இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனது பேச்சால் யாருக்காவது மனது புண்பட்டு இருந்தால் வருத்தமான விஷயம்தான்: ஹெச்.ராஜா விளக்கம்

படம்
எனது பேச்சால் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் வருத்தமான விஷயம்தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். காரைக்குடியில் நடந்த தனது பிறந்தாள் விழா கொண்டாட்டத்துக்குப் பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iig0MK

மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கிறது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

படம்
“மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கிறது” என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத் தில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘நீட்' தேர்வு சமூகநீதியை நிலைநாட்டக் கூடியது. மன அழுத்தத்தால் மாணவர்கள் உயிர்இழந்து வரும் நிலையில், தமிழக அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் ‘நீட்' தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக அரசியல் செய்து வருகிறது. மாணவர்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு திமுக அமைதியாக இருந்தாலேபோதும். தேர்தல் வரும்போதெல்லாம் ‘நீட்' தேர்வு தொடர்பாக பேசி திமுக ஆதாயம் தேடிக் கொள்கிறது. ‘நீட்' தேர்வை பெற்றோர், மாணவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதை எதிர்ப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வைத்துள்ள திமுகவினர்தான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YbIj8S

வங்கிகளுக்கு அக்டோபர் மாதம் 21 நாட்கள் விடுமுறையா? - அதிகாரிகள் விளக்கம்

படம்
வங்கிகளுக்கு அடுத்த மாதம் 21 நாட்கள் விடுமுறையா என்பது தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வங்கிகளுக்கு அடுத்த மாதம் 21 நாட்கள் விடுமுறை என வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: அக்டோபர்மாதம் பல்வேறு பண்டிகைகள்வருவதால், நாடு முழுவதும் சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Y4EOkH

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் இந்திரகுமாரி வரை... ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர்கள்

படம்
ஊழல் வழக்கில் தண்டனை பெறும் அமைச்சர்களின் பட்டியலில் முன்னாள் அமைச்சர் புலவர்இந்திரகுமாரியும் இணைந்துள்ளார். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர் புலவர் ஆர். இந்திரகுமாரி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ikEpBs

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத 1,351 வாகனங்கள் ஏலம்: ரூ.2.60 கோடி வருவாய் அரசு கணக்கில் சேர்ப்பு

படம்
தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விட்டு, அதில்கிடைத்த ரூ.2 கோடியே 60 லட்சம் அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி, சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம்விடும் அதிகாரம் வழங்கப்படும்' என்று அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AYy45O

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணியில் உரிய இடங்கள் கிடைக்காதது வருத்தம்தான்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

படம்
செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3D3bCJD

பாகிஸ்தானுக்கு மீண்டும் அழைத்துச் செல்ல இந்திய ராணுவத்தினரிடம் பிடிபட்ட ‘டீன் ஏஜ்’ தீவிரவாதி வேண்டுகோள்

படம்
காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் கடந்த 26-ம் தேதியன்று அங்கிருந்த ஒரு பதுங்குக் குழிக்குள் மறைந்திருந்த இரண்டு தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு தீவிரவாதி தன்னை உயிருடன் விடுமாறு வேண்டுகோள் விடுத்து ராணுவத்தினரிடம் சரணடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ur15VB

60 வயது முதியோர் வேலை தேட புதிய இணையதளம் தொடக்கம்: மத்திய சமூக நீதித் துறை அறிமுகம்

படம்
அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோர் மீண்டும் வேலைவாய்ப்பை தேட, புதிய இணையதளத்தை மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம் நாளை அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1951-ம் ஆண்டு 2 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை, கடந்த 2001-ம்ஆண்டு 7.6 கோடியாக உயர்ந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படிஇந்த எண்ணிக்கை 10.4 கோடியாக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Y3qtEI

