இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் டைரி - 13: புதிதாக வந்தாச்சு ‘ஏஐ’ தேடு பொறி!

படம்
இணைய உலகின் மிகப்பெரிய தேடு பொறி எது என்பதற்கான பதில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அது, ‘கூகுள்’. சரி, இரண்டாவது பெரிய தேடு பொறி எது எனத் தெரியுமா? இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஏனெனில், கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தும் தேடு பொறியாக இருப்பது ‘யூடியூப்’ என்று சொல்லப்படுகிறது. மைக்ரோசாஃப்டின் ‘பிங்’ அல்லது தனியுரிமை காக்கும் ‘டக்டக்கோ’ போன்றவற்றைப் பின்னுக்குத்தள்ளி ‘யூடியூப்’ இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. அதே நேரம், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில், இளம் தலைமுறையினர் கூகுளில் தேடுவதைவிட, ‘டிக்டாக்’ சேவையில் ஒரு விஷயத்தைத் தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘ஜூமர்ஸ்’ எனச் சொல்லப்படும் புத்தாயிரமாண்டு தலைமுறைக்கு அடுத்து வரும் தலைமுறையினரும் ‘டிக்டாக்’ தளத்தைத் தேடு பொறியாகப் பயன்படுத்தி வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Lates...

யூடியூப் வீடியோ சம்மரி முதல் ஆடியோ ஓவர்வியூ வரை: கூகுள் நோட்புக் புதிய அம்சங்கள்

படம்
நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கூகுள் நிறுவனத்தின் டூல் தான் ‘கூகுள் நோட்புக்LM’. அண்மையில் சில முக்கிய அப்டேட்களை இதில் அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த புதிய அம்சங்களின் மூலம் யூடியூப் வீடியோக்களை சுருக்கமான உரையாக பெறுவது முதல் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். கூகுள் நோட்புக்LM? இதில் கூகுள் பயனர்கள் தங்களது பிடிஎஃப் கோப்பு, கூகுள் டாக்குமெண்டுகள், வலைதள முகவரி, யூடியூப் வீடியோ லிங்குகள் மற்றும் பலவற்றை அப்லோட் செய்யலாம். அப்படி பதிவேற்றப்பட்ட கன்டென்ட்களின் முக்கிய விவரங்களை ரத்தின சுருக்கமாக வழங்கும் டிஜிட்டல் நோட்டு புத்தகம் தான் இந்த நோட்புக் எல்எம். பெரிய கோப்புகள் மற்றும் வீடியோக்களில் இருந்து முக்கிய விவரங்களை இது பயனர்களுக்கு வழங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5MbVUCY

விவோ வி40e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iLPNwd4

ஜான் சீனா குரலில் பேச உள்ள மெட்டா ஏஐ சாட்பாட்!

படம்
நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் அதன் பயனர்களுடன் நடிகைகள் ஜூடி டென்ச், கிறிஸ்டன் பெல், நடிகர் மற்றும் தொழில்முறை ரெஸ்லிங் வீரர் ஜான் சீனா ஆகியோரது குரலில் பேச உள்ளது. இது தொடர்பாக மெட்டா மற்றும் நடிகர்களின் தரப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/paCLVsj

ஐபோன் 16 புரோ போனில் டச் ஸ்க்ரீன் பிரச்சினை: பயனர்கள் புகார்

படம்
சென்னை: ஐபோன் 16 புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களில் டச் ஸ்க்ரீன் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ஆப்பிள் சாதனங்கள் குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் 9டு5 மேக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சர்வதேச சந்தையில் ஐபோன் 16 சீரிஸ் மாடல் போன்கள் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐபோன் 16 போன்கள் விற்பனை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vkp1FjJ

டிஜிட்டல் டைரி - 12: மீண்டும் வருகிறதா ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டு?

