இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

iQOO Neo 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை and சிறப்பு அம்சங்கள்

படம்
புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Neo 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்ப்போம். சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று தான் iQOO. இந்த நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது Neo 6 ஸ்மார்ட்போன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aNDwMVA

குஜராத் | நாட்டிலேயே முதல்முறை; ட்ரோன் மூலம் பார்சல் டெலிவரி செய்த இந்திய அஞ்சல் துறை

படம்
அகமதாபாத்: நாட்டிலேயே முதல் முறையாக ட்ரோன் மூலம் பார்சலை டெலிவரி செய்து அசத்தியுள்ளது இந்திய அஞ்சல் துறை. இது சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் புஜ் (Bhuj) தாலுகாவில் உள்ள ஹபே (Habay) கிராமத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள நேர் கிராமத்திற்கு ட்ரோன் மூலம் பார்சல்களை அனுப்பி உள்ளது இந்திய அஞ்சல் துறை. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 46 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 25 நிமிடங்களில் கடந்த ட்ரோன், பார்சலை டெலிவரி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் நாட்களில் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் பணியை இந்திய அஞ்சல் துறை முன்னெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vLyQcpC

அறிமுகமானது மோட்டோ E32s ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள்

படம்
மோட்டோ E32s ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E சீரிஸ் வரிசையில் E32s ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இந்த போன் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இந்த போன் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EDas5Z

காத்திருக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் வாங்கலாம், எடை பார்க்கலாம்... பெருங்களூருவில் வருகிறது அதிநவீன பேருந்து நிறுத்தங்கள்!

படம்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் அனைத்து வசதிகளையும் இருந்த இடத்தில் இருந்து பெறும் நிலை வந்துவிட்டது. இனி வரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடகாவில் பல அதி நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் அமையவுள்ளது. பெருங்களூரு நகரத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் எலெக்ட்ரானிக் சிட்டி உள்ளது. இந்த நகரத்தின் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இதன் காரணமாக இந்த நகரத்தை மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரானிக் சிட்டி தொழில் நகர குழுமம் நவீன பேருந்து நிறுத்தங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/91j5J6N

பயனர் தகவல்களை பயன்படுத்திய விவகாரம் | ட்விட்டருக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம்

படம்
வாஷிங்டன்: பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மத்திய வர்த்தக ஆணையம் (Federal Trade Commission) இந்த அபராதத்தை விதித்துள்ளது. உலக மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற சமூக வலைதளங்களில் ட்விட்டர் நிறுவனமும் ஒன்று. பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பலரும் ட்விட்டரை பயன்படுத்தி தங்களது கருத்துகளை உலக மக்களுடன் பரிமாறி வருகின்றனர். இந்நிலையில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு லாப ஆதாயத்திற்காக விளம்பரதாரர்கள் விளம்பரம் செய்ய ட்விட்டர் அனுமதித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனை ட்விட்டர் பயனர்களிடத்தில் தெரிவிக்கவில்லை எனவும் தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6jRS3oX

இனி டிஜிலாக்கர் சேவையை வாட்ஸ் அப்பிலும் பெறலாம்

படம்
புதுடெல்லி : ஆவணங்களை சேமித்து வைக்கும் டிஜிலாக்கர் சேவை இனி வாட்ஸ்அப் மூலமும் பெறலாம். கடந்த 2020 மார்ச் மாதம் வாட்ஸ் அப்பில் MyGov Helpdesk உருவாக்கப்பட்டது. கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கான வசதியை அது வழங்கியது. இந்நிலையில் தற்போது டிஜிலாக்கர் வசதியையும் MyGov ஹெல்ப் டெஸ்க் வழங்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oCHJrh7

அமேசானில் பிளாஸ்டிக் வாளியின் விலை ரூ.25999 - அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்

படம்
புது டெல்லி: இ-காமர்ஸ் தளமான அமேசானில் ஒரு பிளாஸ்டிக் வாளியின் விலை ரூ.25,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உலகம் முழுவதும் தங்களது தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை வீடு தேடி சென்று விநியோகித்து வருகிறது அமேசான். இதில் உலக மக்கள் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளராகவும், பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளராகவும் உள்ளனர். இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இ-காமர்ஸ் தளங்களில் அமேசான் தளமும் ஒன்று. இந்நிலையில், இந்த தளத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் வாளியின் விலை இப்போது பேசு பொருளாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HvkgRNb

