இடுகைகள்

ஓட்டுநர்கள் கண்ணயர்ந்தால் எச்சரிக்கும் கருவி: நாக்பூர் ஓட்டுநர் புதிய கண்டுபிடிப்பு

படம்
நாக்பூர்: வாகனங்களை இயக்கும்போது, ஓட்டுநர்கள் தங்களை மீறி கண்ணயர்ந்தால் அதனைத் தடுக்கும் அலாரத்தை நாக்பூர் ஓட்டுநர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பலநேரங்களில் ஓட்டுநர்கள் தங்களைமீறி கண்ணயர்ந்துவிடுவதும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக நாக்பூரைச் சேர்ந்த கவுரவ் சவ்வாலாகே ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். வண்டிஓட்டும்போது ஓட்டுநர்களின் உறக்கத்தைத் தடுக்கும் அலாரமாக அது செயல்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nRk5bcq

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - 54 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

படம்
புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 54 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இதன்படி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான முறையான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஸ்வீட் செல்பி ஹெச்டி, பியூட்டி கேமிரா, மியூசிக் பிளேயர், மியூசிக் பிளஸ், வால்யூம் பூஸ்டர், வீடியோ பிளேயர்ஸ் மீடியா, விவா வீடியோ எடிட்டர், நைஸ் வீடியோ பைடு, ஆப்லாக், ஆன்மையோஜி செஸ், ஆன்மையோஜி அரேனா, எம்பி3 கட்டர், பார்கோடு ஸ்கேனர், நோட்ஸ், யுயு கேம் பூஸ்டர், கரீனா ப்ரீபயர், பேட்லேண்டர்ஸ், விங்க், ரியல் லைட் மற்றும் அஸ்ட்ராகிராப்ட் ஆகிய செயலிகளும் இதில் அடங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xd8JAr0

பகுதி 1: குவாண்டம் தகவல் தொடர்பு: இஸ்ரோவின் முன்னோடி சோதனை வெற்றி

படம்
வங்கியிலிருந்து அனுப்பப்படும் புத்தாண்டு வாழ்த்து மின்னஞ்சலை உடனே பார்த்து விடலாம். ஆனால் வங்கியிலிருந்து மின்னஞ்சலில் வரும் உங்களது மாதாந்திர கணக்கு ஆவணத்தை பாஸ்வேர்டு (கடவு சொல்)இல்லாமல் உங்களால் திறக்க முடியாது.அதிலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பிரத்யேக பாஸ்வேர்டு இருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்ததகவல், மூன்றாம் மனிதருக்கு செல்லாமல் தடுக்க பல தகவல் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. தொழில் துறை, பொருளாதாரம், நிர்வாகம், தகவல் பரிமாற்றம், கல்வி,மருத்துவம், பொழுதுபோக்கு என உலகம் முழுவதும் ‘இணைய நெடுஞ்சாலைகளில்’ பின்னப்பட்டு சிந்தனையின் வேகத்தில் விரிவடையும் இக்காலகட்டத்தில், உணவு, உறைவிடம் போல பாதுகாப்பான தகவல் தொடர்பு என்பது அடிப்படைத் தேவையாக மாறிவிட்டது.இந்தப் பின்புலத்தில், இந்தியாவில் ஒரு முன்னோடி முயற்சியாக பாதுகாப்பான தகவல் தொடர்புக்காக ஜனவரி 27-ம் தேதி இஸ்ரோ நடத்திய தொழில்நுட்ப சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமி...

இறுதிகட்டத்தை எட்டியது 5ஜி நெட்வொர்க்: மத்திய அமைச்சர் தகவல்

படம்
புதுடெல்லி: 5ஜி நெட்வொர்க் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்திய தொலைதொடர்பு துறையினர் தகுதிவாய்ந்த வெளிநாட்டு கொள்முதலாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக, 'இந்தியா டெலிகாம் 2022' எனும் பிரத்யேக சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று தொடங்கியது. இந்திய அரசின் வர்த்தகத் துறையின் சந்தை அணுகல் முன்முயற்சி திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்புத் துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் 2022 பிப்ரவரி 8 முதல் 10 வரை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EjRgbyk

8 ஆண்டுகளுக்கு பின் லோகோவை மாற்றிய கூகுள் குரோம்

படம்
கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது. கூகுள் நிறுவனம் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, தனது குரோம் லோகோவை மாற்றியுள்ளது. லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இதில் உள்ள சிகப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களின் சேர்க்கை சற்று அதிகப்படுத்தப்பட்டு நிழல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக லோகோ அதிக மாற்றங்கள் இன்றி அதேசமயம் நேரலை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KDWPQVX

கிருமிநாசினித் திறனுடன் மக்கும் மாஸ்க்குகளை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகள்

படம்
கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக கிருமிநாசினித் திறன் கொண்ட, மக்கும் முகக்கவசங்களை (மாஸ்க்) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்காக, தாமிரத்தை அடிப்படையாகக் கொண்ட நானோ துகள்கள் பூசப்பட்ட வைரஸ் எதிர்ப்பு முகக் கவசத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு, தொழில்துறையை சேர்ந்த நபர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. கரோனா வைரஸ், பல்வேறு இதர வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக உயர் செயல்திறனை இந்த முகக்கவசம் கொண்டுள்ளது. மக்கும் திறன் கொண்ட இந்த முகக்கவசம், நல்ல முறையில் சுவாசிப்பதற்கான வசதியைக் கொண்டது மற்றும் சலவை செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0LwVKn4

கரன்சி முதல் பல்கலை. வரை - மத்திய பட்ஜெட் 2022-ல் கவனிக்கத்தக்க 'டிஜிட்டல்' முன்னெடுப்புகள்

படம்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2022-23-ல் கரன்சி முதல் பல்கலைக்கழகம் வரை பல்வேறு டிஜிட்டல் சார்ந்த முன்னெடுப்புகள் இடம்பெற்றிருந்தன. அவற்றின் முக்கிய அம்சங்கள் இங்கே... டிஜிட்டல் கரன்சி: பிளாக் செயின் மற்றும் இதர தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும். இதனை இந்திய ரிசர்வ் வங்கி 2022-23ல் இருந்து வழங்கத் தொடங்கும். மத்திய வங்கி டிஜிட்டல் ரூபாய் (CBDC) அறிமுகப்படுத்தப்படும் என்பது டிஜிட்டல் பொருளாதாரம் பெருமளவில் வளர உதவியாக இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0jELTd2FG