கட்சியில் இருந்து தலைவர்கள் விலகல்: காங்கிரஸுக்கு கபில் சிபல் சரமாரி கேள்வி

படம்
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி பாஜக உள்ளிட்ட வேறு கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பவரே இல்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. ஆம், ஐயா என்று கூறி கீழ்படிந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் ஜி-23 குழுவை சேர்ந்தவர்கள். பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்போம். பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் ஏன் வெளியேறி வருகின்றனர்? from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CXHkYv

அவமதிப்பு வழக்கில் நீதிமன்ற அதிகாரத்தை சட்டம் இயற்றுவதால் கூட பறிக்க முடியாது: ராஜிவ் தய்யாவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

படம்
அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டம் இயற்றுவதன் மூலம் கூட பறிக்க முடியாதுஎன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுராஜ் இந்தியா அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் ராஜிவ் தய்யா. நீதிபதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்து வந்தார். இந்த வழக்குகளில் உண்மைத் தன்மை இல்லை என்று பலமுறை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m8T7fP

பட்டாசுகளில் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் பயன்படுத்துவதை ஏற்க முடியாது: உத்தரவை மீறும் செயல் என உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

படம்
பட்டாசுகளில் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்களை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ifQrfi

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்; பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

படம்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாநில தேர்தல்ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Y4ukSn

நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவதில் ஆர்வம்: கரோனா பாதிப்பில் இருந்து மீ்ண்டு வரும் ரியல் எஸ்டேட்

படம்
நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவதால் கரோனா பாதிப்பில் இருந்து ரியல்எஸ்டேட் தொழில் மீண்டு வரு கிறது. கரோனா பாதிப்பு, கட்டுமானத் தொழிலை வெகுவாகப் பாதித்தது. வீடு விற்பனை மந்தம், வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியது, பழைய வீட்டு வசதித் திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளை விற்க முடியாததால், புதிய வீட்டு வசதித் திட்டங்களை தொடங்க முடியாத நிலை என பல்வேறு வழிகளில் சரிவைச் சந்தித்தது ரியல் எஸ்டேட் தொழில். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39NPjer

வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

படம்
வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள 8-வது வார்டில்வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளன என்றும், தவறுகளை திருத்தி புது வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zWYVOt

தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

படம்
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DdpQYz

அரசு ஏசி பேருந்துகளின் சேவை நாளை தொடக்கம்

படம்
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நாளை முதல் 702 ஏசி அரசு பேருந்துகளின் சேவை தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல்குறைந்து வருவதையடுத்து, ஏசிபேருந்துகளின் சேவை விரைவில்தொடங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WnwUlk

ஹாசனில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித் மக்கள்: உரிமையை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக பேட்டி

படம்
கர்நாடக மாநிலம் கொப்பலில் கோயிலில் நுழைந்த 4 வயது தலித் குழந்தைக்கு கடந்த வாரம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல குல்பர்காவில் கோயிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல ஹாசன் மாவட்டத்தின் தின்டகூரு உள்ளிட்ட பிற இடங்களிலும் தலித் மக்களை ஆதிக்க சாதியினர் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதாக அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kTjJCj

அமித் ஷாவுடன் அமரீந்தர் சிங் ஆலோசனை; பாஜகவில் இணைய முடிவெடுத்திருப்பதாக தகவல்: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு; காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி

படம்
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விரைவில் இணைவார் என்று கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து இதுகுறித்து பேசினார். இதனால், காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், கட்சியின் முக்கிய தலைவர் களில் ஒருவரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. அமரீந்தரின் எதிர்ப்பை மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இருவருக் கும் இடையேயான மோதல் வலுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3F7lRhC

குஜராத் கடற்பகுதியில் புதிய புயல் ‘ஷாகீன்’- பாகிஸ்தான் நோக்கி செல்லக் கூடும் என கணிப்பு