விவசாயத்தில் பேருதவி புரியும் IOT தொழில்நுட்பம்: ஒரு விரைவுப் பார்வை

படம்
தொழில்நுட்பத்தின் இதயத் துடிப்புதான் பொருட்களின் இணையம் (Internet of Things - IOT). ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் இணையத்தால் தொடர்புகொள்வது, தேவையான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுதான் பொருட்களின் இணையம். இன்றைய காலகட்டத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயத்துக்குத் தேவைப்படும் தண்ணீர்ப் பயன்பாட்டை IOT மூலம் 50% முதல் 75% வரை குறைத்து, தண்ணீரை வீணாக்காமல் விவசாயத்தை எளிதாகச் செய்வதற்கான வழிவகை இந்த IOT-ல் கிடைத்திருக்கிறது. மேலும், பயிருக்கு ஊட்டச்சத்துகள் தேவையா என்பதை உணர்ந்து, அதற்குத் தேவையான உரங்களை, தேவையான காலத்தில், தேவையான அளவு கொடுப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் நமக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nJb2G5r

இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை and சிறப்பு அம்சங்கள்

படம்
புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் இன்பினிக்ஸ் ஹாட் 11 பிளே போனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஹாட் 12 பிளே போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த போன் தாய்லாந்து சந்தையில் அறிமுகமானது. தொடர்ந்து இப்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fXzRo5q

ரேசர்பே நிறுவனத்தில் ரூ.7.3 கோடி திருட்டு - பெங்களூரு சைபர் கிரைம் போலீஸில் புகார்

படம்
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள முன்னணி பேமெண்ட் நிறுவனமான ரேசர்பே நிறுவனத்தில் ஹேக்கர்கள் ரூ.7.3 கோடி திருட்டை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் அனைத்து தளத்திலும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பேமெண்ட் நிறுவனங்களில் ஒன்றான ரேசர்பே நிறுவனத்தில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. ரேசர்பே நிறுவனத்தின் மென்பொருள் அங்கீகார செயல்முறையை ஹேக்கிங் செய்து ரூ. 7.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர் என்று அந்நிறுவனம் சார்பில் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தரப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0ecTKHp

ஸ்டார்லிங்க் | மலேசியாவில் எலான் மஸ்கின் சாட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்க திட்டம்

படம்
கலிபோர்னியா: மலேசிய நாட்டில் ஸ்டார்லிங்க் புராஜக்டின் கீழ் சாட்டிலைட் மூலமாக இணைய சேவையை வழங்க எலான் மஸ்கின் ஸ்பேஸ்-X நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-X நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே சுமார் 32 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-X பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். இப்போது ஸ்டார்லிங்க் இணைய சேவை மலேசியாவில் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hUton2I

இந்தியாவில் அறிமுகமானது விவோ Y75 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது விவோ Y75 ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். ஸ்மார்ட்போன் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பணியை மேற்கொண்டு வருகிறது சீன தேச நிறுவனமான விவோ. புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் Y75 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GMhA3Qk

ரியல்மி நார்ஸோ 50 புரோ 5ஜி and 50 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் | விலை and சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்ஸோ 50 புரோ 5ஜி மற்றும் 50 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வருகிறது சீன தேச ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இப்போது நார்ஸோ 50 சீரிஸ் வரிசையில் இரண்டு போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு போன்களும் கேம்கள் விளையாடுவதற்கு ஏதுவான வகையில் சிறப்பான செயல்பாட்டை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத். நிச்சயமாக இதன் மூலம் கேமர்கள் திருப்தி அடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LKrcloA

உங்களுக்குத் தெரியுமா? | டெய்ஸியின் மாயாஜாலம்

படம்
டெய்ஸியின் கானொளியைக் காண இங்கே சொடக்கவும் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RXYkODT

‘‘போலி கணக்குகள்; ஒப்பந்தம் அடுத்தகட்டத்துக்கு நகராது’’- ட்விட்டர் நிர்வாகத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

படம்
நியூயார்க்: 5 சதவீத போலி, ஸ்பேம் கணக்குகள் மட்டுமே இருப்பற்கான ஆதாரத்தை ட்விட்டர் நிர்வாகம் காட்டாவிட்டால் தனது ஒப்பந்தம் அடுத்தகட்டத்துக்கு நகராது என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். இதன் மூலம் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் நடவடிக்கையில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CHzD95r

பட்ஜெட் விலையில் விவோ Y01 ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள் and விலை

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது விவோ Y01 ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். சீன தேச ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Y01 ஸ்மார்ட்போன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UarhNEI