படம்
இணையத்தில் கவனம் ஈர்த்த இரண்டு முக்கியச் செய்திகளைப் பார்ப்போம். ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டுக்கு அறிமுகம் தேவையில்லை. ஏனென்றால், பத்தாண்டுகளுக்கு முன்பு இணையத்தைக் கலக்கிய விளையாட்டு இது. அறிமுகமான சில மாதங்களில் பிரபலமாகி, இணையத்தைச் சுற்றி வந்த இந்த விளையாட்டு, திடீரென காணாமல் போனது. பின்பு இணையவாசிகள் அந்த விளையாட்டை மறந்து போனார்கள். ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாடுவது எளிதாகத் தோன்றினாலும் இதில் முன்னேறுவது சவாலான காரியம். அதோடு இந்த விளையாட்டில் வெற்றி பெறுவதை எல்லாம் நினைத்துகூடப் பார்க்க முடியாது. குழாய் தடைகளின் மீது மோதாமல் பறவையை முன்னேற வைப்பது மிகவும் கடினம். விளையாட்டை வெல்லவும் முடியாமல், அதிலிருந்து விலகவும் முடியாமல் ஏராளமானோரைப் புலம்ப வைத்து இணையத்தில் வைரலானது. பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படியொரு வரலாற்றைக் கொண்ட ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டு பயனர்களின் உளவியல் மாற்றங்களைப் பற்றியும் விவாதிக்க வைத்தது. விளையாட்டின் இயற்பியல் அம்சங்களும் பேசுபொருளாகின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil New...

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wEHauGx

விளையாட்டு வீரர்கள் காயத்தை கண்டறிய ‘ஏ.ஐ.’ ஸ்கேனர் கருவி: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

படம்
சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை கண்டறியும் வகையில், செயற்கை நுண்ணறிவுடன் (ஏ.ஐ) கூடிய ஸ்கேனர் கருவியை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர் கருவியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. பேராசிரியர் அருண் கே.திட்டை தலைமையிலான ஐஐடி விளையாட்டு அறிவியல், ஆய்வு சிறப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/olCFDgY

லாவா பிளேஸ் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளேஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7uUmkDI

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகளை கொண்டு AI-க்கு பயிற்சி தரும் மெட்டா நிறுவனம்! 

படம்
லண்டன்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 18+ பயனர்கள் பகிரும் பதிவுகளைக் கொண்டு ஏஐ-க்கு பயிற்சி அளிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்தப் பணியை முறைப்படி பிரிட்டன் நாட்டில் தொடங்க உள்ளதாகவும் மெட்டா அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AESVLdP

ரியல்மி பி2 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் 

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி பி2 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Gz1Chm8

டிஜிட்டல் டைரி 11: மீண்டும் பார்க்க முடியாத வினோத இணையதளம்

படம்
இணையதளங்களை உருவாக்குவதற்கான நோக்கங்களில் அதிக பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்பதும் ஒன்று. பெரும்பாலான தளங்கள், பார்வையாளர்களை மீண்டும் வருகை தர வைப்பதற்கான உள்ளடக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த வழக்கமான வடிவத்துக்கு மாறாக ‘ஒன்லி விசிட் ஒன்ஸ்’ (onlyvisitonce.com) என்கிற தளத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஒன்லி விசிட் ஒன்ஸ்’ தளத்தில் நுழைந்ததுமே ‘வணக்கம் பயனரே, நீங்கள் பதிவு செய்ய விரும்பும் வாழ்க்கை அறிவுரையை எழுதுக அல்லது வாசிக்க’ என்கிற செய்தியைக் காண்பிக்கிறது. நீங்கள் விருப்பப்பட்டால் செய்தியைப் பதிவு செய்யலாம் அல்லது செய்தியை வாசித்துவிட்டு இணையதளத்திலிருந்து வெளியேறலாம். ஒரு வேளை, இரண்டாம் முறை அதே தளத்துக்குச் சென்று நீங்கள் பார்க்க விரும்பினால், ‘ஏற்கெனவே இத்தளத்தைப் பார்த்திருக்கிறீர்கள். உங்கள் பயணம் முன்னோக்கி இருக்க வேண்டும், திரும்பிப் பார்க்க வேண்டாம்’ என்கிற வாசகத்தைக் காண்பித்து விடை கொடுத்து அனுப்புகிறது. from இந்து தமிழ் திசை : News in Ta...

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ‘லைக்’ செய்யலாம்: புதிய அம்சம் அறிமுகம்!