படம்
குஜராத் கடற்பகுதியில் ‘ஷாகீன்’ என்ற புதிய புயல் நாளை (அக்.1) காலைக்குள் உருவாகி பாகிஸ்தானை நோக்கி செல்லக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயலானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திர பிரதேசத்தில் கரையை கடந்தது. இப்புயலில் எச்சங்கள் தெலங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து, நேற்று தெற்கு குஜராத் மீதிருந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39WCfTL

இந்தியாவின் அதிவேக பைக் பந்தய வீராங்கனை கல்யாணி

படம்
இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்27 வயதான கல்யாணி பொடேகர். சமீபத்தில் என்சிஆரின் புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், 2.08 நிமிடங்களில் இலக்கை கடந்து அசத்தினார் கல்யாணி பொடேகர். இதன் மூலம் இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருந்தார் கல்யாணி பொடேகர். இதற்குமுன்னர் கல்யாணி 2.16 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்திருந்தார். இந்த சாதனையை தற்போது டுகாட்டி பனிகல் வி 4 சூப்பர் பைக் மூலம் முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m9wbNI

வாத்வான் குளோபல் கேபிடல் நிறுவனத்தின் ரூ.578 கோடி சொத்துகள் முடக்கம்: உ.பி. பி.எப். முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை

படம்
இங்கிலாந்தைச் சேர்ந்த வாத்வான்குளோபல் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.578 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (யுபிபிசிஎல்) நிறுவனத்தின் ஊழியர்கள் சேம நல நிதி (பிராவிடன்ட் பண்ட்) ஊழல் புகார் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமும் (டிஹெச்எப்எல்) ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kR1mOk

தேர்தல் பணிக்கு தடுப்பூசி சான்று கட்டாயம்?- முகவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம்

படம்
உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மைய முகவர்களுக்கு தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்படும் என்று கருதப்படுவதால், முகவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கிராமப்பகுதிகளில் இலக்கு நிர்ணயித்து, கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கும் இலக்கை பூர்த்தி செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kMZQfY

குழந்தைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வாய்ப்பு: தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை

படம்
குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில், துறை ஆய்வாளர்கள், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர், சைல்டு லைன் அமைப்பு உள்ளிட்டோர் ஈரோடு - சத்தி சாலையில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஒரு கடையில் 18 வயது பூர்த்தியடையாத இருவர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ollutZ

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.450 கோடியில் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

படம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.450 கோடியில் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழிற் பூங்காக்களும், குறிப்பிட்ட தொழில்களுக்கான சிறப்புப் பூங்காக்களும் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3un2nk4

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் இருதய நோயாளிகளில் 25 சதவீதம் பேர் இளைஞர்கள்

படம்
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சம் பேர் மாரடைப்பால் பாதிக்கப் படுகின்றனர். மற்ற நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இங்கு 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப் பவர்களில் 50 சதவீதம் பேர் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். மாரடைப்பு பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டம் குறித்து கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறை டாக்டர் ஜெ.நம்பிராஜன் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3un4y7B

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அட்டை வழங்கும் முகாம்- மனவளர்ச்சி குன்றியவர்கள் அலைக்கழிப்பு

படம்
தாம்பரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாமுக்கு வந்த மனவளர்ச்சி குன்றியவர்கள், மருத்துவர் வராததால் திருப்பி அனுப்பப்பட்டனர். தாம்பரத்தில் உள்ள தனியார்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு கை, கால்ஊனமடைந்தவர்கள், கண் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், வாய்பேச முடியாதவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதில்பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தந்த குறைபாடு தொடர்பான மருத்துவர்கள் பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். அப்போதுதான் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CYbs5Z

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒடுக்குவதிலேயே காவல் துறையினர் முனைப்பாக உள்ளனர்: திருமாவளவன் குற்றச்சாட்டு

படம்
சேலம் மாவட்டம் மோரூரில் விசிக கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்மையில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் மோரூரில் பேருந்து நிலையம் அருகில் பொது இடத்தில் விசிக கொடியேற்ற காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். அரசியல்கட்சிகள், ஜாதி சங்கங்கள், ரசிகர் மன்றங்களின் கொடிகள் பறக்கும்போது, விசிக கொடியை மட்டும் ஏற்ற அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ohDHsw

