இடுகைகள்

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி GT நியோ 3 ஸ்மார்ட்போன் | விலை and விவரம்

படம்
புது டெல்லி: இந்தியச் சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் GT நியோ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ரியல்மி நிறுவனம். தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை ரியல்மி அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் GT நியோ 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/42sqNGi

ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களமிறங்கிய ஆப்பிள் - விலை and விவரம்

படம்
கலிபோர்னியா: ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களம் இறங்கியுள்ளது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனம். அதன் விவரங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம். ஐபோன், ஐபேட் மாதிரியான டிஜிட்டல் சாதனங்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அதற்காகவே சந்தையில் தனக்கென ஒரு பெயரையும் வாங்கியுள்ளது. தற்போது அதன் புராடெக்ட்டுகளை விரிவுபடுத்தும் நோக்கில் புது முயற்சியாக ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களம் இறங்கியுள்ளது. இதற்காக ஹைட்ரேட் ஸ்பார்க் என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது ஆப்பிள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2FarcBU

இந்தியாவில் அறிமுகமானது iQoo Z6 Pro 5G மற்றும் iQoo Z6 4G ஸ்மார்ட்போன்

படம்
புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது iQoo Z6 Pro 5G மற்றும் iQoo Z6 4G ஸ்மார்ட்போன்கள். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்தும் பார்க்கலாம். சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான iQoo நிறுவனம் அதன் சமீபத்திய வெளியீடாக Z சீரிஸ் வரிசை போனில் iQoo Z6 Pro 5G மற்றும் iQoo Z6 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு போன்களும் மூன்று வேரியண்ட்டுகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் இந்த போன்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OrLnwdg

‘‘இது மஸ்க் ட்விட்டர்’’- மாறும் விதிமுறைகள்; வரப்போகும் மாற்றங்கள் என்ன?- எப்படி பணம் திரட்டுகிறார் எலான் மஸ்க்

படம்
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கும் நிலையில் அதற்கான நிதி, வருவாயை எப்படி திரட்டப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுபோலவே ட்விட்டர் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு பதிலாக கட்டணம் விதிக்கும் நடைமுறையை அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N4u3hJz

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோமேக்ஸ் IN 2c ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

படம்
புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் IN 2c ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து, சந்தையில் விற்பனை மேற்கொண்டு வருகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். மலிவு விலையில் கீபோர்டு (Feature) போன்களை உற்பத்தி செய்து கவனம் ஈர்த்த நிறுவனம். கால ஓட்டத்தில் சீன நிறுவன ஆதிக்கத்தால் சந்தை வாய்ப்பை கொஞ்சம் இழந்தது. இருந்தும் தொடர்ச்சியாக அவ்வப்போது புதிய மாடல் போன்களை மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0krojAc

'பேச்சு சுதந்திரம் என்பது?' - விளக்கம் கொடுத்துள்ள எலான் மஸ்க்

படம்
டெக்சாஸ்: ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்குகிறார் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க். இந்நிலையில், பேச்சு சுதந்திரம் என்றால் என்னவென்பது குறித்தும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். உலக அளவில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். இந்த தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார் எலான் மஸ்க். அந்த செய்தி உறுதியானது முதல் ட்விட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சு அதிகரிக்கக்கூடும் என தங்களது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர் மனித உரிமை ஆர்வலர்கள். ஏனெனில் 'பேச்சு சுதந்திரத்தை விரும்புபவன் நான்' என வெளிப்படையாகவே மஸ்க் சொன்னது தான் இதற்கு காரணம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CUheqMZ

மஸ்க் வசமான ட்விட்டர் | 'நான் ட்விட்டருக்குத் திரும்ப மாட்டேன்' - ட்ரம்ப்

படம்
புளோரிடா: மீண்டும் நான் ட்விட்டருக்குத் திரும்ப மாட்டேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கும் நிலையில் இதனை ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்விட்டர் சமூக வலைதளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன மஸ்க். இந்த செய்தி உறுதியானது முதலே அமெரிக்காவின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் அவரிடம் ஒரு கோரிக்கை வைத்து வருகின்றனர். அது அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சார்ந்தவருமான் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9G4uLVZ