வீட்டில் அலுவலக பணி சூழல் மாற்றம் - அலுவலகம் வர சொன்னதால் 800 ஊழியர்கள் ராஜினாமா

படம்
பெங்களூரு : வீட்டில் இருந்து அலுவலக பணிபுரியும் சூழல் மாறி, அலுவலகம் வந்து பணிபுரிய சொன்னதால் 800 ஊழியர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் கோடிங் கற்றுத்தரும் வொயிட் ஹாட் ஜூனியர் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் 800 நிரந்தர பணியாளர்களும் கடந்த 2 மாதங்களில் தங்களது வேலையை ராஜினாமாசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வொயிட் ஹாட் ஜூனியர் நிறுவனத்தை பைஜூஸ் நிறுவனம் 2020 ஆண்டு கையகப்படுத்தியது. இந்நிறுவனத்தை 30 கோடி டாலருக்கு பைஜூஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/A3LmiQI

வரலாற்றில் முதல் முறை | நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடி வளர்த்த விஞ்ஞானிகள்

படம்
வாஷிங்டன்: வரலாற்றிலேயே முதல் முறையாக நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடியை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள். விண்வெளி ஆய்வில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஜூலை 21, 1969 வாக்கில் நிலவில் தனது காலடி தடத்தை நிலவில் பதித்தார் ஆர்ம்ஸ்ட்ராங். அதனை உலகமே கொண்டாடியது. தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ சாத்தியம் உள்ளதா என்பதை பொறுத்தே இந்த ஆய்வு பணிகள் அமைந்துள்ளன. சந்திர கிரகம் மட்டுமல்லாது பிற கிரகங்களிலும் இந்த ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை உலக நாடுகள் கூட்டாகவும், தனியாகவும் மேற்கொண்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6eRjAnY

'கூகுள் வாலெட் அப்ளிகேஷன்' - I/O டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம்

படம்
கலிபோர்னியா: 'கூகுள் வாலெட் அப்ளிகேஷன்' என்ற கைபேசி இன்புட்/அவுட்புட் (I/O) டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டான கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் இன்புட்/அவுட்புட் எனப்படும் I/O டெவலப்பர் மாநாட்டினை நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக இணைய வழியில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு மீண்டும் நேரடியாக நடைபெற்றது. இருந்தாலும் இதில் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. கடந்த 2008 முதல் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தங்களது தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப அப்டேட்களை கூகுள் அறிவிக்கும். அதோடு புதிய அறிவிப்புகள் சிலவும் அறிவிக்கப்படும். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://www.hindutamil.in/news/technology/799009-google-announces-new-wallet-application-in-input-output-developer-conference.htm...

இந்தியாவில் அறிமுகமானது மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 30 ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களைப் பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைக் காலமாக வரிசையாக ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், எட்ஜ் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் எட்ஜ் 30 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக எட்ஜ் 30 புரோ அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகின் மெல்லிய (Thin) போன் இது என எட்ஜ் 30 பிராண்ட் செய்யப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XAiIUGd

"ரிசர்வ் வங்கியின் அழுத்தம் காரணமாக யுபிஐ பேமெண்டை நிறுத்தியுள்ளோம்" காயின்பேஸ் சிஇஓ

படம்
புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் முறையற்ற வகையிலான அழுத்தம் காரணமாக யுபிஐ பேமெண்ட் முறையை தங்கள் தளத்தில் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் காயின்பேஸ் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஆர்ம்ஸ்ட்ராங். கிரிப்டோ கரன்சிகளை எக்ஸ்சேஞ்ச் செய்யும் தளமாக உள்ளது காயின்பேஸ். அமெரிக்காவில் கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது. இப்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் தனது சேவையை வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பெங்களுருவில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் மூலம் இந்தியாவிலும் தனது இயக்கத்தை தொடங்கியது காயின்பேஸ். அடுத்த சில நாட்களில் யுபிஐ சார்ந்த சேவைகள் இந்த தளத்தில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் பிரையன் ஆர்ம்ஸ்ட்ராங். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Id3DrL

'நத்திங் போன் (1)' பிளிப்கார்ட் தளம் மூலமாக மட்டுமே விற்பனை

படம்
புதுடெல்லி: விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள 'நத்திங் போன் (1)' பிளிப்கார்ட் தளம் மூலமாக மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள பார்ட்னர்ஷிப் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை கால ஸ்பெஷலாக இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது நத்திங் நிறுவனத்தின் 'போன் (1)'. இந்த போன் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங். தொழில்நுட்ப நிறுவனமான இந்நிறுவனம் ஹெட்செட்டை விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், போன் (1) குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் வாக்கில் வெளியிட்டிருந்தது நத்திங். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QGMXfsP

