இடுகைகள்

பிப்ரவரி 29 ‘லீப்’ தினத்தைக் கொண்டாட டூடுல் வெளியிட்ட கூகுள்

படம்
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29 லீப் தினத்தைக் கொண்டாடும் வகையில் கூகுள் தேடுபொறி டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 28-க்கும் மார்ச் 1ஆம் தேதிக்கும் இடையே பிப்ரவரி 29ல் ஒரு தவளையின் படத்தை இட்டு அது தாவிவந்து அமர்ந்து சிரிப்பது போல் வடிவமைத்துள்ளது. தவளை தாவிச் செல்லும்போது பிப்ரவரி 29 மறைந்துவிடுகிறது. இந்த அமைப்பு ஒரு குளத்தின் பின்னணியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரியின் இந்த போனஸ் தினத்தைக் கொண்டாடவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் லீப்: ஒரு வருடத்தில் பூமி சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 விநாடிகள். உதிரியாக இருக்கும் மணி நேரம், நிமிடங்கள், விநாடிகளை நான்கால் பெருக்கினால் வருகிற ஒரு நாள்தான் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் லீப் நாள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y78yuLl

Wordpress, Tumblr பயனர் விவரங்களை ஏஐ நிறுவனத்துக்கு விற்க முடிவு

படம்
சான் பிரான்சிஸ்கோ: Wordpress மற்றும் Tumblr போன்ற தளங்களின் தாய் நிறுவனமான ‘ஆட்டோமேட்டிக்’ நிறுவனம், தங்களது பயனர் விவரங்களை ஓபன் ஏஐ, மிட்ஜெர்னி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்த ஏஐ நிறுவனங்கள் பயிற்சி ரீதியான பணிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது. கடந்த 2022-ல் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த டாக் உலக மக்கள் மத்தியில் பரவலானது. ஏஐ டூல்களின் இயக்கத்துக்கு பெரிய அளவிலான டேட்டாக்கள் தேவை. இப்போது வரையில் இந்த டேட்டாக்கள் இணையவெளியில் இருந்து திரட்டப்பட்டு வருகிறது. அதனால் படைப்பாளிகள் மற்றும் பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை தங்களுக்கே தெரிவிக்காமல் ஏஐ நிறுவனங்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NiQctRp

ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஜியோ!

படம்
பார்சிலோனா: இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் ‘மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் - 2024’-ல் இது குறித்த தகவலை குவால்காம் நிறுவன பொது மேலாளர் ( ஹேண்ட்செட்ஸ் ) கிறிஸ் பேட்ரிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கீபேட் மற்றும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள 2ஜி போன் பயனர்களை 5ஜி போன் பயனர்களாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ewkqdSY

‘கோடிங் கற்க வேண்டிய அவசியமில்லை’ - ஏஐ காரணம் அடுக்கும் என்விடியா சிஇஓ

படம்
கலிபோர்னியா: ஏஐ இருப்பதால் யாரும் கோடிங் கற்க வேண்டியதில்லை என என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையினால் யார் வேண்டுமானாலும் புரோகிராமர் ஆகலாம் என தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் உலகின் முதல் நிலை நாடாக திகழ்கிறது என்விடியா. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம். ஆட்டோமேட்டிவ் மற்றும் மொபைல் கம்யூட்டிங் சார்ந்து சிப் உருவாக்கி வரும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 277 பில்லியன் டாலர் அதிகரித்தது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.23 லட்சம் கோடி. இதன் மூலம் சந்தை மதிப்பில் உலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Bk4h7yW

எக்ஸ்-மெயில் வரவை உறுதி செய்த எலான் மஸ்க் | ஜி-மெயிலுக்கு மாற்று!

படம்
சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ்-மெயில் எனும் இ-மெயில் சேவையின் வரவு குறித்து எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் உறுதி செய்துள்ளார். இது கூகுளின் ஜி-மெயிலுக்கு மாற்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் வசூலிப்பது வரையில் அது நீள்கிறது. தொடர்ந்து ட்விட்டரின் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றி இருந்தார். அதோடு பல்வேறு அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகம் செய்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/78nqoBx

iQOO நியோ 9 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தை யில் iQOO நியோ 9 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் மூன்று வேரியண்ட்களில் வெளிவந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். இப்போது இந்திய சந்தையில் iQOO நியோ 9 புரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 சிப்செட்டை இந்த போன் கொண்டுள்ளது. இந்த போனுக்கான விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CNuU0jw

போன் பே-வின் Indus Appstore அறிமுகம்: கூகுள் பிளே ஸ்டோருக்கு போட்டி!

படம்
பெங்களூரு: போன் பே நிறுவனம் Indus Appstore எனும் ஆப்ஸ்டோரினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதில் சுமார் 2 லட்சம் செயலிகள் இடம் பெற்றுள்ளது. 12 இந்திய மொழிகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுளின் பிளே ஸ்டோருக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் அனுப்ப மற்றும் பெற மட்டுமல்லாது கூடுதலாக பல்வேறு சேவைகளை இணையவழியில் வழங்கி வருகின்றன ஃபின்டெக் நிறுவனங்கள். அந்த வகையில் போன்பே நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சினிமா டிக்கெட், ரயில், பேருந்து, விமான டிக்கெட், விடுதி முன்பதிவு, காப்பீடு, ரீசார்ஜ் மற்றும் பில் பேமென்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயனர்கள் இதில் பெற்று வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eEhxFcg