இடுகைகள்

ம.பி.யில் ரூ.120-ஐ கடந்தது பெட்ரோல் விலை

படம்
மத்திய பிரதேசத்தில் ஒரு சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.120-ஐ கடந்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் அனுப்பூர் மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.120-ஐ கடந்தது. டீசல் ரூ.110-ஐ நெருங்கிவிட்டது. சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைகளை ஒட்டி இருக்கும் பலகாட் மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.119.23 ஆக உள்ளது. மத்தியபிரதேசத்தில் சில மாவட்டங்களில் ஏன் இந்த கடும் விலை உயர்வு என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CoM9tX

விவசாயிகள், தொழில் துறைக்கு ஆதரவானது பாஜக அரசு: முதலீட்டாளர் மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கருத்து

படம்
பாஜக தலைமையிலான மத்தியஅரசு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தொழில் துறைக்குச் சாதகமாகவும் செயல்படும் அரசு எனமத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மருந்தகங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையின் வாய்ப்புகள் குறித்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jLAFtp

கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியது

படம்
கர்நாடக மாநிலத்தில் 2 வாரங்களாக குடகு மாவட்டத் திலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து மண்டியா மாவட்டம் ரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் உயர்ந்ததால், தமிழகத்துக்கு வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 124.10 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 19 ஆயிரத்து 750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 6,550 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ள‌து. அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து காவிரி நீர்ப்பாசன துறை அதிகாரிகளும், விவசாயிகளும் நேற்று பூக்களைத் தூவி வணங்கினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Zy6uic

காந்தியவாதி சுப்பாராவ் காலமானார்

படம்
புகழ்பெற்ற காந்தியவாதியான சேலம் நஞ்சுண்டையா சுப்பாராவ் (93) பெங்களூருவில் 1929-ம் ஆண்டு வழக்கறிஞர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். காந்தி சாகித்ய சங்கா என்ற பெயரில் சமூக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். சட்டப் படிப்புக்கு பிறகு 1951-ல் காங்கிரஸ் சேவா தளத்தில் இணைந்தார். நேரு, காமராஜர் உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தார். ம.பி. சம்பல் பள்ளத்தாக்கில் காந்தி சேவா ஆசிரமம் தொடங்கி கொள்ளையர்களுடைய குடும்பங்களின் மறுவாழ்வுக்காக பாடுபட்டார். இந்நிலையில், காந்தியவாதி எஸ்.என்.சுப்பாராவ் (93) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவமனையில் நேற்று காலை காலமானார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3w7i4x3

உ.பி.யில் கரோனா ஊரடங்கில் பதிவான மூன்று லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுகிறது பாஜக அரசு

படம்
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் உ.பி.யிலும் பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருந்தது. இதை மீறியவர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்த வழக்குகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவற்றை வாபஸ் பெற உ.பி. அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி, எம்எல்ஏ.க்கள் மற்றும் எல்எல்சி.க்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதில்லை என முடிவாகி உள்ளது. இதுகுறித்து உ.பி. அரசின் நீதித்துறை முதன்மைச் செயலாளர் பிரமோத் குமார் ஸ்ரீவாத்ஸவா கூறும்போது, “பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 188, 269, 270, 271 ஆகிய பிரிவுகள் மற்றும் தொற்றுநோய் சட்டத்தின் 188, 269, 270, 271 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற உள்ளோம். இவற்றில் குற்றப்பத்திரிகை பதிவான வழக்குகளில் அவற்றை அரசு வழக்கறிஞர்கள் வாபஸ் பெறுவார்கள்” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3moXqFc

ராம்குமார் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்: மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் விளக்கம்

படம்
ராம்குமார் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் ஆஜராகி, தான் அளித்த அறிக்கை குறித்து விளக்கம் அளித்தார். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அலுவலகம் செல்வதற்காகக் காத்திருந்த மென்பொறியாளர் சுவாதி 2016-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி காலை 6.30 மணியளவில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (22) என்ற இளைஞரைக் கைது செய்தனர். புழல் சிறையில் ராம்குமார் அடைக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XX4X4M

திருப்பூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கிய விவகாரம்: சத்துணவு அமைப்பாளர் தற்காலிகப் பணியிடை நீக்கம்

படம்
திருப்பூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கிய விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சத்துணவு அமைப்பாளரைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 18-வது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, கடந்த 26-ம் தேதி சத்துணவு அமைப்பாளர் மூலம் முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vVyEQf