இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மொபைல் போன் மூலம் வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பது எப்படி? Step-by-Step வழிகாட்டி

படம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், எளிதான வழியில் மொபைல் போன் மூலம் அதை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து பாப்போம். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தர வேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில், ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9iuosnO

சமூக வலைதள நிறுவனங்கள் இந்திய சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்புப் பேட்டி

படம்
மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘தி இந்து’ நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, தொலைத்தொடர்பு துறை, செமிகண்டக்டர் தயாரிப்பு, ரயில்வே துறை சார்ந்து மத்திய அரசு கொண்டிருக்கும் திட்டங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார். பேட்டியிலிருந்து…. தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7DVSUzw

இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் | விலை and அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 11SE போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து சற்று விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் நோட் 11SE என்ற போனை அறிமுகம் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SGjvNQZ

2030-க்குள் இந்தியா 6ஜி சேவையை பெற வாய்ப்பு: பிரதமர் மோடி

படம்
புதுடெல்லி: எதிர்வரும் 2030-க்குள் இந்தியாவில் 6ஜி சேவை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனை ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 நிகழ்வில் பேசியபோது அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஏலம் இந்தியாவில் நடைபெற்றது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு இந்த ஏலத்தில் விற்பனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.88 ஆயிரம் கோடிக்கு அலைக்கற்றையை வாங்கி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடபோன் ஐடியா ரூ.18,784 கோடிக்கும் அலைக்கற்றையை வாங்கியதாக தெரிகிறது. இந்த மாத இறுதிக்குள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Tyoc8rw

சிவகங்கையில் குடிநீர் வருவதை அறிய அலாரம் உருவாக்கிய தொழிலாளி

படம்
சிவகங்கையில் நகராட்சி குடிநீர் குழாயில் வருவதை அறிந்து கொள்ளும் வகையில் தொழிலாளி ஒருவர் அலாரம் கண்டுபிடித்துள்ளார். சிவகங்கையில் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் வரும் நேரத்தை அறிந்து குடங்களில் பிடிக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OcWqy9R

இந்தியாவில் ரூ.20,000-க்கு குறைவான பட்ஜெட்டில் கிட்டும் 5ஜி ஸமார்ட்போன்கள் - ஒரு பட்டியல்

படம்
இந்தியாவில் வெகு விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கான பணியில் டெலிகாம் நிறுவனங்கள் பிசியாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவாக பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். இந்த ஸ்மார்ட்டான டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் இருக்கும் என கணித்திருக்கமாட்டார். அந்த அளவிற்கு மாறியுள்ளது செல்போன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Trwoe0h

நம்பி நாராயணனை மிகைப்படுத்தி காட்டியது ‘ராக்கெட்ரி’ - முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் பரபரப்பு பேட்டி

படம்
விண்வெளி திட்டத்தில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் தனிநபர் பங்களிப்பு தொடர்பான சில கூற்றுகளுக்கு, அவருடன் பணியாற்றிய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அண்மையில் நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இஸ்ரோ பயன்படுத்தி வரும் கிரையோஜெனிக் புரோபல்ஷன் (Propulsion) தொழில்நுட்பத்தில் நம்பி நாராயணின் பங்களிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துகளுக்கு விஞ்ஞானிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/18qAzrn

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: புதிய வரைபடத்தை வெளியிட்ட இஎஸ்ஏ

படம்
சிகப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் தண்ணீர் இருந்ததை சுட்டிக்காட்டும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA). மனிதர்களின் எதிர்கால வசிப்பிடமாக இந்த கோள் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், இந்த வரைபடம் வெளியாகி உள்ளது. உலக நாடுகள் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் தங்களை மற்ற நாடுகளுக்கு முன்பு செல்வாக்கு மிக்க வல்லரசாக நிலை நிறுத்திக் கொள்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாடுகள் அனைத்தும் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளுக்காக கோடான கோடி ரூபாயை செலவிட்டு வருகின்றன. இந்த கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியம் குறித்த ஆராய்ச்சிகள் அதிகம் நடந்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/v6ClYTR

காற்று மாசிலிருந்து பாதுகாப்பு: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய ஹெல்மெட் தயாரித்த ஸ்டார்அப் நிறுவனம்

படம்
புதுடெல்லி: தூய்மையான காற்றை சுவாசிக்க உதவி செய்யும் புதிய தலைக்கவசம் ஒன்றை டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. ‘ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ்’ என்ற அந்த புதிய நிறுவனம் தயாரித்துள்ள அந்த தலைக்கவசத்தில் 'புளூடூத்'துடன் இணைக்கப்பட்ட செயலி ஒன்று உள்ளது. இந்த செயலி, தலைக்கவசத்தை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்ற தகவலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Z852hrI

