இடுகைகள்

ChatGPT உடன் பேசலாம்: ஓபன்AI அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்

படம்
சான் பிரான்சிஸ்கோ: ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி உடன் பயனர்கள் பேசும் வகையிலான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ. இதன் மூலம் பயனர்கள் மற்றும் சாட்ஜிபிடி சாட்பாட் இடையில் குரல் வழியில் உரையாடல் மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. கடந்த ஆண்டு உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது சாட்ஜிபிடி. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்பாட் உடன் பயனர்கள் உரையாட முடியும். பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் டெக்ஸ்ட் வழியில் பதில் கொடுக்கும் வல்லமை கொண்டது சாட்ஜிபிடி. கதை, கட்டுரை, கவிதை, கம்ப்யூட்டர் புரோகிராம் என அனைத்தையும் இதில் பெறலாம். ஓபன் ஏஐ எனும் நிறுவனம் சாட்ஜிபிடி-யை வடிவமைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YCX52kD

''ஐபோன் 15 மாடல் ஃபோன் அதிகம் ஹீட் ஆகிறது'': பயனர்கள் தகவல்

படம்
சென்னை: அண்மையில் இந்தியா உட்பட உலக நாடுகளில் ஐபோன் 15 சீரிஸ் ஃபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த சூழலில் ஐபோன் 15 மாடல் ஃபோன்கள் அதிகம் சூடாவதாக (Heat) பயனர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆப்பிள் நிறுவன போனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்த சிக்கல், புரோ மாடல்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் அதிகம் எதிர்கொள்வதாக தகவல். இது குறித்த தகவலை ஆப்பிள் ஆன்லைன் ஃபாரம் (Forum), எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். ஃபேஸ் டைம் வீடியோவில் சாட் செய்யும்பொது அல்லது தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது அல்லது கேமிங்கில் ஈடுபடும்போது ஐபோன் 15-ன் பின்புறம் அல்லது பக்கவாட்டு பகுதி ஹீட் ஆவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். பயனர்களில் சிலருக்கு ஃபோனை சார்ஜ் செய்யும்போதும் இந்த சிக்கலை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aV7hl2Z

AI அசிஸ்டென்ட் அம்சம் கொண்ட விண்டோஸ் 11 அப்டேட் அறிமுகம்!

படம்
வாஷிங்டன்: ஏஐ அசிஸ்டென்ட் அம்சம் உட்பட சுமார் 150 புதிய அம்சங்களை கொண்டுள்ள விண்டோஸ் 11 இயங்குதள அப்டேட்டை வெளியிட்டுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இந்த புதிய அப்டேட் பெயிண்ட், போட்டோஸ் போன்ற பில்ட்-இன் செயலிகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிகிறது. உலக அளவில் பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களது கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவி பயன்படுத்துவது வழக்கம். டெஸ்க்டாப் இயங்குதள சந்தையில் 70 சதவீத பங்கை விண்டோஸ் கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் விண்டோஸ் 11 இயங்குதளம் அறிமுகமானது. அவ்வப்போது இந்த இயங்குதளத்தை மைக்ரோசாஃப்ட் அப்டேட் செய்யும். தற்போது அசத்தலான அப்டேட்களை பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/um7hgnK

கூகுள் 25 | சிறப்பு டூடுல் வெளியீடு: டெக் சாம்ராட்டின் கதை!

படம்
கலிபோர்னியா: டெக் உலகின் சாம்ராட் ஆக வலம் வரும் கூகுள் நிறுவனம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நேரத்தில் கால் நூற்றாண்டு காலமாக தங்களுடன் பயணித்தப் பயனர்களுக்கு கூகுள் நன்றி தெரிவித்துள்ளது. கடந்த 1996-ல் முனைவர் பட்ட ஆய்வு பணியாக தொடங்கப்பட்டது கூகுள். லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இணைந்து மேற்கொண்ட முயற்சி அது. வேர்ல்ட் வைட் வெப்பை அக்சஸபிள் இடமாக மாற்றும் நோக்கத்துடன் கூகுள் பயணம் தொடங்கியது. அவர்கள் இருவரும் கூகுள் தேடு பொறியின் மாதிரியை உருவாக்கினர். தொடர்ந்து அவர்கள் அதில் முன்னேற்றம் காண கடந்த 1998, செப். 27-ம் தேதி அன்று கூகுளின் முதல் அலுவலகத்தை நிறுவினர். இன்று ஒட்டுமொத்த உலகமும் இணையத்தில் ஏதேனும் தேடுவது என்றால் நேரடியாக கூகுளை நாடுவது வழக்கம். அந்த அளவுக்கு அதன் பயன்பாடு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mcKNJUn

லாவா பிளேஸ் புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் லாவா பிளேஸ் புரோ 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zl1gSGj

AI சூழ் உலகு 8 | “நான் உங்கள் சேவகர்!” - இப்படிக்கு ஹியூமனாய்டு ரோபோ

படம்
விளக்கை தேய்த்தால் அதிலிருந்து வெளிவரும் பூதம், தனக்கு விடுதலை கொடுத்த மனிதனுக்கு சேவை செய்யும் கதையை நாம் வாசித்திருப்போம். அதேபோல யதார்த்த வாழ்வில் நாம் சொல்லும் பணி அனைத்தையும் சளைக்காமல் செய்யும் பூதம் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருப்போம். அப்படி மனிதர்களின் சேவகனாக இயங்குகின்றன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் கொண்ட ஹியூமனாய்டு ரோபோக்கள். இது மனிதர்களை போலவே தோற்றம் அளிக்கும். இந்த ஹியூமனாய்டு ரோபோக்கள் சிட்டி அளவுக்கு சுட்டியாக இல்லை என்றாலும் கிட்டத்தட்ட அது செய்யும் பணியை செவ்வனே செய்கிறது. மூத்த வயதுடைய நபர்களுக்கு உதவுவது, பெரிய நிகழ்வுகளின் போது ஒரே இடத்துக்கு திரளும் மக்களை கையாள்வது, வாடிக்கையாளர் சேவை, கல்விப் பயன்பாடு, ஆய்வுப் பணிகள் என பல துறைகளில் ஹியூமனாய்டு ரோபோக்கள் இயங்குகின்றன. அதைக் கருத்தில் கொண்டே அதன் வடிவமைப்பாளர்கள் இயங்கி வருகின்றனர். உலக அளவில் இதற்கு பெரிய அளவில் சந்தை வாய்ப்பு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift....

எக்ஸ் பயனர்களுக்கு மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம்: எலான் மஸ்க் திட்டம்

படம்
சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பயனார்களிடத்தில் சிறிய அளவிலான மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எக்ஸ் தளத்தில் பாட்களின் (Bot) இயக்கத்தை தடுக்க முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் வரையில் என அது நீள்கிறது. ட்விட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றி இருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் உடன் பேசி இருந்தார். அப்போது அவரை இதனை தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F2oA6zS