இடுகைகள்

ரூ.52 லட்சம் மதிப்பு குதிரை; ரூ.9 லட்சம் மதிப்பிலான 4 பூனைகள்; நடிகை ஜாக்குலினுக்கு பரிசளித்த சுகேஷ்: அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தகவல்

படம்
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின்பெர்னாண்டஸுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையையும், ரூ.9 லட்சம் மதிப்புள்ள 4 பூனைகளையும் பரிசாக வழங்கியதாகஅமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோர், ரூ.2000 கோடி பணமோசடி வழக்கில் 2019-ம் ஆண்டுகைது செய்யப்பட்டனர். அந்தவழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதாகக் கூறிய சுகேஷ் சந்திரசேகர், அவ்விருவரின் மனைவிகளிடமிருந்து ரூ.200 கோடி பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரதுமனைவி லீனா மரியா பால் உட்பட8 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Ggnk5g

விரைவில் ராணுவத்திடம் ஒப்படைப்பு; ட்ரோன் அழிப்பு தொழில்நுட்பம் இந்தியாவில் தயாராகிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

படம்
ட்ரோன்களை அழிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் தயாராகி வருவதாகவும் அவை விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் எல்லை பாதுகாப்புப் படையினரின் 57-வது எழுச்சி தின விழாவில் பங்கேற்ற அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/332gnq6

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 21 ஆகஅதிகரிப்பு: ராஜஸ்தானில் 9 பேர், மகாராஷ்டிராவில் 7 பேர் கண்டுபிடிப்பு

படம்
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மகாாஷ்டிராவில் 7 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். ெதன் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் பல்ேவறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31n6KC0

சிலர் சுய விளம்பரத்துக்காக ஆட்சியர் மீது குற்றம்சாட்டுகின்றனர்: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி விமர்சனம்

படம்
சிலர் சுய விளம்பரத்துக்காகவும், இருப்பைக் காட்டிக் கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் மீது குற்றம் சாட்டுவதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றஅவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‘‘மணத்தட்டை ஊராட்சி மன்ற செலவினங்களுக்கு மாவட்ட நிர்வாகம் போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறி, மன்ற அலுவலகத்தை ஊராட்சித் தலைவர் பூட்டி, அதன் சாவியை ஒன்றிய ஆணையரிடம் ஒப்படைத்துள்ளாரே?’’ என செய்தியாளர்கள் கேட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oklc6d

ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்தபோது அதிமுக அலுவலகத்தில் 2-வது நாளாக நடந்த தாக்குதல் சம்பவத்தால் சலசலப்பு

படம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது, 2-வது நாளாக நேற்றும் அதிமுக அலுவலகத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்களால் பரபரப்பான நிலை காணப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3-ம் தேதி தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் நேற்று காலை மனு தாக்கல் செய்தனர். அவர்கள் போட்டியிட வேண்டி 150-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர். ஓபிஎஸ், இபிஎஸ் மனு தாக்கல் செய்து முடித்தபோது, அதிமுக அலுவலக நுழைவுவாயில் அருகே ஒருவரை தொண்டர்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, அங்கு இருந்த காவலர்கள் அவரை அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Dt6bmS

கர்நாடகாவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதிர் காதலர்

படம்
திருமணத்தின் மூலம் கட்டமைக்கப்படும் குடும்ப அமைப்பு 21-ம் நூற்றாண்டில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் விவகாரத்துகள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில், முதுமையின் முற்றத்தில் இருக்கும் இருவர் இல்லற வாழ்வில் இணைந்திருப் பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹொளேநர சிப்புராவைச் சேர்ந்தவர் சிக்கண்ணா (65). தினக்கூலியான இவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவில் உள்ள தனது அத்தை மகள் ஜெயம்மாவை (60) நேசித்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலித்த நிலையில், ஜெயம்மாவின் பெற்றோர் பொருளாதார காரணங்களால் சிக்கண்ணாவை நிராகரித்தனர். மேலும் ஜெயம்மாவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ள‌னர். அந்த திருமண வாழ்வு சரியாக அமையாததால், 4 ஆண்டுகளுக்கு பின் ஜெயம்மா தன் கணவரை பிரிந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3G9IxgU

நவீன ஏகே-203 ரக துப்பாக்கிகள் உ.பி.யில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

படம்
உத்தரப் பிரதேசத்தின் அமேதிதொகுதியில் கோர்வா எனுமிடத்தில் அமைந்துள்ள அரசு துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையில், நவீன ஏகே-203 ரக துப்பாக்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. இங்கு அதிக திறன் மிக்க 5 லட்சம் துப்பாக்கிகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இந்தியாவின் சுயசார்பு கொள்கையின் வெளிப்பாடாக அமையும் என்றும்அரசு வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xT0D46