கொடைக்கானல் மலை கிராமங்களில் உலாவரும் காட்டு யானைகள்: வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவிப்பு

படம்
கொடைக்கானல் அருகே உள்ளபேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர், அஞ்சுரான் மந்தை, அஞ்சுவீடுஉள்ளிட்ட மலை கிராமப் பகுதிகளில் சில மாதங்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை, விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் பேத்துப்பாறை மலை கிராமப் பகுதியில் பகலிலேயே 2 காட்டு யானைகள் உலாவந்ததால் கிராம மக்கள் அச்சம்அடைந்தனர். வீடுகளை விட்டுவெளியே வரமுடியாமல் தவித்தனர். காட்டு யானைகள் அருகேஉள்ள தோட்டப் பகுதிக்குச் சென்று விளைந்திருந்த பயிர்களை சேதப்படுத்தின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ohDG7W

வேளாண் பட்ஜெட், 1 லட்சம் மின் இணைப்புக்காக விவசாய சங்கத் தலைவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி: ஜனவரியில் பாராட்டு விழா நடத்த திட்டம்

படம்
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், விவசாயிகளுக்கு 1 லட்சம்மின் இணைப்பு திட்டம் ஆகியவற்றுக்காக விவசாயிகள் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முதல்வருக்கு ஜனவரியில் பாராட்டு விழா நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினை காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39NAVCU

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக 9 மாவட்டங்களில் கே.எஸ்.அழகிரி இன்றுமுதல் சுற்றுப்பயணம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

படம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்றுமுதல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஆ.கோபண்ணா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3odgOq9

உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் பொது விடுமுறை

படம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில் அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதரமாவட்டங்களில் காலியாக உள்ளஉள்ளாட்சி பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m9yMXH

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

படம்
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கலான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ.முகமது ரஸ்வி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3icnUas

கஞ்சா வியாபாரி என முத்திரை குத்தியதால் - மஜக பிரமுகர் வசீம் அக்ரமை கொலை செய்தேன்: போலீஸாரிடம் ‘டீல் இம்தியாஸ்’ வாக்குமூலம்

படம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் செல்வாக்குடன் வலம் வந்த என்னை, கஞ்சா வியாபாரி என அவதூறு பரப்பி அவமானப்படுத்தியதால் மஜக பிரமுகர் வசீம்அக்ரமை கொலை செய்ததாக ‘டீல் இம்தியாஸ்’ போலீஸாரின் விசாரணையில் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மஜக பிரமுகர் வசீம்அக்ரம்(42). இவர்,கடந்த 10-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புஉடைய வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த ‘டீல் இம்தியாஸ்’ மற்றும் அவரது கூட்டாளிகளான செல்வகுமார், அகஸ்டின், அஜய், பிரவீன்குமார், முனீஸ்வரன், சத்தியசீலன் ஆகிய 7 பேரும் செப்டம்பர் 15-ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Wm6RLv

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் 1,000 ஒப்பந்த செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு

படம்
பணி நிரந்தரம் செய்யக் கோரி 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததால், 2019-ல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்(எம்ஆர்பி) மூலம் நடத்தப்பட்டதேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m11XfG

9 மாவட்ட வாக்காளர் பட்டியலில் வேறு மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் அதிகம் சேர்ப்பு: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

படம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்ட வேறு மாவட்ட வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது. தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வரும் அக்.6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ogr28Z

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக எஸ்.கே. ஹல்தர் நியமனம்: 5 ஆண்டு பணியில் நீடிப்பார் என மத்திய அரசு அறிவிப்பு

படம்
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக, ம‌த்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ள‌ எஸ்.கே. ஹல்தர் நியமிக்க‌ப்பட்டுள்ளார். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா,புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 2018 ஜூன் 1-ம்தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39ICJwW

