இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லாவா யுவா 4 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் லாவா யுவா 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lBQ26CD

ஃபார்வேர்ட் மெசேஜ்களை கஸ்டமைஸ் செய்யும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்!

படம்
சென்னை: விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள் ஃபார்வேர்ட் மெசேஜ்களை கஸ்டமைஸ் செய்யும் அம்சம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Lfntja6

இந்தியாவில் ரியல்மி ஜிடி 7 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் ரியல்மி ஜிடி 7 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ப்ரீமியம் செக்மென்ட்டில் கேம் ஆர்வலர்களை கருத்தில் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Bj7gO9u

இன்ஸ்டாகிராமில் லைவ் லொகேஷனை பகிரும் அம்சம் அறிமுகம்!

படம்
சென்னை: வாட்ஸ்அப் மெசஞ்சரில் இருப்பது போலவே இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் தங்களது லைவ் லொகேஷனை பகிரும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hnPVdtI

Oppo Find X8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X8 ஸ்மார்ட்போன் சீரிஸ்களை இந்தியா உட்பட உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ Find X8 புரோ மற்றும் ஒப்போ Find X8 போன்கள் தற்போது அறிமுகமாகி உள்ளது. செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BKjnR4

விவோ Y300 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் விவோ Y300 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bhW2HyP

பால்வீதியின் வட்டைச் சுற்றி நெருப்பு வாயுவின் திரை - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படம்
புதுடெல்லி: பால்வீதியின் வட்டைச் சுற்றி நெருப்பு வாயுவின் திரை உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வெப்பத்தை உந்தி உமிழும் சூடான வாயுவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மர்மமான ஆதாரங்களை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். எனினும் இது குறித்து இதுவரை விளக்கப்படவில்லை. நமது விண்மீன் மண்டலத்தில் நட்சத்திரங்களை விட வாயுக்கள் அதிகம். தற்போதுள்ள, பெருமளவிலான வாயு இருப்பு நமது விண்மீன் மண்டலத்தில் நட்சத்திர உருவாக்கத்திற்கு முக்கிய ஆதாரமாகும். இத்தகைய அபரிமிதமான வாயு கிடைப்பது இந்த செயல்முறையை இன்றுவரை தக்கவைக்க உதவுகிறது. இருப்பினும், அதன் மெல்லிய தன்மை காரணமாக பார்க்க முடியாவிட்டாலும்கூட வானியலாளர்கள் இந்த வாயுப் பொருளின் கன அளவை கணக்கிட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LCvTa25

பிஎஸ்என்எல் ஃபைபர்​ வாடிக்கையாளர்கள் 500 டிவி சேனல்களை இலவசமாக பார்க்கலாம்: தமிழகத்தில்​ ​விரைவில்​ அறிமுகம்​

படம்
சென்னை: பிஎஸ்​என்​எல்​ நிறு​வனம்​ சா​ர்பில்​ அதன்​ ஃபைபர்​ இணை​ய இணைப்​பு பெற்​றுள்​ள வாடிக்​கை​யாளர்​கள்​ 500-க்​கும்​ மேற்​பட்​ட டி​வி சேனல்​களை இல​வச​மாக பார்க்​கும்​ வச​தி​யை தமிழகம்​ மற்​றும்​ மத்​தி​ய பிரதேசம்​ ஆகிய ​மாநிலங்​களில்​ பிஎஸ்​என்​எல்​ ​விரை​வில்​ அறி​முகப்​படு​த்​த உள்​ளது. அறி​வியல்​ தொழில்​நுட்​பம்​ மற்​றும்​ தகவல்​ தொழில்​நுட்​ப துறை​யில்​ ஏற்​பட்​டிரு​க்​கும்​ அரசு வளர்ச்​சி ​காரண​மாக உல​கமே உள்​ளங்​கை​யில்​ அடங்​கி​விட்​டது. இத​னால்​ தொலைக்​காட்​சி சேவை, டிடிஎச்​, ஓடிடி செயலி, ஃபைபர்​ இணை​யம்​ மூலம்​ செட்​டாப்​ பாக்ஸ்​ வழியே தொலைக்​காட்​சி சேவை என வளர்ச்​சி பெற்​றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lfACMXw

ஸ்ட்ரீமிங் முதல் லேசர் வரை: தொலைக்காட்சியின் எதிர்காலம் எப்படி?