நாய்ஸ்ஃபிட் கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: 50 ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் அசத்தும் அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியச் சந்தையில் நாய்ஸ்ஃபிட் (NoiseFit) கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகியுள்ளது. 50 ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் அசத்தலான அம்சங்களை உள்ளடக்கி இந்த வாட்ச் வெளிவந்துள்ளது. இதன் விலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பார்ப்போம். நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்பட்களை வடிவமைத்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் Wearable டிவைஸ்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் நாய்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில், நாய்ஸ்ஃபிட் கோர் 2 என்ற ஸ்மார்ட்வாட்ச்சை இந்நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கலர்ஃபிட் அல்ட்ரா 2 பஸ் வாட்ச்சை இந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5Gwb74F

'மீம்ஸ்' பார்க்க தினமும் 30 நிமிடங்கள் வரை செலவிடும் இந்திய நெட்டிசன்கள்

படம்
இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் வரை மீம்ஸ் பார்க்க நேரம் செலவிட்டு வருவதாக RedSeer எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை ஆய்வறிக்கையாகவும் தாக்கல் செய்துள்ளது அந்நிறுவனம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் 80 சதவீதம் மீம்ஸ் பார்க்கும் வழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயனர்கள் தங்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மீம்ஸ் பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு துறையில் மீம்ஸ்கள் உச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இந்த டிமாண்ட் காரணமாக மீம்ஸ்களை உருவாக்க உதவும் தளங்களின் எண்ணிக்கையும் சந்தையில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ABoIqGJ

உடனடி கடன் தருவதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்த 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் முடக்கம்

படம்
புதுடெல்லி: குறைந்த வட்டிக்கு உடனடி கடன் தருவதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்த கும்பலை கண்டுபிடித்த டெல்லி போலீஸார், அவர்கள் பயன்படுத்திய 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளை முடக்கியுள்ளனர். சீனாவைச் சேர்ந்த ஒரு கும்பல் மிக குறைந்த வட்டிக்கு, உடனடியாக கடன் தருவதாகவும், 90 நாட்களுக்கு வட்டியில்லை என இணையதளங்களில் விளம்பரம் செய்து டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் இதர மாநிலங்களில் மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://www.hindutamil.in/news/technology/846665-100-chinese-instant-loan-apps-blocked-for-extorting-crores-of-money-people.html?frm=rss_more_article

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் விதிக்கும் விவகாரம்: நிதி அமைச்சகம் விளக்கம்

படம்
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், அது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இது சமூக வலைதள பக்கங்களில் விவாதப் பொருளானது. இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமெண்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H4KMEmo

புனே | உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து அறிமுகம்

படம்
புனே: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இன்று (ஆகஸ்ட் 21) புனேயில் கேபிஐடி-சிஎஸ்ஐஆர் -ஆல் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை அறிமுகப்படுத்தினார். “பிரதமர் மோடியின் ஹைட்ரஜன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ற வகையில் மலிவான மற்றும் அணுகக்கூடிய தூய்மையான எரிசக்தியில் இயங்கக்கூடியதாக இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/guQCr7a

உங்களது இன்ஸ்டா ரீல்ஸை பேஸ்புக்கில் போஸ்ட் செய்வது எப்படி?

படம்
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கிற்கான புதிய ரீல்ஸ் அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் டிக் டாக்குக்கு தடை விதிக்கப்பட்டப் பிறகு இன்ஸ்டாகிராமின் புகழ் பரவலாகிவிட்டது. இன்ஸ்டாகிராமின் இலக்கு இளைஞர்கள் என்பதால் அவர்களை குறிவைத்து அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய அறிவிப்பை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது. அதன்படி , இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸை பேஸ்புக்கிலும் பயன்படுத்திக் கொள்ளும்படி புது அம்சம் கொண்டுவரப்பட உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h3UGMLK

இந்தியாவின் முதல் மின்சார டபுள்-டெக்கர் பஸ்: அறிந்ததும் அறியாததும்

படம்
இந்தியாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்ற வண்ணம் உள்ளது. நிலம், நீர், ஆகாயம் என மக்களுக்கான போக்குவரத்து மேம்பட்டுக் கொண்டே வருகிறது. அதன் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது மும்பை மாநகர சாலைகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் உலா வரவுள்ளது இந்த மின்சார டபுள்-டெக்கர் பேருந்து. இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த வகை பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பேருந்தின் பயணத்தை தொடங்கி வைத்துள்ளார். Switch EiV 22 என அழைக்கப்படும் இந்தப் பேருந்தை பாம்பே மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து (BEST) கழகம் இயக்க உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aZe4ED6

5ஜி-யை அமல்படுத்த தயாராக இருங்கள் - தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

படம்
புதுடெல்லி : தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தயாராக வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது. 7 நாட்கள் நீடித்த ஏலம் ஆகஸ்ட் 1-ல் முடி வடைந்தது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72,000 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அளவில் ஏலம் போனது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hqHY8O4

ரியல்மி 9i | பட்ஜெட் விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி இந்தியா

படம்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையிலான ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n2pvhsi

இந்தியாவில் VLC மீடியா பிளேயருக்கு தடை: அரசு தெரிவித்துள்ளது என்ன?

