இடுகைகள்

டவடகள மடககச சனன மததய அரசன உததரவகக எதரன டவடடரன வழகக தளளபட சயதத கரநடக ஐகரட

படம்
பெங்களூரு: ஒரு சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்கச் சொன்ன மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு, அரசின் உத்தரவை பின்பற்றாத ட்விட்டருக்கு 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது உயர் நீதிமன்றம். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா, சமூக வலைதளங்களில் கருத்துகளை, பதிவுகளை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். அபராதத் தொகையை 45 நாட்களுக்கு செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வீதம் அபராத தொகையில் கூடும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ot9Aebg

இநதய சலகளல 22 ஆணடகல பயணம: 3 கடககம மறபடட ஆகடவ ஸகடடரகள வறபன!

படம்
சென்னை: இந்திய இருசக்கர வாகன சந்தையில் 22 ஆண்டுகால பயணத்தை கொண்டுள்ளது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். கடந்த 2001-ம் ஆண்டு இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகமானது. அந்த நாள் முதல் இந்த நாள் வரையில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த மைல்கல் சாதனை குறித்த தகவலை ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் பகிர்ந்துள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், டிவிஎஸ் ஜூபிடர், சுசுகி அக்சஸ் மற்றும் பல ஸ்கூட்டர்கள் என விற்பனையில் கடுமையான போட்டியை சமாளித்து வருகிறது ஆக்டிவா. இருந்தாலும் விற்பனையில் வரலாறு படைத்துள்ள இந்த மைல்கல் சாதனை இந்திய ஸ்கூட்டர் வாகன சந்தையில் ஆக்டிவா செலுத்தி வரும் ஆதிக்கத்தை குறிப்பிட்டு சொல்லும் வகையில் அமைந்துள்ளது என ஹோண்டா நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pBP2R4u

உலகன மகபபரய ஐபன: ஐஓஎஸ அமசஙகளடன 8 அட அளவல வடவமதத யடயபர!

படம்
நியூயார்க்: உலகின் மிகப்பெரிய ஐபோனை வடிவமைத்துள்ளார் மேத்யூ பீம் எனும் யூடியூபர். இந்தப் பணியில் அவரது குழுவினர் அவருக்கு உதவியுள்ளனர். ஐஓஎஸ் அம்சங்களுடன் 8 அடி அளவில் இந்த ஐபோனை அவர் வடிவமைத்துள்ளார். தற்போது சந்தையில் கிடைக்கும் ஐபோன்களில் 6.7 இன்ச் கொண்ட ஐபோன் புரோ மேக்ஸ் மாடல் போன்கள் தான் ஆப்பிள் நிறுவன தயாரிப்பின் பெரிய போன்களாக உள்ளன. ஆப்பிள் தரப்பில் மினி சைஸ் போன்களுக்கு கடந்த ஆண்டு ஐபோன் 14 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதே விடை கொடுக்கப்பட்டது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ஐபோனை மேத்யூ பீம் வடிவமைத்துள்ளார். இவர் கடந்த 2020-ல் 6 அடி அளவில் ஐபோனை வடிவமைத்திருந்தார். தற்போது அதனை அவரே தாகர்த்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EPwQfZp

இநதயவல வரம ஜல 5-ம தத அறமகமகறத ஒனபளஸ நரட சஇ 3 ஸமரடபன!

படம்
சென்னை: இந்தியாவில் எதிர்வரும் ஜூலை 5-ம் தேதி ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நார்டின் கோடை கால அறிமுகமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனுடன் ஒன்பிளஸ் நார்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன், நார்ட் பட்ஸ் 2ஆர், BWZ2 ANC என மேலும் மூன்று சாதனங்கள் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wdZqCXb

லததயம-அயன படடர உரவககய ஜன கடஇனஃப கலமனர - சதன நயகனன சரததரம

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9So1QW3

பயனர பதகபப சரநத பதய வதகளகக இணஙக டவடடர மமபட வணடம: ஐரபபய யனயன

படம்
சான் பிரான்சிஸ்கோ: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு தளங்களில் உலாவும் பயனர்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. அந்த வகையில் ஐரோப்பிய யூனியன் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஐரோப்பாவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சு, தவறான தகவலை பகிருதல் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விஷயங்களை கட்டுப்படுத்துவது தான் திட்டம். இந்த புதிய சட்ட விதிக்கு இணங்க முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் தயாராக உள்ளதா என்பதை சரிபார்க்க ஐரோப்பிய யூனியன் உயர் அதிகாரி ஒருவர் சிலிக்கான் வேலியில் முகாமிட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் தளத்தின் சிஇஓ லிண்டா யாக்காரினோ, ட்விட்டர் ஊழியர்களுடன் ஐரோப்பிய யூனியனின் ஆணையர் தியரி பிரெட்டன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு ட்விட்டர் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் எலான் மஸ்க், காணொளி மூலமாக இணைந்துள்ளார். ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் கொள்கையை தியரி பிரெட்டன் மேற்பார்வை செய்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India ...

2000 டமனகள வஙக ஆபச கடசகள மலம சன மசடயளரகள வல: இநதயரகளன தகவல தரடட சத

படம்
புதுடெல்லி: தகவல் திருட்டு, நிதி மோசடியில் ஈடுபடும் சீன இணையதளங்கள், செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து வரும் நிலையில், 4 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டொமைன்களை சீன மோசடியாளர்கள் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் இணைய வழி குற்றங்கள் அல்லது மோசடிஅதிகரித்து வருகிறது. சீனாவைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oaR8elp