படம்
கடந்த பத்து ஆண்டுகளில் எலக்ட்ரானிக் பொருள்கள் அசுர வளர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக, தொலைக்காட்சியின் காட்சித் தன்மையும் வடிவமைப்பும் அதன் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறுதலை எதிர்கொண்டு வருகின்றன. பாட்காஸ்டை நோக்கி... கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே கேபிள் இணைப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. மக்கள் பாட் காஸ்ட்டை நோக்கிப் பயணிக்க ஆரம் பித்துவிட்டனர். 2023 புள்ளி விவரப்படி 57% வீடுகளில் கேபிள் இணைப்பு உள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/50BnX1o

உலக தொலைக்காட்சி நாள் எப்படி வந்தது? - ஒரு பார்வை

படம்
தகவல் தொடர்பு, தகவல், பொழுதுபோக்குக் கான ஓர் ஊடகமாகத் தொலைக்காட்சியின் தாக்கம், முக்கியத்துவத்தைக் கொண்டாடும் உலக அளவிலான அனுசரிப்பே ‘உலகத் தொலைக்காட்சி நாள்.’ பொதுக் கருத்தை வடிவமைப்பதிலும் கலாச்சாரப் பன்முகத் தன்மையை மேம்படுத்துவதிலும் நாடுகளிடையே உரையாடலை வளர்ப்பதிலும் தொலைக்காட்சி வகிக்கும் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது. உலகத் தொலைக்காட்சி நாள் ஏன்? - 1996, நவம்பர் 21, 22 தேதிகளில் ஐக்கிய நாடுகள் சபை முதல் உலகத் தொலைக்காட்சி இயக்கத்துக்கான கூட்டத்தை நடத்தியது. வேகமாக மாறிவரும் உலகில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிப்பதற்கும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் முன்னணி ஊடகப் பிரமுகர்கள் கூடினர். உலகில் நடைபெறும் மோதல்கள் மீது கவனம் செலுத்தவும் அமைதி, பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவும் ஐ.நா., தலைவர்கள் தொலைக்காட்சி நாளை அங்கீகரித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Onl...

கூகுள் குரோமுக்கு வந்த சோதனை! - விற்றுவிட நீதித்துறை நிர்பந்தம்

படம்
வாஷிங்டன்: கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை அமெரிக்க நீதித்துறை கொடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பலரும் தங்களது ஸ்மார்ட்போன், லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட் என டிஜிட்டல் சாதனங்களில் கூகுள் குரோம் இன்டர்நெட் பிரவுசரை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அந்த பிரவுசரை கூகுள் விற்பனை செய்ய வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a20hjuU

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை விவகாரம்: இந்தியாவில் மெட்டாவுக்கு ரூ.213 கோடி அபராதம்

படம்
புதுடெல்லி: கடந்த 2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பு சார்ந்த விவகாரத்தில் தவறாக நியாயமற்ற முறையில் வணிக ஆதாயம் சார்ந்த முயற்சியை மேற்கொண்ட காரணத்துக்காக மெட்டா நிறுவனத்துக்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) திங்களன்று ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது. மேலும், இந்த போட்டி நடைமுறையை நிறுத்தவும் சிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அதற்கான தீர்வை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மெட்டா மற்றும் வாட்ஸ்அப் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yns1wh

டிஜிட்டல் டைரி 20: ஃபேஸ்புக் ‘அல்காரித’மும் பாதிக்கப்படும் நகரவாசிகளும்

படம்
இங்கிலாந்தில் உள்ள சிறிய நகரம் ஒன்று, ஃபேஸ்புக் அல்காரிதம் அளிக்கும் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறது. நகரின் பெயரில் ‘பிரச்சினை’ இருப்பதாக ஃபேஸ்புக் அல்காரிதம் தவறாகப் புரிந்துகொண்டதே இதற்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது. ‘கூல்ஸ்டன்’ (Coulsdon) எனும் அந்த நகரைச் சேர்ந்த தனிநபரும் விற்பனையாளரும் ஃபேஸ்புக் தளத்தில் வைத்துள்ளனர். அந்த நகரிலோ, நகரின் பெயரிலோ எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் ‘Coulsdon' எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் பக்கங்கள், குழுக்களில் பதிவேற்றப்படும் பதிவுகள் நீக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறியதற்காகப் பதிவுகள் நீக்கம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டதோடு தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் கணக்கு முடக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் எச்சரித்துள்ளது. பதிவுகள் நீக்கப்படுவதற்கான சரியான காரணம் புரியாமல் ‘கூல்ஸ்டன்’ நகரைச் சேர்ந்தவர்கள் குழம்பினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: ...

