இடுகைகள்

மொபைல் போன் மூலம் வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பது எப்படி? Step-by-Step வழிகாட்டி

படம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், எளிதான வழியில் மொபைல் போன் மூலம் அதை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து பாப்போம். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தர வேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில், ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9iuosnO

சமூக வலைதள நிறுவனங்கள் இந்திய சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்புப் பேட்டி

படம்
மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘தி இந்து’ நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, தொலைத்தொடர்பு துறை, செமிகண்டக்டர் தயாரிப்பு, ரயில்வே துறை சார்ந்து மத்திய அரசு கொண்டிருக்கும் திட்டங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார். பேட்டியிலிருந்து…. தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7DVSUzw

இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் | விலை and அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 11SE போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து சற்று விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் நோட் 11SE என்ற போனை அறிமுகம் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SGjvNQZ

2030-க்குள் இந்தியா 6ஜி சேவையை பெற வாய்ப்பு: பிரதமர் மோடி

படம்
புதுடெல்லி: எதிர்வரும் 2030-க்குள் இந்தியாவில் 6ஜி சேவை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனை ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 நிகழ்வில் பேசியபோது அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஏலம் இந்தியாவில் நடைபெற்றது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு இந்த ஏலத்தில் விற்பனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.88 ஆயிரம் கோடிக்கு அலைக்கற்றையை வாங்கி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடபோன் ஐடியா ரூ.18,784 கோடிக்கும் அலைக்கற்றையை வாங்கியதாக தெரிகிறது. இந்த மாத இறுதிக்குள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Tyoc8rw

சிவகங்கையில் குடிநீர் வருவதை அறிய அலாரம் உருவாக்கிய தொழிலாளி

படம்
சிவகங்கையில் நகராட்சி குடிநீர் குழாயில் வருவதை அறிந்து கொள்ளும் வகையில் தொழிலாளி ஒருவர் அலாரம் கண்டுபிடித்துள்ளார். சிவகங்கையில் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் வரும் நேரத்தை அறிந்து குடங்களில் பிடிக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OcWqy9R

இந்தியாவில் ரூ.20,000-க்கு குறைவான பட்ஜெட்டில் கிட்டும் 5ஜி ஸமார்ட்போன்கள் - ஒரு பட்டியல்

படம்
இந்தியாவில் வெகு விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கான பணியில் டெலிகாம் நிறுவனங்கள் பிசியாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவாக பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். இந்த ஸ்மார்ட்டான டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் இருக்கும் என கணித்திருக்கமாட்டார். அந்த அளவிற்கு மாறியுள்ளது செல்போன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Trwoe0h

நம்பி நாராயணனை மிகைப்படுத்தி காட்டியது ‘ராக்கெட்ரி’ - முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் பரபரப்பு பேட்டி

படம்
விண்வெளி திட்டத்தில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் தனிநபர் பங்களிப்பு தொடர்பான சில கூற்றுகளுக்கு, அவருடன் பணியாற்றிய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அண்மையில் நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இஸ்ரோ பயன்படுத்தி வரும் கிரையோஜெனிக் புரோபல்ஷன் (Propulsion) தொழில்நுட்பத்தில் நம்பி நாராயணின் பங்களிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துகளுக்கு விஞ்ஞானிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/18qAzrn