இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

“6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா தலைமை தாங்கும்” - பிரதமர் மோடி @ இந்திய மொபைல் மாநாடு

படம்
புதுடெல்லி: 6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா தலைமை தாங்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 7-வது இந்திய மொபைல் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் இதனை தெரிவித்தார். “4ஜி சேவையை ஊழல் இல்லாமல் கட்டமைத்தோம். இணைய வசதி வாழ்வை மேம்படுத்த உதவுகிறது. அது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியை கொண்டு வந்தது. மக்கள் அனைவருக்கும் தொழில்நுட்பம் தடையின்றி சென்று சேர வேண்டும். நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது மக்களுக்கான உரிமையை வழங்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1DRZgzl

Concept Device | கையில் வாட்ச் போல கட்டக்கூடிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

படம்
சென்னை: கையில் வாட்ச் போல கட்டிக் கொள்ளக் கூடிய Flexible ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இது கான்செப்ட் டிவைஸாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவாவின் வருடாந்திர குளோபல் டெக் வேர்ல்ட் நிகழ்வில் இந்த சாதனம் வெளியிடப்பட்டது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். மற்ற மொபைல்போன் நிறுவனங்கள் அனைத்தும் ஃபோல்டபிள் போனை சந்தையில் அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில் Flexible ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை மோட்டோ வெளியிடவில்லை. வெகு விரைவில் இந்த தகவல் வெளியாகும் என தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JQFGfSU

AI சூழ் உலகு 12 | மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் உறுதுணைகள்!

படம்
செயற்கை நுண்ணறிவின் (AI) செயல்பாடு மனிதனின் அறிவாற்றலை பல்வேறு அம்சங்களின் ஊடாக பிரதிபலிப்பதுதான். இப்போதைக்கு மனித குலத்துக்கு பல்வேறு வகையில் உதவுவது அதன் பிரதான பணி. நவீன டெக் யுகத்தில் அனைத்து துறைகளிலும் அங்கம் வகிக்கிறது ஏஐ. பிணிகளை நீக்கி இன்னுயிர் காக்கும் மருத்துவ துறையும் இதில் அடக்கம். அந்த வகையில் மருத்துவம் சார்ந்து பல்வேறு வகையான நோயை கண்டறிதல் தொடங்கி அதற்கான சிகிச்சை வரையில் ஏஐ -யின் உதவி உள்ளது. ஆனால், இங்கு எழுகின்ற ஒரே கேள்வி மனிதர்களை விட அஃறிணை சிறந்து செயல்படுமா என்பதுதான். ரோபோக்களின் துணையுடன் துல்லியமான முறையில் உலக நாடுகளில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. நோயாளியின் ஆரோக்கியம் சார்ந்து மருத்துவ துறையில் ஏஐ சிறப்பான பயனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், மருத்துவத் துறையில் தொழில்நுட்ப எந்திரங்களின் வரவு பக்கபலமாகவே இதுவரை அமைந்துள்ளது. பக்கவாதத்தால் முடங்கியவரை பேச வைத்த ஏஐ: அமெரிக்க நாட்டில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 18 ஆண்டு காலம் பக்கவாத பாதிப்பால் முடங்கியிருந்த ஆன் (Ann) என்ற பெண் நோயாளியை பேச வைத்துள்ளது ஏஐ. நிமிடத்...

சாம்சங் ஏ9 சீரிஸ் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய சந்தையில் சாம்சங் ஏ9 சீரிஸ் டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி டேப் ஏ9 மற்றும் கேலக்ஸி டேப் ஏ9+ வெளியாகி உள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல்களில் எலக்ட்ரானிக் சாதனங்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ9 சீரிஸ் வரிசையில் டேப் ஏ9 மற்றும் டேப் ஏ9+ இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NVYKhcq

ஒரே செயலியில் இரண்டு கணக்குகள் பயன்படுத்தும் அம்சம்: வாட்ஸ்அப் அப்டேட்

படம்
சான் பிரான்சிஸ்கோ: ஒரே வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் இரண்டு வெவ்வேறு கணக்குகளை பயன்படுத்தும் வகையிலான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. இது பயனர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0GWTMic

இந்தியாவில் 20 லட்சம் வீடியோக்கள் நீக்கம்: யூடியூப் நடவடிக்கை

படம்
மும்பை: இந்தியாவில் தவறான தகவல்களைக் கொண்ட 20 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்வின்போது பேசிய யூடியூப் இந்தியாவுக்கான அரசு விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கைத் தலைவரான மீரா சாட், யூடியூப் விதிகளை மீறும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட 20 லட்சம் வீடியோக்களை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீக்கப்பட்ட பெரும்பாலான வீடியோக்கள் 10-க்கும் குறைவான பார்வைகளை மட்டுமே கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vfkFYwh

பட்ஜெட் விலையில் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் ஏ சீரிஸ் வரிசையில் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1G3LSKz

AI சூழ் உலகு 11 | யுத்தக் களத்தில் ‘ஏஐ’ உறுதுணையால் மனிதகுலத்துக்கு ஆக்கமா, அழிவா?