‘செத்து விடு’ - பயனரை கூகுள் AI சாட்பாட் Gemini திட்டியதாக தகவல்

படம்
மவுண்டைன் வியூ: முதியோர் பராமரிப்பு குறித்து பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ‘செத்து விடு’ என கூகுளின் ஏஐ சாட்பாட் Gemini சொன்னதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 29 வயதான பட்டதாரி இளைஞர் ஒருவர், முதியோர் பராமரிப்பு குறித்து கூகுள் ஏஐ சாட்பாட் வசம் கேள்வி எழுப்பி உள்ளார். வகுப்பறை பாணியில் அந்த இளைஞர் மற்றும் சாட்டபாட் இடையே உரையாடல் மிக நீளமாக சென்றுள்ளது. அப்போது அந்த இளைஞருடன் அவரது சகோதரியும் இருந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IkyUY4p

எக்ஸ் தளத்தில் இருந்து விலகி ப்ளூஸ்கை, த்ரெட்ஸ் தளத்தில் இணையும் பயனர்கள்!

படம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், அவரது நண்பர் எலான் மஸ்குக்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் இருந்து பயனர்கள் விலகுவது அதிகரித்துள்ளது. அவர்கள் ப்ளூஸ்கை மற்றும் த்ரெட்ஸ் போன்ற தளங்களில் இணைந்துள்ளதாக தகவல். இதனை சமூக வலைதள நிறுவனங்களான ப்ளூஸ்கை மற்றும் த்ரெட்ஸ் உறுதி செய்துள்ளன. கடந்த ஒரு வார காலத்தில் ப்ளூஸ்கை தளத்தில் மட்டும் சுமார் 10 பயனர்கள் புதிதாக இணைந்துள்ளனர். அதே போல நவம்பர் மாத முற்பாதியில் மட்டும் சுமார் 275 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை த்ரெட்ஸ் கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1v0UpEA

அரசின் பாதுகாப்பு விதிகளை ஏற்ற மஸ்கின் ஸ்டார்லிங்க் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்

படம்
புதுடெல்லி: இந்திய அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை எலான் மஸ்கின் சாட்டிலைட் இன்டர்நெட் நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்புத் துறையுடன் ஸ்டார்லிங்க் பலமுறை மேற்கொண்ட ஆலோசனை கூட்டம் இதற்கு வழிவகை செய்துள்ளது. செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை வழங்குவதற்கான முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல் சார்ந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க ஸ்டார்லிங்க் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்த அறிக்கையை ஸ்டார்லிங்க் நிறுவனம் முறைப்படி வழங்க வேண்டியுள்ளது. கடந்த 2022-ல் இந்த உரிமம் கோரி ஸ்டார்லிங்க் விண்ணப்பித்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TbVz48O

‘ஏஐ யுகத்திலும் கோடிங் கற்பது முக்கியம்’ - கூகுள் ஆராய்ச்சித் தலைவர்

படம்
புதுடெல்லி: உலக அளவில் பல்வேறு துறைகளில் ஏஐ மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், டெவலப்பர்களுக்கு கோடிங் முக்கியத் திறன் என்றும், அதனால் அதை டெவலப்பர்கள் கற்பது அவசியம் என கூகுள் நிறுவனத்தின் ஆராய்ச்சி துறைத் தலைவரான யோஸி மேஷாஸ் (Yossi Matias) தெரிவித்துள்ளார். “புதிய தொழில்நுட்பங்கள் மென்பொருள் துறை சார்ந்தவர்கள் மேற்கொண்டு வரும் வழக்கமான பணிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கோடிங் பணிகளில் ஏஐ டூல்கள் உதவுகின்றன. ஆனால், கோடிங் திறனின் அடிப்படைக்கான மதிப்பு என்பது மாறாமல் உள்ளது. அதனால் அதனை கற்பது அவசியம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wWmXqJK

ஏஐ முறையில் சூழல் மேம்பாட்டுக்கு தீர்வு சொல்லும் செயலி!

