இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏப்.1-ம் தேதி முதல் நவீன ஸ்மார்ட் போர்டு: தொடக்க கல்வி இயக்குநரகம் தகவல்

படம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் கற்பித்தலுக்கான அதிநவீன ஸ்மார்ட் போர்டுகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி (தொடக்க கல்வி)அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மடிக்கணினி வழங்கி, அதற்கான அறிக்கையை இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து, அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டுகள் விநியோகம் செய்யப்பட உள்ளன. அவற்றை முறையாக பெற்று, வகுப்பறையில் நிறுவும் பணிகளை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுத்தல்கள் வழங்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ecVbz3k

மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐஐடி பட்டதாரி பவன் டவுலூரி!

படம்
நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபோஸின் புதிய தலைவராக சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் மைக்ரோசாப்ட் விண்டோஸை வழிநடத்தி வந்த பனோஸ் பனாய், அமேசான் நிறுவனத்தில் இணைவதாக கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். பனோஸ் ராஜினாமாவுக்கு பின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்கள் தனித்தனி தலைமையின் கீழ் பிரிக்கப்பட்டன. இதில் சர்ஃபேஸ் குழுவை வழிநடத்தியது ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரான பவன் டவுலூரியே. மைக்கேல் பரக்கின் என்பவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் குழுவை வழிநடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Zd2OP1L

வேட்பாளர்கள், மாற்றுத் திறன் வாக்காளர்களுக்கு செயலிகள்: சுவிதா, சாக்‌ஷம் என்ற செயலிகளில் பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன

படம்
சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், வேட்பாளர்கள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்காக ‘சுவிதா’ மற்றும் ‘சாக்‌ஷம்’ என்ற பெயரில் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு செயலிகள் மூலம் வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ‘சுவிதா’ செயலிவேட்பாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்வது, வேட்புமனுவின் நிலை குறித்து அறிந்து கொள்வது, பிரச்சாரத்துக்கான அனுமதி பெறுவது, அனுமதி விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வது, அனுமதிக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பெற்று பதிவு செய்தல் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த செயலி மூலம் வேட்பாளர்களின் நேரம் மிச்சமாவதுடன், சரியான விவரங்களையும் பெற முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Cy0uLZ8

விவோ T3 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் மிட்-ரேஞ்ஜ்டு செக்மென்ட் போனாக வெளியாகி உள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் T3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/frkQaZb

ரியல்மி நார்சோ 70 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 70 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qxdbkGJ

இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ரூ.20,000-க்கும் குறைவான விலையில் பயனர்களுக்கு தேவையான முக்கிய அம்சங்களை உள்ளடக்கி இந்த போன் வெளிவந்துள்ளது. சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஜனவரியில் எக்ஸ்6 மற்றும் எக்ஸ்6 புரோ மாடல் போன்கள் வெளியாகி இருந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4gu870r

‘Devin’ - உலகின் முதல் AI மென்பொருள் இன்ஜினியர் அறிமுகம்!

படம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் உலகின் முதல் ஏஐ மென்பொருள் இன்ஜினியரை அறிமுகம் செய்துள்ளது ‘காக்னிஷன்’ எனும் நிறுவனம். இதனை ‘டெவின்’ என அழைக்கிறது அந்நிறுவனம். கோடிங் எழுத இதனை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ன் பிற்பாதியில் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த பேச்சு உலக அளவில் மக்கள் மத்தியில் அதிகரித்தது. அதற்கான விதையை விதைத்தது ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி. அதன் பிறகு பல்வேறு நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏஐ வகை சாட் பாட்களை அறிமுகம் செய்தன. வரும் நாட்களில் உலகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆளும் என தெரிகிறது. அந்த வகையில் அதன் இயக்கத்துக்கு உதவும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உலகில் வல்லமை கொண்ட நபராக அறியப்படவும் வாய்ப்பு உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4WYoO5G

iQOO Z9 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z9 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PFOmzUg

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது லாவா பிளேஸ் Curve 5ஜி ஸ்மார்ட்போன் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது லாவா பிளேஸ் Curve 5ஜி ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் Curve 5ஜி போன் விற்பனைக்கு வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qChEAfe