படம்
‘யுத்தம்’ இல்லாத உலகம் வேண்டுமென சாமானிய மனிதர் ஒவ்வொருவரும் விரும்புவர். ஆனாலும் மண், பொன் என வளங்களை சுரண்டவும், பிரிவினையின் பெயராலும், ஆட்சி அதிகாரத்தினாலும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் யுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதி காலம் முதலே யுத்தம் குறித்த தகவல்களை இலக்கியங்களின் ஊடாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் காலத்துக்கு ஏற்ற வகையில் யுத்த முறை மாற்றம் கண்டுள்ளது. உலக நாடுகளில் அரங்கேறும் போர்களும் அந்த வலி மிகுந்த வரலாற்றை சுட்டிக் காட்டுகிறது. மொத்தத்தில், தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப யுத்தமும் அப்டேட் காண்பது எதிர்மறை விளைவு. அலெக்சாண்டர் வாள் ஏந்தியும், ஹிட்லரின் நாஜி படை குண்டுகளை வீசி யும், துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்களை தெறிக்கவிட்டும் யுத்தம் புரிந்த காலம் மலையேறி மொபைல் போன் கேமில் வருவது போல பாராகிளைடரில் ஆகாய மார்க்கமாக அந்நிய நாட்டு எல்லைக்குள் பறந்து வந்து குண்டு வீசும் அல்லது கணைகளை ஏவும் வீடியோ காட்சிகள் அதற்கு உதாரணம். காலாட்படை, குதிரைப்படை காலமெல்லாம் வரலாறாக மாறிவிட்டது. from இந்து தமிழ் திசை : News in T...

Zoom தளத்தில் டாக்குமென்ட் அம்சம்: சேவையை விரிவு செய்யும் நிறுவனம்!

படம்
கலிபோர்னியா: ஸூம் வீடியோ கம்யூனிகேஷன் தளத்தில் டாக்குமென்ட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். அண்மையில் நடைபெற்ற அந்நிறுவனத்தின் Zoomtopia 2023 ஆண்டு விழா நிகழ்வில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2011-ல் நிறுவப்பட்டது ஸூம் வீடியோ கம்யூனிகேஷன் நிறுவனம். பரவலாக ஸூம் என அறியப்படுகிறது. மீட்டிங், சாட், குரல் வழி அழைப்பு மேற்கொள்ள இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. கரோனா பரவலின்போது உலக அளவில் ஸூம் தளம் பயன்படுத்தப்பட்டது. அலுவலகம், பள்ளி, கல்லூரி என பெரும்பாலான இடங்களில் ஸூம் சேவை அவசியமானதாக அமைந்தது. பயனர்கள் இதனை பயன்படுத்துவதும் எளிது என்பது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rJ9omIv

AI சூழ் உலகு 10 | விளையாட்டு உலகை ஆளும் ஏஐ தொழில்நுட்பம்!

படம்
‘மாற்றம் என்பது வாழ்க்கையின் எழுதப்படாத விதி. மேலும், கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமே பார்ப்பவர்கள் எதிர்காலத்தை இழக்க நேரிடும்’ என்பது முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடியின் கூற்று. இன்றைய டெக் யுகத்துக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் 20-ம் நூற்றாண்டின் மையப் பகுதியில் அவர் இதனை சொல்லி இருந்தார். அந்த மாற்றத்தை விளையாட்டு உலகமும் எதிர்கொண்டு வருகிறது. ஆதிகாலத்தில் உதயமான விளையாட்டுகள் கூட இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றம் கண்டுள்ளன. அதில் பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகம் இணைந்துள்ளன. அதற்கு சிறந்த உதாரணமாக கிரிக்கெட் விளையாட்டை சொல்லலாம். டெஸ்ட் வடிவில் இருந்த கிரிக்கெட் விளையாட்டு ஒருநாள், டி20 என பல்வேறு ஃபார்மெட்களில் மாற்றம் கண்டு டி10, தி ஹன்ட்ரட் என மாற்றம் பெற்றுள்ளது. அதிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விளையாட்டு உலகில் நீடித்த நிலையான ஆட்சியை புரிய உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i6QgEar

கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 புரோ இந்தியா அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கூகுள் நிறுவனத்தின் Made by Google நிகழ்வில் இந்த போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கூகுள் ஃப்ளாக்‌ஷிப் சிப்செட் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா இந்த 5ஜி போன்களில் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் கூகுள் பிக்சல் போன்களின் பழைய டிசைனில் இந்த போன் வெளிவந்துள்ளது. கூகுள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 புரோ போன்களின் அடுத்த வரிசை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uTtvibx

விவோ வி29, வி29 புரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி29 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வி29 மற்றும் வி 29 புரோ போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OiNQpCd

BUYING GUIDE | இந்திய சந்தையில் ரூ.15,000-க்கு குறைந்த விலையில் கிட்டும் 5ஜி ஸமார்ட்போன்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.15,000 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகி ஓராண்டு காலம் ஆகிறது. இந்த சூழலில் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை எதிர்பார்க்கும் மொபைல்போன் பயனர்களுக்கு இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் சில நிறுவனங்களின் போன்கள் குறித்துப் பார்ப்போம். இந்த ஸ்மார்ட்டான டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் இருக்கும் என கணித்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு மாறியுள்ளது செல்போன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D5Zz2qY