ம.பி.யில் ரூ.120-ஐ கடந்தது பெட்ரோல் விலை
மத்திய பிரதேசத்தில் ஒரு சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.120-ஐ கடந்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் அனுப்பூர் மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.120-ஐ கடந்தது. டீசல் ரூ.110-ஐ நெருங்கிவிட்டது. சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைகளை ஒட்டி இருக்கும் பலகாட் மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.119.23 ஆக உள்ளது. மத்தியபிரதேசத்தில் சில மாவட்டங்களில் ஏன் இந்த கடும் விலை உயர்வு என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CoM9tX