படம்
கோவை: உலகளவில் உயர்கல்வி வழங்குவதில் ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகங்கள் முன்னணியில் உள்ளன. உயர்கல்வி ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடுவோர் பலரும் இப்பல்கலைக்கழகங்களில் படிக்க ஆசைப்படுவது உண்டு. அந்தவகையில், உயர்கல்வியில் தனிச்சிறப்புடைய ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஹேக்கத்தான் போட்டியில் கோவை மாணவர்கள் பரிசு வென்று சாதித்துள்ளனர். இதுகுறித்து, மாணவர்கள் அம்ருத் சுப்ரமணியன், கோட்டாக்கி ஸ்ரீகர் வம்சி, சுக்கா நவநீத் கிருஷ்ணா மற்றும் சூர்யா சந்தோஷ் குமார் ஆகியோர் கூறிய தாவது: அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களால் சர்வதேச அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஹேக்கத்தான் போட்டி கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் உலகளவில் 22 நாடுகளை சேர்ந்த 284 பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக ஸ்டான்போர்ட், எம்.ஐ.டி., டொரண்டோ பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, ...

பொதுமக்களின் செல்போன்களுக்கு நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டம்: இன்ஸ்பேஸ் தலைவர் தகவல்

படம்
புதுடெல்லி: விண்ணில் 7 வழிகாட்டி செயற்கைக் கோள்களை ஏவி, பொதுமக்களின் நேவிகேஷன் சிக்னல்களை வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக விண்வெளித்துறையின் இன்ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பற்றிய தகவல் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், இந்தியா தனது சொந்த நேவிகேஷன் அமைப்பை (நேவிக்) உருவாக்க இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இதற்காக புதிய எல்1பேண்டுடன் 7 நேவிகேஷன் செயற்கைக்கோள்களை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1xnvIsh

டிஜிட்டல் டைரி 19: ஏட்டிக்குப் போட்டியாகும் ஏ.ஐ சேவைகள்

படம்
வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) பரப்பில் சாட்பாட் சேவைகள் ஒரு வகை என்றால், கலைப் படைப்புகளை உருவாக்கும் ஏ.ஐ கருவிகள் இன்னொரு வகை. முதல் வகையின்கீழ் ‘சாட்-ஜிபிடி’, ‘கிளாடு’, ‘ஜெமினி’ போன்ற ஏ.ஐ சாட்பாட்கள் நிறைந்திருக்கின்றன. இந்தச் சேவைகளின் அடிப்படை அம்சம், எழுத்து வடிவிலான உள்ளீட்டிற்கு எழுத்து வடிவில் பதில் அளிக்கும் திறன். இரண்டாவது வகையில், ‘ஆர்ட் ஜெனரேட்டர்’ எனக் குறிப்பிடப்படும் கலைப் படைப்புகளை உருவாக்கும் கருவிகள், எழுத்து வடிவிலான உள்ளீட்டிற்கு ஏற்ப உருவங்கள் அல்லது காட்சி வடிவிலான ஆக்கங்களை உருவாக்கித் தருகின்றன. ‘மிட்ஜர்னி’, ‘ஸ்டேபில் டிப்யூஷன்’, ‘டேல்–இ’ போன்ற சேவைகள் இதில் முன்னணியில் இருக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KacmE37

Toxic Panda: ஆண்ட்ராய்டு போன்களை தாக்கி பணத்தை களவாடும் மால்வேர்

படம்
சென்னை: ஆண்ட்ராய்டு பயனர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை களவாடும் நோக்கில் ‘டாக்சிக் பாண்டா’ என்ற புதிய மால்வேர் உலாவி வருவதை குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த மாதம் இந்த மால்வேர் குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண்ட்ராய்டு பயனர்களின் போன்களில் இந்த மால்வேர் பாதிப்பின் மூலம் பயனர்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படுகிறது. அக்கவுண்ட் டேக்ஓவர், ஆன்-டிவைஸ் பிராடு போன்ற டெக்னிக் இதற்கு பயன்படுத்தப்படுகிறது என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L74xMRo

உடல் வெப்பத்தை கண்டறியும் டி-சர்ட் தயாரிப்பு: திருப்பூர் ஆடை வடிவமைப்பாளர் சோதனை முயற்சி