படம்
சென்னை: இனி வாட்ஸ்அப் செயலியிலும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போலவே ஸ்டேட்டஸ்களை லைக் செய்யும் புதிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் வருகைக்குப் பிறகு மற்ற சமூக வலைதளங்களில் அதற்கு ஏற்ப புதிய அம்சங்கள் அறிமுகமாவது வாடிக்கையாகி விட்டது. இளைய தலைமுறையினர் அதிக அளவில் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பல்வேறு அம்சங்களை வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் செயலிகளிலும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது அவற்றின் தாய் நிறுவனமான மெட்டா. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p3fT7zS

விவோ T3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ப்ரீமியம் செக்மென்ட் போனாக இதனை விவோ வெளியிட்டுள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wgzOqMD

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 - தூக்கமின்மை முதல் இதய நோய் வரை கண்டறியும் வசதி

படம்
குபெர்டினோ: ஆப்பிள் நிறுவனம் திங்கட்கிழமை அன்று ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10-னை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தூக்கமின்மை முதல் இருதய நோய் வரையிலான சில நோய்களை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்கள் தங்களுக்கு வரும் மெசேஜ்கள், முக்கிய நோட்டிபிகேஷன்கள், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகிறது ஸ்மார்ட்வாட்ச். அதோடு இதய துடிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் ஆரோக்கிய நலன் சார்ந்த தகவல்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் வழங்கி வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7MbpHga

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
குபெர்டினோ: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோ நகரில் ஆப்பிள் நிறுவனத்தின் ‘It’s Glowtime’ நிகழ்வில் ஐபோன் 16 சீரிஸ் போன்களை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமாகி உள்ள இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புது புது மாடல் ஐபோன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hYAVN8Z

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qkBZu8P

டிஜிட்டல் டைரி - 10: சாட் ஜிபிடி தவறு செய்யுமா?

படம்
சாட் ஜிபிடி உள்ளிட்ட ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகள் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கும் என்கிற கருத்து பரவலாக உள்ளது. அதுமட்டுமல்ல பல விஷயங்களில் ஏஐ சாட்பாட்களால் மனித ஆற்றலை விஞ்சிவிட முடியும் எனச் சொல்லப்படும் நிலையில், இவற்றின் வரம்புகளும் எல்லைகளும் அவ்வப்போது வெளிப்படுகின்றன. அண்மையில் நடந்த ஒரு நிகழ்வே இதற்கு உதாரணம். ‘ஸ்டிராபெரி’ குழப்பம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BsEJ3Fk

“உங்கள் போன் நீங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறது” - பிரபல மார்கெட்டிங் நிறுவனம் ஒப்புதல்

படம்
வாஷிங்டன்: நம்முடைய ஸ்மார்ட்போன் நாம் பேசும் உரையாடல்களை கவனிப்பதாக, பேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் பணியாற்றும் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது எதேச்சையாக ஏதாவது ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்திருந்தால் தொடர்ந்து அது பற்றிய விளம்பரங்களாகவே வருவதை கவனித்திருப்போம். இன்னும் ஒருபடி மேலே போய் போனிலோ அல்லது நேரிலோ ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று யாரிடமாவது பேசிக் கொண்டிருந்த பிறகு, அது தொடர்பான விளம்பரங்கள் வருவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக ஒரு டிவி வாங்குவதை பற்றியோ அல்லது வாடகை வீடு குறித்தோ நீங்கள் பேசியிருந்தால் அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் பேசிக் கொண்டிருந்த பொருட்கள் தொடர்பான விளம்பரங்களே தொடர்ந்து உங்கள் டைம்லைனில் வந்து கொண்டிருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/doCpBmz

இந்தியாவில் ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் 13+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RmIe9cP

ஐஎம்இஐ எண்ணை மாற்றினாலும் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்கலாம்!

படம்
சென்னை: ஐஎம்இஐ எண்ணை மாற்றினாலும் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்கலாம் என தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சைபர் தாக்குதல்கள் தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்களுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், https://ift.tt/hQXeORI என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை இந்த இணையதளம் மூலமாகவோ, ‘1930’ என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம். இதை கண்காணிக்க டிஜிபி அலுவலகத்தில் தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9ieSKs2