட்டியை போலவே ஆப்டிமஸ் எனும் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NR81Krh

2023 ஆகஸ்ட் 15 முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை வழங்கும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

படம்
புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வு தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வில் தான் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா மாதிரியான தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்க உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LrvSomj

ஸ்வீடனில் உள்ள வாகனத்தை டெல்லியில் இருந்து இயக்கிய பிரதமர் மோடி: வீடியோ

படம்
புதுடெல்லி: ஸ்வீடனில் உள்ள வாகனத்தை டெல்லியில் இருந்து இயக்கி உள்ளார் பிரதமர் மோடி. தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அவர் ரிமோட் வழியாக காரை இயக்கி இருந்தார். அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வு தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. இதில் தான் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். அப்போது, காரை விர்ச்சுவலாக இயக்கி உள்ளார் பிரதமர் மோடி. இது இந்தியாவின் 5ஜி சேவை தொடங்கி உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள எரிக்சன் நிறுவன அரங்கில் இந்த சோதனையை அவர் மேற்கொண்டிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5lFKVho

இந்தியாவில் ரூ.15000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட் போன்கள்

படம்
சென்னை: இந்தியாவில் இன்று 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. தேசத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தகட்ட மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.15000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் நிறைவு பெற்ற ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மின்னணு சாதன பொருட்களை வாங்கி இருந்தனர். அதில் மொபைல் போன்கள் தான் வாடிக்கையாளர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்திருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rUxsaFZ