படம்
திருப்பூர் : ஆடை அணிபவரின் உடல் வெப்பத்தைக் கண்டறியும் புதிய ரக டி-சர்ட்டை திருப்பூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தயாரித்துள்ளார். திருப்பூர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சொக்கலிங்கம், பின்னலாடைத் துறையில் பல்லாண்டு அனுபவம் மிக்கவர். தற்போது, உணர்திறன் மை பதிக்கப்பட்ட டி-சர்ட் தயாரிக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yvXijPQ

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமலுக்கு வருகிறது: ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவு

படம்
சென்னை: தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இயக்கத்தை அமல்படுத்த, ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறை இன்று வெளியிட்ட அரசாணையின் விவரம்: “தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சர், “உலகளவில் அண்மைக் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு குறித்தும், அது தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு தரப்பிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும், இந்த அரசு கவனமுடன் ஆய்வு செய்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கபூர்வ வழிகாட்டுதல்களையும், இப்புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வழிநடத்தத் தேவைப்படும் வரையறைகளை தெளிவாக வகுக்கவும், முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஒன்று ஏற்படுத்தப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai D...

கூகுளில் 25% புரோகிராம் Code-களை ஏஐ எழுதுகிறது: சுந்தர் பிச்சை தகவல்

படம்
நியூயார்க்: கூகுளின் மூன்றாவது காலாண்டு வருவாய் தொடர்பான கூட்டத்தில் அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ள தகவல் மென்பொருள் இன்ஜினியர்கள் மற்றும் கோடர்களை அலர்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. கூகுள் நிறுவன மென்பொருள் சார்ந்த புரோகிராம் Code-களில் 25 சதவீதம் செயற்கை நுண்ணறிவு நுட்பம் எழுதி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனை பிழை திருத்துவது மற்றும் சரிபார்ப்பது ஆகிய பணிகளை இன்ஜினியர்கள் செய்வதாக அவர் சொல்லி உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/x0MfXA8

ரேடியோ டிரான்ஸ்மிட்டர் மூலம் நாசாவின் 47 ஆண்டு பழமையான வாயேஜர் 1 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு

படம்
புளோரிடா: சிறிது காலம் செயல்படாமல் இருந்த நாசாவின் 47 ஆண்டு பழமையான வாயேஜர் 1 விண்கலத்துடன், ரேடியோ டிரான்ஸ்மிட்டர் உதவி மூலம் நாசா விஞ்ஞானிகள் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். விண்வெளி ஆய்வுக்காக 47 ஆண்டுகளுக்கு முன்பு வாயேஜர் 1 என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. பூமியிலிருந்து 15 பில்லியன் மைல் தூரத்தை கடந்து சென்ற முதல் விண்கலம் வாயேஜர் 1 என்பது குறிப்பிடத்தக்கது. சூரியனின் சூழ் மண்டலத்தை தாண்டி, விண்மீன்களுக்கு இடையேயான பகுதிக்குள் வாயேஜர் விண்கலம் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XkyuRrH

இந்தியாவில் மேலும் 4 புதிய ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்க திட்டம்: டிம் குக் உறுதி

படம்
நியூயார்க்: 2024-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெற்ற வருவாய் சாதனையை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மேலும் நான்கு புதிய புதிய ஆப்பிள் ஸ்டோர்களை திறக்கும் திட்டம் இருப்பதாக ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனையகமாக மும்பையில் உள்ள பிகேசி மும்பை மற்றும் டெல்லியில் உள்ள டிஎல்எஃப் சாகேத் ஆகிய பகுதிகளில் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்கள் இயங்கி வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MGWXbw5

ChatGPT Search: இணையதளத்தில் தகவல்களை தேடி பெறலாம் - கூகுளுக்கு போட்டியாக களம் கண்ட ஓபன் ஏஐ

படம்
கலிபோர்னியா: இன்றைய இணையதள பயனர்களின் தேடல் என்பது நீண்ட நெடியது. ஒரு நானோ செகண்டுக்குள் கோடான கோடி தேடலை பயனர்கள் தேடி வருகின்றனர். பலரது வரவேற்பினை பெற்ற தேடுபொறியாக கூகுள் இருக்கும் நிலையில் ChatGPT-ல் இணையதள Search-னை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் ChatGPT-ல் நிகழ்நேர தகவல்களை பெறும் வகையில் Search-னை ஓபன் ஏஐ வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jHCSrpn