‘யூடியூப் கிரியேட்’ - வீடியோக்களை மொபைல் போனில் எடிட் செய்ய உதவும் செயலி

படம்
சென்னை: மொபைல் போன் பயனர்கள் தங்களது கைவசம் உள்ள வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்ய உதவுகிறது யூடியூப் கிரியேட் ஆப் எனும் செயலி. சந்தா கட்டணம் ஏதுமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிரியேட்டர்களை டார்கெட் செய்து கடந்த ஆண்டு இந்த செயலியை யூடியூப் அறிமுகம் செய்தது. இப்போது இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு இதன் சேவையை விரிவு செய்துள்ளது. இந்த செயலி இப்போதைக்கு பீட்டா வெர்ஷனாக இயங்கி வருகிறது. உலக அளவில் உள்ள பயனர்களின் கருத்துகளை பெற்று இது மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7sziBDw

ரியல்மி 12+ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 12 சீரிஸ் போன்களின் வரிசையில் ரியல்மி 12+ மற்றும் ரியல்மி 12 அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன் களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ou9Z056

‘நத்திங் போன் (2a)’ இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ‘நத்திங் போன் (2a)’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டின் ஜூலை மாதம் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RvWOCl8

உலக அளவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை சில நிமிடங்கள் முடக்கம்!

படம்
சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள சேவை முடங்கின. இதனால் பயனர்கள் சம்பந்தப்பட்ட தளங்களின் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்தனர். இதனை மெட்டா நிறுவனம் உறுதி செய்துள்ளது. முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அது குறித்த தகவலை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் முடங்கியது குறித்து பயனர்கள் தெரிவித்திருந்தனர். அதில் தங்களால் லாக்-இன் செய்ய முடியவில்லை (65%), செயலியை பயன்படுத்த முடியவில்லை (27%) மற்றும் வலைதள பக்கத்தில் பயன்படுத்த முடியவில்லை (7%) என ஃபேஸ்புக் தள முடக்கம் குறித்து தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VkmlJng

சாம்சங் கேலக்சி F15 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எஃப்15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி எஃப் வரிசையில் எஃப் 15 போன் அறிமுகமாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CrGhWIy

கூகுள் ப்ளே ஸ்டோர் Vs இந்திய நிறுவனங்கள்... தலையிடும் மத்திய அரசு - பின்னணி என்ன?

படம்
புதுடெல்லி : பில்லிங் கொள்கை தொடர்பாக கூகுள் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையே மோதல் எழுந்த நிலையில், அதனை தீர்க்க கூகுள் அதிகாரி களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். பிரச்சினை என்ன? - கூகுள் ப்ளே ஸ்டோர் ஆப்பிலிருந்து பயனர்கள் தனியார் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்காக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களிடம் இருந்து கட்டண சேவையாக இதுவரை கூகுள் 11 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eQvOyst

நிலவில் சோதனைக் கூடம் நிறுவும் இந்தியா: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

படம்
திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), பெங்களூரு ஐ-ஸ்டெம் நிறுவனம் சார்பில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ‘சமவேஷா 2024 ’என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் என்ஐடி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியது: வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியா தன்னுடைய விண்வெளித் திட்டங்களில் குறைந்த பொருட்செலவில் பல சாதனைகளை படைத்துள்ளது. அடுத்து நிலவில் இந்தியா சோதனைக் கூடம் நிறுவ உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i1HSgEv

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தை யில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலை யில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வரும் நிறுவனம் இது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ‘இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ்’ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பட்ஜெட் விலை என்றாலும் அசத்தல் அம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Nh5lcgd

தேதி வாரியாக மெசேஜ்களை ஆண்ட்ராய்டு பயனர்கள் தேடும் அம்சம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

படம்
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக மெசேஜ்/சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்கள் பயன்படுத்தி வந்தனர். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iGnNb2o

ஒப்போ F25 புரோ ஸ்மாரட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தை யில் ஒப்போ F25 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வரும் மார்ச் 5-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை சந்தையில் ஆரம்பமாகிறது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் F25 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ‘F’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SeNmvl6