மக்களின் வாழ்வுரிமையில் தலையிடாதீர்கள்- பட்டாசு உற்பத்தியாளர்களிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

படம்
பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா அமர்வுமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டாசு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆத்மராம் நத்கர்னி, "பட்டாசுஉற்பத்தி துறை மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பட்டாசு தடை, கட்டுப்பாடுகளால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kQz7PL

ஹெலிகாப்டர் மூலம் ஏழுமலையானை தரிசிக்க கட்டணம் ரூ.1,11,116: கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

படம்
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் சென்று விஐபி பிரேக் தரிசனம் செய்வித்து, 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து திரும்பவும் ஊருக்கு அழைத்துச் செல்ல ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 116 கட்டணம் என சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பணக்கார கடவுளாககருதப்படும் திருப்பதி ஏழுமலையானின் சில நாழிகை தரிசனத்திற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். நாடுமுழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயில், கார்,பஸ் போன்ற பல்வேறு வாகனங்களில் திருப்பதி வந்து சுவாமியை தரிசித்து செல்வர். அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடக மாநிலங்களில் இருந்து பைக்கில் கூட திருப்பதிக்கு வந்து சுவாமியை தரிசித்து விட்டு செல்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39Lf3b5

எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி கைது மற்றொருவர் சுட்டுக் கொலை

படம்
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி செக்டார், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் 6 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் அண்மையில் ஊடுருவ முயன்றனர். அவர்களை நோக்கி இந்திய ராணுவம் சுட்டதில் 4 தீவிரவாதிகள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஓடிவிட்டனர். இருவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை ராணுவ வீரர்கள் கண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39LMHNX

13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வு: துரிதப்படுத்த தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

படம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள் ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத் தில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39OwmrM

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி பணிகளில் தீவிரம்: அக்.10-ல் 50 ஆயிரம் இடங்களில் மெகா முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

படம்
தமிழகத்தில் 4-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் அக்.10-ம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா தடுப்பூசிபோடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம்முழுவதும் கடந்த 12-ம் தேதி 40 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. அன்றைய தினம் ஒரேநாளில் 28.91 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CVVedW

‘பேக்கேஜ்’ ஒப்பந்தம் முறை ரத்து: பொதுப்பணித் துறை அரசாணை

படம்
‘பேக்கேஜ்’ ஒப்பந்த முறையை ரத்து செய்து பொதுப்பணித்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்ந்த பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய ‘பேக்கேஜ் டெண்டர்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 2019 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தமுறையில் பல்வேறு புகார்கள்எழுந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ulw4lA

புன்னைநல்லூர் - மாரியம்மன் கோயிலில் தேங்காய் நீர் பிரசாத கருவி: மத்திய இணை அமைச்சர் தொடங்கி வைத்தார்

படம்
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில்உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதை தடுப்பதுடன் அதை, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நவீன கருவிமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகத்தினர் (ஐஐஎப்பிடி) இந்த நவீன கருவியை வடிவமைத்து, தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நிறுவியுள்ளனர். இந்த நவீன கருவியை மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள், நீர்வளத் துறை இணைஅமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o8h0H8

முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் 7 மாத குழந்தை பாதிப்பு- சிகிச்சைக்கு உதவ முதல்வருக்கு கோரிக்கை: மருந்துக்கு ரூ.16 கோடி தேவை என பெற்றோர் வேதனை

படம்
முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 7 மாதகுழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான மருந்து தேவைப்படுவதால், சிகிச்சைக்கு தமிழக முதல்வர் உதவிட வேண்டி சேலம் ஆட்சியரிடம் குழந்தையின் பெற்றோர் மனு அளித்தனர். சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த பூபதி (30), ஜெயந்தி (29) தம்பதியின் 7 மாத பெண் குழந்தை ஸ்ரீஷா. இவர் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுஉள்ளார். இந்நிலையில், சிகிச்சைக்கு உதவிடக்கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குழந்தையின் பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZDKVwH

