இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி - இதுவரையிலான சாதனைகளை முறியடிக்கும் இந்தியா

படம்
எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னேற்றம் கண்டு வருகிறது இந்தியா. இதுவரை இல்லாத அளவு கடந்த மாதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி கடந்த மாதம் 1.67 பில்லியன் அமெரிக்க டாலரை தொட்டது. இது 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1.25 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 49 சதவீதம் அதிகரித்து 11.0 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இது கடந்த 2020ம் ஆண்டு இதே காலத்தில் 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்பது கவனிக்கதக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AzHHbW

இந்தியாவுக்கு எதிரான செயல்பாடு: 35 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு

படம்
கடந்த மாதம் 20 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கிய நிலையில், இன்று மீண்டும் 35 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளது. டிசம்பர் 21 அன்று மத்திய அரசு மொத்தம் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை முடக்கியது. இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக இந்தத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்தத் தளங்கள் பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டு செயல்பட்டுக்கு வருவதாகவும், நாட்டின் முக்கிய விவகாரங்களான காஷ்மீர், விவசாயிகள் போராட்டம் மற்றும் ராமர் கோவில் போன்றது தொடர்பாக தவறான தகவல்களை இவை பரப்பி வருவதாகவும் புகார் எழ, அந்தக் குற்றச்சாட்டின் பேரில் மத்திய அரசு அனைத்தையும் முடக்கி நடவடிக்கை எடுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33Cv3Ne

இந்தியாவுக்கு எதிரான யூடியூப் தளங்கள் முடக்கப்படும்: மத்திய அரசு எச்சரிக்கை

படம்
இந்தியாவுக்கு எதிரான வகையில் செயல்படும் யூடியூப் தளங்கள் முடக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "நாட்டின் நலனுக்கு எதிராகச் செயல்படும் யூடியூப் தளங்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும், இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவது, பொய்களைப் பரப்புவது மற்றும் சமூகத்தைப் பிளவுபடுத்துவது போன்ற எந்தவொரு கணக்கையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். யூடியூப் நிறுவனமே முன்வந்து இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது" என்று எச்சரித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nHMwuG

ஆன்லைன் வழியாக கைதிகளிடம் பேச உறவினர்களுக்கு உதவும் ‘இ-பிரிசன்ஸ்’ மென்பொருள்

படம்
கரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில், சிறையில் அடைக்கப் பட்டுள்ள கைதிகளை, ஆன்லைன் வழியாக சந்தித்துப் பேச, மத்திய அரசின் ‘இ-பிரிசன்ஸ்’ மென்பொருள் அதிகளவில் தற்போது பயன் படுத்தப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, வேலூர், கடலூர்,திருச்சி, பாளையங்கோட்டை, சேலம் ஆகிய இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qQr6Mu