எமோஜி ரியாக்‌ஷன்ஸ், 2 ஜிபி ஃபைல் ஷேரிங், குழுவில் 512 பேர்... - புதிய அம்சங்களை ரோல்-அவுட் செய்த வாட்ஸ்அப்

படம்
கலிபோர்னியா: எமோஜி ரியாக்‌ஷன்ஸ், 2 ஜிபி ஃபைல் ஷேரிங், குழுவில் 512 பேர் போன்ற புதிய அம்சங்களை பயனர்களுக்காக ரோல்-அவுட் செய்துள்ளது வாட்ஸ்அப். இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாற்றிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T0byHlh

வாழ்நாள் 16 ஆண்டுகள்... புதிய புரோ Endurance மைக்ரோ எஸ்டி கார்டை அறிமுகம் செய்த சாம்சங்

படம்
சியோல்: 16 ஆண்டுகள் வரை நீடித்திருக்க கூடிய புதிய புரோ Endurance மைக்ரோ எஸ்டி கார்டை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்த கார்டின் செயல்பாடு அதன் பெயருக்கு ஏற்ற வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது சாம்சங் நிறுவனம். உலக அளவில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து, விற்பனையும் செய்து வருகிறது அந்நிறுவனம். மைக்ரோ எஸ்டி கார்டுகளையும் உற்பத்தி செய்து வருகிறது சாம்சங். இந்நிலையில், துல்லிய வீடியோ பதிவுக்காக புதிய புரோ Endurance மைக்ரோ எஸ்டி கார்டை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AJmDoIb

ட்விட்டர் சர்க்கிள் | குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ட்வீட்களை பகிரும் புதிய அம்சம்

படம்
சான் பிரான்சிஸ்கோ: பயனர்கள் தங்களது ட்வீட்களை குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே பகிரும் 'ட்விட்டர் சர்க்கிள்' என்ற புதிய அம்சத்தை சோதித்து வருகிறது சமூக வலைதளமான ட்விட்டர் தளம். உலகம் முழுவதும் சுமார் 76.9 மில்லியன் பயனர்கள் மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களுக்காக புதுப்புது அம்சங்களை ட்விட்டர் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிலையில், 'ட்விட்டர் சர்க்கிள்' என்ற புதிய அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் சோதித்து வருவதாக தெரிகிறது. ட்விட்டரை எலான் மஸ்க் வாங்க உள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qcU7Vxs

பயனர்களின் பிறந்த தேதியை உள்ளிடுமாறு கட்டாயப்படுத்தும் இன்ஸ்டாகிராம்: காரணம் என்ன?

படம்
கலிபோர்னியா: தங்கள் தளத்தை பயனர்கள் தொடர்ந்து தடையின்றி பயன்படுத்த பயனர்கள் தங்களது பிறந்த தேதியை உள்ளிடுமாறு கட்டாயப்படுத்தி வருகிறது இன்ஸ்டாகிராம். அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. பயனர் பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களுக்காக இன்ஸ்டா தளத்தில் அவ்வப்போது கொள்கை முடிவுகளை மாற்றி அமைப்பது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pm0ycrG

இந்தியாவில் அறிமுகமானது விவோ T1 புரோ மற்றும் T1 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

படம்
புது டெல்லி: இந்திய சந்தையில் விவோ T1 புரோ 5ஜி மற்றும் T1 44 வாட்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை பார்க்கலாம். சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோவின் பிரதான சந்தைகளில் ஒன்றாக அமைந்துள்ளது இந்தியா. பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவத்தை தங்களது லேட்டஸ்ட் போன்கள் மூலம் வழங்கி வருகிறது விவோ. அதன் காரணமாக சர்வதேச அளவில் போன்களை விற்பனை செய்து வரும் முன்னணி பிராண்டாகவும் விவோ திகழ்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்தியாவில் T சீரிஸ் வரிசையில் இரண்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது விவோ. இதனை விவோ இந்தியா இயக்குனர் பங்கஜ் காந்தி தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/moia1gh

ஒரே மாதத்தில் 18.05 லட்சம் இந்திய கணக்குகளுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்

படம்
புது டெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 18.05 லட்சம் இந்திய பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த பயனர்கள் விதிகளை மீறிய காரணத்திற்காக தடையை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் 2021, கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. அப்போது முதல் 50 லட்சம் பயனர்களை கொண்ட டிஜிட்டல் தளங்கள், தங்களுக்கு கிடைத்த புகார்களின் விவரம் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் வாட்ஸ்அப் தாக்கல் செய்துள்ள அண்மைய அறிக்கையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xzZW9PG