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் உடனடியாக தீர்வு காண வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

படம்
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணமுதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3odmSPf

தமிழகம் முழுவதும் 115 இடங்களில் நடந்த ஆய்வில் ரூ.101 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிறுவனங்களின் உரிமம் ரத்து என அமைச்சர் மூர்த்தி தகவல்

படம்
தமிழகத்தில் 115 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் ரூ.101 கோடிக்குவரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று வணிக வரி, பதிவுத் துறைஅமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். சென்னையில் வணிக வரித் துறை அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ARuVVt

டெல்லி நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக் கொலை: சிறையில் இருந்தவாறே தொலைபேசி மூலம் ‘ரன்னிங் கமன்ட்ரி’ போல் தகவல் பெற்ற கைதி

படம்
வடக்கு டெல்லியில் ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் கடந்த 24-ம் தேதிவழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது நீதிமன்ற அறை எண் 207 அருகே திடீரென துப்பாக்கிச்சுடும் சப்தம் கேட்டதால் பலரும் அலறியடித்து ஓடினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸார் விரைந்தனர். அப்போது இரு வேறு ரவுடி கும்பல்கள் மோதிக்கொண்டன. வழக்கறிஞர்கள் உடையில் வந்த ஒரு கும்பல் மற்றொரு ரவுடி கும்பல் மீது துப்பாக்கியால் சுட்டுதாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரு தரப்பினர் மோதலை தடுக்க போலீஸார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XYt4zO

கேரளாவில் 3 சென்ட் நிலத்தில் 400 மரங்கள்- வறண்ட பூமியை சோலையாக்கிய இளைஞர்

படம்
கேரளத்தின் கொல்லம் பகுதி யைச் சேர்ந்தவர் ஹரி. இவர் பிழைப்புக்காக தன் சொந்த ஊரில் இருந்த விவசாய நிலங்களை விற்றுவிட்டு திருவனந்தபுரத்தில் குடியேறினார். வேறு தொழில்செய்து வருவாய் ஈட்டிவந்தாலும் விவசாய நிலத்தை விற்ற துயரம் அவரை துரத்தியது. இதனால் திருவனந்தபுரம் அருகில் உள்ள புளியரக்கோணம் பகுதியில் விவசாயம் செய்யும் ஆர்வத்துடன் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினார். அப்பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக் குறையும் நிலவியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39LwMiN

பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு: தலைமை நீதிபதி

படம்
உச்ச நீதிமன்றத்தில் புதிதாகநியமிக்கப்பட்ட 9 நீதிபதிகளுக்கு பாராட்டு விழா உச்ச நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு என்.வி. ரமணா பேசியதாவது: நமது சமுதாயத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள் ஒடுக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் 30 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே பெண் நீதிபதிகள் உள்ளனர். உயர் நீதிமன்றங்களில் 11.5 சதவீதமும், உச்ச நீதிமன்றத்தில் 11 முதல் 12 சதவீதமும் பெண் நீதிபதிகள் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CT1Qtu

கிழக்கிந்திய கம்பெனி போல மதம் மாற்றுவதுதான் : அமேசானின் நோக்கம்: ஆர்எஸ்எஸ் பத்திரிகையில் தகவல்

படம்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான `பாஞ்சன்யா’, சில வாரங்களுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தை வெளிநாட்டு உளவு நிறுவனம் என விமர்சித்து கட்டுரைஎழுதி இருந்தது. இந்நிலையில், `கிழக்கிந்திய கம்பெனி 2.0’ என்று தலைப்பிட்டு பாஞ்சன்யா இதழின் ஆசிரியர் குழு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் அமேசானின் திட்டம் என்றும் அதற்காக முதலில் அரசியல், பொருளாதார ரீதியாக உள்ளே நுழைந்து பின்னர் தனிநபர் சுதந்திரத்தை பறிக்கும் செயலில் அது ஈடுபட்டுள்ள தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3os7zTd