படம்
இந்தியாவில் வீடியோ லேன் நிறுவனம் டெவெலப் செய்த VLC மீடியா பிளேயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் சார்பில் ஆர்டிஐ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அரசு தரப்பில் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் VLC மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன என்பது வீடியோ லேன் நிறுவனத்திற்கு தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QfHxRnv

நிறம் மாறும் பேக் பேனல் உடன் விவோ V25 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை and சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ V25 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதன் பின்புறத்தில் உள்ள பேனல் நிறம் மாறும் தன்மையை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது V25 புரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jhq5yAw

இந்தியா @ 75: டிஜிட்டல் இந்தியாவும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும்

படம்
இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சியின்போதுதான் தொலைத் தொடர்பு துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது. அஞ்சல், டெலிகிராப் என தகவல் பரிமாற்றத்திற்குத் தேவையான துறைகளில் ஆங்கிலேயர்கள் கவனம் செலுத்தினர். அதில் பல்வேறு மாற்றங்களையும் அவர்கள் கொண்டு வந்தனர். அப்படி வளர்ந்த இந்திய தொலைத் தொடர்புத் துறை கடந்த 75 ஆண்டுகளில் சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு துறையாக மாறியிருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ePzDa5g

‘வேற்றுமையில் ஒற்றுமை’: சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது

படம்
இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு காலம் நிறைவு பெற்றுள்ளது. இந்த கொண்டாட்ட நிகழ்வை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுல் இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரத்தை தாங்கிப்பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. டெக்னாலஜி உலகின் சாம்ராட்களில் ஒன்று கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் இந்த பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0ZLAp6F

ரியல் ‘சிட்டி’ - சியோமி அறிமுகம் செய்த ஹியூமனாய்டு ரோபோ: மதிப்பு ரூ.82 லட்சம்

படம்
மனிதர்களின் உணர்வுகளை உணரும் ஹியூமனாய்டு ரோபோவை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 82 லட்ச ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் அப்படியே ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோவை நினைவுபடுத்துகிறது. அந்தப் படத்தில் டாக்டர் வசீகரன் எப்படி மேடையில் சிட்டி ரோபோவை அறிமுகம் செய்து வைப்பாரோ, அதேபோல இந்த ரோபோவின் அறிமுகமும் நடந்துள்ளது. அந்த ரோபோவின் பெயர் ‘சைபர்ஒன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8Tl1vhI

இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ G62 5ஜி ஸ்மார்ட்போன் | விலை and அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ G62 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைய காலமாக வரிசையாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புது போன்களை மோட்டோ விற்பனைக்கு களம் இறக்கி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T5piYD8

சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 4, ஃப்ளிப் 4 மற்றும் சில சாதனங்கள் இந்தியாவில் அறிமுகம் | முக்கிய அம்சங்கள்

படம்
புதுடெல்லி: சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி Z ஃபோல்ட் 4, ஃப்ளிப் 4, வாட்ச் 5 சீரிஸ் மற்றும் TWS இயர்பட்ஸை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனங்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். ஸ்மார்ட்போன்களின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக மடக்கும் வகையிலான ஃபோல்டபிள் மற்றும் ஃப்ளிப் போன்கள் பார்க்கப்படுகின்றன. இந்த போன்களை உருவாக்கி, சந்தைப்படுத்தும் முயற்சியில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் சாம்சங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/01Hi47A

புதிய பிரைவசி அம்சங்களை அறிமுகம் செய்த வாட்ஸ்அப் | முழு விவரம்

படம்
கலிபோர்னியா: பயனர்கள் பிரைவசி சார்ந்த புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப். அந்த அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம். வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/J2pLt4b

இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் 10T 5ஜி ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியா மற்றும் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபிளேக் ஷிப் (Flagship) போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் ஒன்பிளஸ் 10T 5ஜி போனை இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vPmY51r

இந்திய சந்தையில் அறிமுகமானது ஒப்போ A77 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனத்தின் A77 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் சீன தேச நிறுவனங்களில் ஒன்று ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. இப்போது ஒப்போ நிறுவனத்தின் ‘ஏ’ சீரிஸ் போன்களில் ஒன்றான A77 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/95XQA3f

5ஜி அலைக்கற்றை ஏலம் | ரூ.88 ஆயிரம் கோடியுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் - மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு விற்பனை

படம்
புதுடெல்லி : கடந்த 7 நாட்களாக நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று முடிவடைந்தது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு விற்பனையானது. இதில் ரூ.88 ஆயிரம் கோடியுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. தொலைத் தொடர்பு துறையில் இப்போது 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக 5ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் செல்போன்களின் இணையதள வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கும். தானாக இயங்கும் கார், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உருவாகி வரும் சூழலில், 5ஜி சேவைக்கான தேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சேவை முக்கிய நகரங்களில் வரும் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2vMyPNq